பாரத் 4680 செல்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது ஓலா இ-ஸ்கூட்டர்கள்.. தீ பிடிக்கும் என்கிற பயமே வேணாம்!!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், ஆகஸ்டு 15 ஆம் தேதியை சிறப்பிக்கும் விதமாக இந்தியாவில் தன்னுடைய புதிய தயாரிப்புகள் சிலவற்றை அன்றைய தினம் அறிமுகப்படுத்தியது. அதாவது, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தன்னுடைய புதிய படைப்புகளை அது அந்நாளில் அறிமுகம் செய்திருந்தது. அவ்வாறு நிறுவனம் அந்த நாளில் அறிமுகம் செய்ததில் ஒன்றே 'பாரத் 4680 செல்' (Bharat 4680 Cell) ஆகும். தன்னுடைய மின்சார வாகனங்களுக்கான பேட்டரி பேக் (Battery Pack)-கில் பயன்படுத்தப்படுவதற்காக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே உள்நாட்டில் வைத்து தயாரித்த ஓர் செல்-லே இது ஆகும்.
இந்த பேட்டரி பேக்கை எந்த வாகனத்தில் முதலில் ஓலா எலெக்ட்ரிக் பயன்படுத்தும் என்பதே பலரின் கேள்விக் குறியாக இருந்து வந்தது. ஏனெனில் அதிக செயல் திறன் மற்றும் அதிக ஆற்றலை கொண்டதாகவே இந்த பேட்டரி பேக்கை ஓலா எலெக்ட்ரிக் தயார் செய்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே, ஓலா எலெக்ட்ரிக் இந்த அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கிய செல்களை ஜிக் (Gig) மற்றும் எஸ்1 இசட் (S1 Z) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களிலேயே முதல் முறையாக பயன்படுத்த இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த தகவலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ-ஆன பவிஷ் அகர்வால்-லும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
தன்னுடைய 'எக்ஸ்' வலைதள பதிவின் வாயிலாகவே இந்த தகவலை அவர் உறுதிச் செய்திருக்கின்றார். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சமீபத்திலேயே இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இரண்டும் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் ஆகும்.
இதில், ஜிக் டெலிவரி சேவைப் பிரிவை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதனை இரண்டு விதமான தேர்வுகளில் வழங்க இருக்கின்றது, ஓலா எலெக்ட்ரிக். இதேபோல், எஸ்1 இசட் மாடலையும் இரண்டு விதமான தேர்வுகளிலேயே நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது அந்நிறுவனம்.
இதில் ஒன்று டெலிவரி சேவைக்கானதாகவும், மற்றொன்று தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படும் வகையிலும் தயார் செய்யப்பட்டு இருக்கும். டெலிவரி பிரிவிற்கான தேர்வுகள் அனைத்திலும் 'கேரியர்' வசதி வழங்கப்பட்டு இருக்கும். பொருட்களை ஏற்றிச் செல்ல ஏதுவாகவே அந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டன.
அடுத்த ஆண்டே இதன் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றன. ஜிக் மாடலின் டெலிவரி பணி ஏப்ரலிலும், எஸ்1 இசட் மாடலின் டெலிவரி பணி மே மாசத்திலும் தொடங்கப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டே இப்போது ரூ. 499 முன் தொகையில் ரிசர்வேஷனை ஏற்று வருகின்றது, ஓலா எலெக்ட்ரிக்.
ஜிக், இதுவே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதன் ஆரம்ப நிலை தேர்வான ஜிக் ரூ. 39,999க்கும், ஜிக் பிளஸ் (Gig +) ரூ. 49,999க்கும் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. முதல் ஒன்றில் 1.5 kWh திறன் கொண்ட ஒரு பேட்டரி பேக்கும், இரண்டாவது தேர்வில் இதே திறன் கொண்ட பேட்டரி பேக் இரண்டு வழங்கப்பட்டு இருக்கும்.
மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 45 ஆகும். ஆனால், ஆரம்ப நிலை தேர்வான ஜிக்-இன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். ஓர் முழு சார்ஜில் 81 கிமீ முதல் 157 கிமீ வரையில் இந்த ஜிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரேஞ்ச் தரும்.
ஓலா எஸ்1 இசட்-ம் இரண்டு விதமான தேர்வுகளில் வழங்கப்படுகின்றன. இரண்டிலும் ஒற்றை பேட்டரி பேக் அல்லது இரட்டை பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 1.5 kWh பேட்டரி பேக்கே எஸ்1 இசட் மற்றும் எஸ்1 இசட் பிளஸ் ஆகிய இரண்டு தேர்வுகளிலும் வழங்கப்படுகின்றன.
இந்த பேட்டரி பேக் இரண்டு வேண்டும் என்றால் இரண்டாகவும், ஒன்றே போதும் என்றால் ஒன்றை மட்டுமே இருக்கக் கூடியதாக வாங்கிக் கொள்ள முடியும். இதில் ஒற்றை பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்வில் ஓர் முழு சார்ஜில் 75 கிமீ ரேஞ்சையும், இரண்டு பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்வில் 146 கிமீ ரேஞ்சையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு ரூ. 59,999 மற்றும் 64,999 ஆகிய விலைகளே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றன. இது ஒற்றை பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இத்தகைய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலிலேயே ஓலா எலெக்ட்ரிக் தன்னுடைய புதிய தயாரிப்பான பாரத் 4680 பேட்டரி பேக்கை பயன்படுத்த இருக்கின்றது.
இது ஓர் அதிக அடர்த்தி கொண்ட பேட்டரி பேக் ஆகும். மிக நீண்ட ஆயுட்காலம் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் இதனை ஓலா எலெக்ட்ரிக் தயார் செய்திருக்கின்றது. முக்கியமாக 10 டிகிரி செல்சியஸ் முதல் 70 டிகிரி செல்சியஸிலும் இது மிக சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
மேலும், இந்த லித்தியம் அயன் பேட்டரி பேக் 1,000க்கும் அதிகமான முறை சார்ஜிங் செய்தாலும் அது திறம்பட செயல்படுமாம். மேலும், தீ விபத்துக்கு அவ்வளவு சீக்கிரம் இந்த பேட்டரி ஆளாகாது என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, மிக வேகமாகவும் இதை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இத்தகைய பேட்டரி பேக்கையே தன்னுடைய விலை குறைவான ஸ்கூட்டர்களில் பயன்படுத்த இருப்பதாக ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், கடந்த நவம்பர் மாதத்தில் சற்றே அது சரிவைச் சந்தித்து இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய புதிய அட்வான்ஸ்டு பேட்டரி பேக்கை வரவிருக்கும் மலிவு விலை எலெக்ட்ரிக் டூ-வீலர்களில் பயன்படுத்த அது திட்டமிட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








