ரூ.59,999க்கு ஓலாவின் புது இ-ஸ்கூட்டர்.. ரூ.499க்கே புக் பண்ணலாம்.. ஆனா இதை கைகளில் பெற 6மாசம் காத்திருக்கணும்

தன்னுடைய முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக்-கே உள்ளது. இந்த இடத்தை இதனிடம் இருந்து தட்டி பறிக்க வேண்டும் என்கிற முயற்சியிலேயே போட்டி நிறுவனங்கள் பலவும் ஈடுபட்டு வருகின்றன. எனவே தன்னுடைய இடத்தை முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஓலா எலெக்ட்ரிக் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையிலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது இந்தியாவில் இரண்டு புதுமுக விலை குறைவான மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஜிக் (Gig) டெலிவரி பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எஸ்1 இசட் (S1 Z) ஆகியவையே அவை ஆகும். இதில் எஸ்1 இசட் மாடல் பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Ola s1 z two varients pic

எஸ்1 இசட் இந்தியாவில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எஸ்1 இசட் மற்றும் எஸ்1 இசட் பிளஸ் ஆகியவையே அவை ஆகும். பேட்டரி பேக், மின்சார மோட்டார் என அனைத்திலும் ஒரே மாதிரி இருக்கும் இந்த தேர்வுகள் உருவத்தில் மட்டும் மாறுபட்டு இருக்கும்.

ஒன்று தனிப்பட்ட பயன்பாட்டிற்கான தோற்றத்திலும், மற்றொன்று டெலிவரி பயன்பாட்டிற்கான தோற்றத்தைக் கொண்டதாகவும் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எஸ்1 இசட் பிளஸ் தேர்வே டெலிவரி பயன்பாட்டிற்கான கேரியர் அமைப்பை பின் பக்கத்தில் கொண்டிருக்கும். 1.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்குகள் இரண்டு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும்.

Ola electric launches e-scooter ola s1 z

இரண்டுமே கழட்டி மாட்டும் வசதிக் கொண்டவை ஆகும். ஆகையால், தேவைப்படும் இடத்திற்கே எடுத்துச் சென்று இந்த பேட்டரிகளில் சார்ஜ் நிரப்பிக் கொள்ள முடியும். ஓர் முழு சார்ஜில் இந்த 146 கிமீ வரை இது ரேஞ்ச் தரும். அதேவேளையில், ஒரு பேட்டரி பேக்கை மட்டும் முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த சிறந்த வேக திறனுக்காக எஸ்1 இசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓலா நிறுவனம் 2.9 kWh திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரை அது பொருத்தி இருக்கின்றது. இது வெறும் 1.8 செகண்டுகளில் 0-20 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

இதேபோல், இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 4.8 செகண்டுகளே போதுமானதாக உள்ளது. இதில், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான எஸ்1 இசட் தேர்விற்கு ரூ. 59,999 விலையும், டெலிவரி பயன்பாட்டிற்கான எஸ்1 இசட் பிளஸ் தேர்விற்கு ரூ. 64,999 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். மேலும், இது ஒற்றை பேட்டரியைக் கொண்ட தேர்வுகளுடையது என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது. அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது இந்த வாகனங்களுக்கான புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. ரூ. 499 மட்டுமே செலுத்தினால் போதும் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும். ஆனால், இதன் டெலிவரி பணிகள் அடுத்த ஆண்டிற்கே திட்டமிடப்பட்டு இருக்கின்றது.

மே 2025-லேயே இதன் டெலிவரி தொடங்கும் என நிறுவனம தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், இந்த வாகனத்தை புக் செய்தால் ஆறு மாதங்கள் வரை அதை கைகளில் பெற காத்திருக்க வேண்டும். இதைபோலவே எஸ்1 இசட் உடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஜிக் டெலிவரி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளும் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கே திட்டமிடப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் மாறி இருக்கின்றது. தன்னுடைய முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே இந்த நிறுவனம் தற்போது விலை குறைவாகவும், அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியகாவும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டு வந்து இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 26, 2024, 20:08 [IST]
English summary
Ola electric expands e scooter lineup with launch of ola s1 z for urban commuters
மேலும்... #ola #electric bike #india #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+