முதல் இ-பைக்கின் விலையை அறிவித்த ஓலா! இனி ஸ்பிளெண்டர், பிளாட்டினா சேல்ஸான மாதிரிதான்.. 80,000 ரூபாக்கும் கம்மி
78 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினத்தில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், தன்னுடைய எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)-ஐ அறிமுகம் செய்வதாக அறிவித்து இருந்தது. இதன்படி நிறுவனம் இன்று (ஆகஸ்டு 15) தன்னுடைய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ரோட்ஸ்டர் (Roadster) எனும் பெயரிலேயே அதன் எலெக்ட்ரிக் பைக்கை நாட்டில் அறிமுகம் செய்து உள்ளது, ஓலா எலெக்ட்ரிக். மிகவும் அசத்தலான வடிவமைப்பைக் கொண்டதாக இந்த இ-பைக் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் 3 விதமான தேர்வுகளில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும்.
ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X), ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro) ஆகியவையே அவை ஆகும். நிறுவனம் சங்கல்ப் 2024 (Sankalp 2024) எனும் நிகழ்ச்சியின் வாயிலாகவே இந்த எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுதவிர, வேறு சில எலெக்ட்ரிக் பைக் மாடல்களையும் இந்த நிகழ்வின் வாயிலாக ஓலா எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தியது.

அத்துடன், பாரத் 4680 செல் மற்றும் பேட்டரி பேக், புதிய ஜென் 3 பிளாட்பாரம் மற்றும் மூவ்ஓஎஸ்5 (MoveOS5) ஆகியவற்றையும் இன்றைய தினத்தில் ஓலா எலெக்ட்ரிக் நாட்டில் அறிமுகப்படுத்தியது. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடிய ரோட்ஸ்டர் பைக் மாடலின் அறிமுகம் அமைந்திருக்கின்றது.
மிக மிக குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதே இதற்கு கராணம் ஆகும். ரூ. 74,999 என்கிற ஆரம்ப விலையிலேயே ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கிடைக்கும். எனவே இதன் வருகை மற்ற எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு மட்டுமல்ல ஸ்பிளெண்டர் மற்றும் பிளாட்டினா போன்ற விலை குறைவான பெட்ரோல் பைக்குகளுக்கு போட்டியாக அமையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரோட்ஸ்டர் எக்ஸ் வேரியண்டின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் விபரம்: இதுவே ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் பைக் மாடலின் விலை குறைவான வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்டை மூன்று விதமான விருப்ப தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். 2.5 kWh அல்லது 3.5 kWh அல்லது 4.5 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளிலேயே இந்த வேரியண்டை வாங்கிக் கொள்ள முடியும்.
இதில், 2.5 kWh பேட்டரி பேக்கே விலை குறைவான தேர்வாகக் காட்சியளிக்கின்றது. இதற்கே ரூ. 74,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இதற்கு அடுத்தபடியாக 3.5 kWh பேட்டரி பேக் தேர்வு இருக்கின்றது. இதற்கு ரூ. 84,999 விலை நிர்ணயம் செய்யப்ப்டடு உள்ளது.
கடைசி தேர்வான 4.5 kWh-க்கு ரூ. 99,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 124 கிமீ ஆகும். மேலும, இதனால் வெறும் 2.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இதுதவிர, கூடுதல் சிறப்பம்சங்களாக இந்த தேர்வில் 4.3 அங்குல எல்சிடி திரை, மூவ் ஓஎஸ்5 உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் மேப் வசதி, அட்வான்ஸ்டு ரீஜென், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை இந்த வேரியண்டில் காண முடியும்.
இவற்றுடன், பன் முக ரைடிங் மோட்கள் (ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈகோ) டிஐஒய் (DIY) மோட், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், ஓடிஏ அப்டேட் என ஏகப்பட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, டிஜிட்டல் சாவி மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆப் இணைப்பு வசதி உள்ளிட்டவற்றையும் ஓலா எக்ஸ் வேரியண்டில் பெற்றுக் கொள்ள முடியும்.
இவற்றுடன் பாதுகாப்பான பயண அனுபவத்தைப் பெற்றும் கொள்ளும் விதமாக டிஸ்க் பிரேக்குடன் கூடிய சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பிரைக் பை ஒயர் டெக்னாலஜி ஆகியவையும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. எனவே, தொழில்நுட்பம், பாதுகாப்பான ரைடு என அனைத்திலும் மிக சிறந்த தேர்வாக இந்த விலை குறைவான வேரியண்ட் இருக்கும் என தெரிகின்றது.
ரோட்ஸ்டர் தேர்வின் சிறப்புகள் மற்றும் விலை விபரங்கள்: ரோட்ஸ்டர் எக்ஸ் வேரியண்டைப் போலவே இந்த வேரியண்டிலும் பன்முக பேட்டரி பேக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அவை ரோட்ஸ்டர் எக்ஸ் வேரியண்டில் இருப்பதைக் காட்டிலும் அதிக பவர்ஃபுல்லான பேட்டரி பேக் தேர்வுகள் ஆகும்.
அந்தவகையில், 3.5 kWh, 4.5 kWh மற்றும் 6 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளே ரோட்ஸ்டர்-இல் வழங்கப்படுகின்றன. இதில், 3.5 kWh பேட்டரி பேக்கைக் கொண்ட ரோட்ஸ்டர் ரூ. 1,04,999-க்கும், 4.5 kWh பேட்டரி பேக்கைக் கொண்ட ரோட்ஸ்டர்-க்கு ரூ. 1,19,999-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதேசமயம், 6 kWh பேட்டரி பேக் தேர்விற்கு அதிகபட்ச விலையாக ரூ. 1,39,999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். விலை மற்றும் பேட்டரி பேக் திறனில் மட்டுமல்ல எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பிற விஷயங்களிலும ஒரு படி மேலேயே ரோட்ஸ்டர் எக்ஸ்-ஐவிட சிறந்தததாக ரோட்ஸ்டர் காட்சியளிக்கின்றது.
அந்தவகையில், இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வெறும் 2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 126 கிமீ வேகம் ஆகும். மேலும், அதிகபட்சமாக இதில் ஓர் முழு சார்ஜில் 248 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும்.
6 kWh பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்விலேயே இந்த அதிகபட்ச ரேஞ்ஜைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. சிறப்பம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் இந்த வேரியண்ட் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 6.8 அங்குல டிஎஃப்டி தொடுதிரை இந்த வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும். இந்த திரை ஸ்மார்ட் வசதிகள் பலவற்றை தன்னுள் தாங்கி இருக்கும்.
க்ரூஸ் கன்ட்ரோல், பார்ட்டி மோட், டேம்பர் அலர்ட் மற்றும் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான குருத்ரிம் ஏஐ-இன் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியும் இதில் இடம் பெற்றிருக்கும். இத்துடன், ஸ்மார்ட் வாட்ச் ஆப், ரோட் ட்ரிப் பிளான்னர் ஆகியவற்றையும் இந்த வேரியண்டில் ஓலா எலெக்ட்ரிக் வழங்கி இருக்கின்றது. தொடர்ந்து, சிறந்த ரைடு அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக்குகள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், பிரேக் பை ஒயர் தொழில்நுட்பம் ஆகியவற்றையே ஓலா இந்த தேர்வில் வழங்கி இருக்கின்றது.
ரோட்ஸ்டர் ப்ரோ வேரியண்டின் விலை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றிய விபரம்: பேட்டரி பேக், விலை மற்றும் தொழில்நுட்பம் அனைத்திலும் ரோட்ஸ்டர் மாடலின் மற்ற அனைத்து தேர்வுகளையும் தூக்கி சாப்பிடக் கூடியதாக இந்த வேரியண்ட் இருக்கின்றது. இதில் இரண்டு விதமான பவர்ஃபுல்லான பேட்டரி பேக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
8 kWh மற்றும் 16 kWh பேட்டரி பேக் தேர்வுகளே அவை ஆகும். முதல் ஒன்று ரூ. 1,99,999-க்கும், அடுத்த ஒன்று ரூ. 2,49,999க்கும் விற்கப்பட இருக்கின்றது. இந்த வேரியண்டில் அதிக பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 52 kW மற்றும் 105 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டாரே அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதில், 16 kWh பேட்டரி பேக் கொண்ட தேர்வே அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடியதாக இருக்குமாம். அது வெறும் 1.2 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதேபோல், வெறும் 1.9 செகண்டுகளில் 0-60 கிமீ வேகத்தை அது எட்டிவிடும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 194 கிமீ ஆகும். மேலும், ஓர் ஃபுல் சார்ஜில் 579 கிமீ தூரம் வரை இதில் பயணிக்க முடியும். ரேஞ்ஜ் மற்றும் திறனை வெளியேற்றுவதில் மட்டுமல்ல சிறப்பம்சங்களையும் ஆக சிறந்த வேரியண்டாக இதனை ஓலா எலெக்ட்ரிக் தயார் செய்துள்ளது.
அந்தவகையில், ரோட்ஸ்டர் ப்ரோ எலெக்ட்ரிக் பைக்கில் 10 அங்குல டிஎஃப்டி தொடுதிரை, அப்சைடு டவுன் ஃபோர்க், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவை இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, இரண்டு டிஐஒய் மோட்கள் மற்றும் நான்கு விதமான ரைடிங் மோட்கள் ஆகியவை இந்த இ-பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஹைப்பர் (Hyper), ஸ்போர்ட் (Sport), நார்மல் (Normal) மற்றும் ஈகோ (Eco) ஆகியவையே அவை ஆகும். இத்துடன், மூவ் ஓஎஸ்5 தொழில்நுட்பத்தையும் இதில் ஓலா எலெக்ட்ரிக் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை நிறுவனத்தின் பெஸ்ட் டிஜிட்டல் டெக்னாலஜி என கூறலாம்.
அந்த அளவிற்கு தரமாக இதை தயார் செய்திருக்கின்றது. அடாஸ், மூன்று விதமான டிராக்சன் கன்ட்ரோல், ஆக்சஸ் கன்ட்ரோல், ஆன்டி வீலி, ரேஸ் மோட் மற்றும் ஸ்டாப்பி மோட் என ஏகப்பட்ட வசதிகளை இதன் வாயிலாகப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிகின்றது.
ரிசர்வேஷன் மற்றும் டெலிவரி டைம்லைன் விபரம்: மேலே பார்த்த ஓலா ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் பைக்கின் மூன்று வேரியண்டுகளுக்கும் முன்பதிவு பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், இதை கைகளில் பெற அடுத்த நிதியாண் இறுதி காலாண்டு வரைக்கும் காத்திருக்க வேண்டும். ஆமாங்க, 2025 நிதியாண்டின் இறுதியிலேயே இதை டெலிவரி செய்ய ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், ரோட்ஸ்டர் ப்ரோவின் டெலிவரி பணிகள் மட்டும் 2026 ஆம் நிதியாண்டின் இறுதி காலாண்டிலேயே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
ஓலா நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புகள்: ஓலா நிறுவனம் தன்னுடைய எதிர்கால தயாரிப்புகளைப் பற்றிய தகவலையும் இன்று அறிவித்தது. அதாவது, நிறுவனம் வரும் நாட்களில் ஸ்போர்ட்ஸ், அட்வென்சர் மற்றும் க்ரூஸர் ஆகிய மாடல்களையும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது. இதில் ஸ்போர்ட்ஸ் மாடலில் ஆரோஹெட் (ArroeHead) மற்றும் டைமண்ட் ஹெட் (DiamondHead) ஆகிய தேர்வுகளே வழங்கப்பட இருக்கின்றன. மற்ற இரண்டிலும் தலா ஒரு தேர்வுகளே வழங்கப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த அளவிற்கு குறைவான விலையில் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, இதன் வருகை பெட்ரோல் டூ-வீலர் உற்பத்தியாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. விற்பனையில் ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போல இதுவும் மிக சிறப்பான வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









