இன்னும் கொஞ்ச நாள் தான்... தமிழ்நாட்டில் தயாராக போகும் பைக்குகள்-னு சொன்னா நம்பவே முடியல!!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக குறுகிய காலத்தில் அபரிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துவரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விரைவில் எலக்ட்ரிக் பைக்குகளையும் விற்பனை செய்ய துவங்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகளுடன், ஓலா எலக்ட்ரிக் பைக்குகளின் படங்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்ட நிலையில், ஓலா எலக்ட்ரிக் பைக் தொடர்பான புதியதொரு அப்டேட்டை நிறுவனத்தின் சிஇஓ வெளியிட்டுள்ளார். அது என்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் கடந்த பல வருடங்களாக பல்வேறு நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. ஆனால், 2021ஆம் ஆண்டில் மார்க்கெட்டில் நுழைந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் குறுகிய காலத்தில் இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அதாவது, பெட்ரோலில் இயங்கும் 2-வீலர்களை சேர்த்து, அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் டாப்-10 நிறுவனங்களுள் ஒன்றாக ஓலா எலக்ட்ரிக் விளங்குகிறது.

இத்தனைக்கும், எஸ்1 என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அடுத்து புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய ஓலா முயற்சிக்கும் என பார்த்தால், எலக்ட்ரிக் பைக்குகளின் மீது இந்த நிறுவனத்தின் கவனம் விழ ஆரம்பித்துள்ளது. இதன்படி, சில மாதங்களுக்கு முன்பு தனது புதிய எலக்ட்ரிக் பைக்குகளை கண்காட்சி ஒன்றில் ஓலா எலக்ட்ரிக் காட்சிப்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் எலக்ட்ரிக் பைக்குகளின் அறிமுகம் குறித்து புதிய அப்டேட் ஒன்றை படங்களுடன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், "நேற்று எங்கள் தொழிற்சாலைகளில் ஓர் உற்சாகமான நாளை கழித்தோம்! விரைவில் வரவிருக்கும் மோட்டார்சைக்கிளுக்கு ஏற்ப ஃபியூச்சர் ஃபேக்ட்ரி அளவிடப்பட்டு வருகிறது. மேலும், ஜிகா ஃபேக்ட்ரி வணிக உற்பத்திக்கு நெருங்கி வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ் பதிவில், தொழிற்சாலைகளுக்குள் பணியாளர்களுடன் உரையாடும்போது எடுத்துக் கொண்ட படங்களை பாவிஷ் அகர்வால் பகிர்ந்துக் கொண்டுள்ளார். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் நம் தமிழ்நாட்டில் ஓசூரில் அமைந்துள்ளன. ஓலா எலக்ட்ரிக்கின் ஃபியூச்சர் ஃபேக்ட்ரி ஏற்கனவே கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த நிறுவனத்தின் புதிய ஜிகா ஃபேக்ட்ரி உற்பத்தி பணிகளுக்கு தயாராகி வருகிறது.
ஜிகா ஃபேக்ட்ரியில் ஓலா எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. ஃபியூச்சர் ஃபேக்ட்ரியில் எலக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தி செய்யப்பட உள்ள பகுதிகளை பார்வையிட்டுள்ள சிஇஓ பாவிஷ் அகர்வால், முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே செயல்படும் பகுதிகளையும் பார்வையிட்டதோடு, அவர்களுடன் சிறிதுநேரம் கலந்துரையாடி உள்ளார்.

ஓலா எலக்ட்ரிக்கின் அபரிதமான வளர்ச்சிக்கு மத்தியில், இந்த நிறுவனத்தை சுற்றி எப்போதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வகையில் சமீப காலமாக, வாகனத்தை வாங்கிய பின் ஓலா வழங்கும் சேவையில் இருக்கும் தொய்வுகள் கஸ்டமர்களால் குற்றச்சாட்டுகளாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், இந்தி காமெடி நடிகர் ஒருவர் கூட இதுகுறித்த தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் வீடியோ உடன் தெரிவித்து இருந்தார்.
இதற்கு ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வாலும் பதிலுக்கு கருத்துகளை தெரிவிக்க, அது சில நாட்களுக்கு எக்ஸ் தளத்தில் வைரலாக சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் ஓலா கஸ்டமர்கள் பலரும் காமெடி நடிகரின் பக்கம் நின்றனர். இதன் மூலம் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட காமெடி நடிகர், தொடர்ந்து ஓலா எலக்ட்ரிக்கின் ஆஃப்டர்-சேல்ஸ் சேவையை விமர்ச்சிக்கும் விதமான பதிவுகளை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு ஒருபக்கம் கஸ்டமர்களிடம் இருந்து எப்போதும் குற்றச்சாட்டுகள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், அவற்றை எல்லாம் சரிச்செய்துக் கொண்டே தனது அடுத்தடுத்த திட்டங்களையும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. எலக்ட்ரிக் பைக்குகளின் அறிமுகம் தொடர்பாக நேரடியாக பாவிஷ் அகர்வால் தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளதால், ஓலா எலக்ட்ரிக் பைக்குகளின் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








