ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் இந்தியாவில் அதன் 500வது டீலர்ஷிப் ஷோரூமை கேரளாவில் திறந்துள்ளது. மேலும், கேரளாவில் ஓலாவின் மிக பெரிய சர்வீஸ் செண்டராகவும் இது விளங்குகிறது. இதுகுறித்தும், ஓலாவின் நெட்வொர்க் சேவைகள் குறித்தும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கிடைத்துவரும் வரவேற்பு ஆகும். மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களை போன்று, 2021ஆம் ஆண்டில் நுழைந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இன்று இந்தியாவின் டாப்-10 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று என்கிற அளவுக்கு வளர்ந்துள்ளது.

ola inaugurates 500th service centre

கடந்த மார்ச் மாதத்தில் ஒருபடி மேலே போய், சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை காட்டிலும் டபுள் மடங்கை விட அதிகம் என ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் கூறியிருந்தோம்.

கடந்த பிப்ரவரி மாதத்திலும் 30 ஆயிரம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே ஓலா எலக்ட்ரிக் விற்பனை செய்திருந்தது. இவ்வாறு மாதத்திற்கு மாதம் அசூர வளர்ச்சி அடைந்துவரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இதே வேகத்தில் சென்றால், இன்னும் சில வருடங்களில் இந்தியாவின் தவிர்க்க முடியாத இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக மாறிவிடும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ola inaugurates 500th service centre

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிகம் விற்பனை செய்தால் மட்டும் போதாது, தங்களது ஸ்கூட்டர்களை நம்பி வாங்கும் கஸ்டமர்களுக்கு முறையான ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸையும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வழங்க வேண்டியது அவசியமாகும். இதனை நன்கு புரிந்து வைத்துள்ள ஓலா நிறுவனம் நாடு முழுவதும் டீலர்ஷிப் ஷோரூம்களையும், சர்வீஸ் செண்டர்களையும் நிறுவி வருகிறது.

இந்த வரிசையில், 500வது சர்வீஸ் செண்டரை கேரளாவின் கொச்சியில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திறந்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் டீலர்ஷிப் நெட்வொர்க்கில் ஓர் மைல்கல் ஆகும். அத்துடன், தற்போது கொச்சியில் திறக்கப்பட்டுள்ள இந்த டீலர்ஷிப் ஷோரூம் ஆனது கேரளாவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக பெரிய சர்வீஸ் மையமாக விளங்குகிறது.

ola inaugurates 500th service centre

நாட்டில் 500வது டீலர்ஷிப் ஷோரூமை திறந்திருப்பதை கொண்டாடும் விதமாக கொச்சியில் உள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கஸ்டமர்களை ஒருங்கிணைத்து ரைடுக்கு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான நகரங்களில் இலவச ஸ்கூட்டர் ஹெல்த் செக்-அப்பை நடத்தவும் ஓலா எலக்ட்ரிக் முடிவெடுத்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் எஸ்1 எக்ஸ், எஸ்1 எக்ஸ்+, எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 புரோ என மொத்தம் 4 விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் குறைந்தப்பட்சமாக ரூ.69,999இல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.1,24,999 வரையில் உள்ளன.

ola inaugurates 500th service centre

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூரை சேர்ந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆரம்பத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய திட்டமிட்டது. அதாவது, ஷோரூம்கள் மீது ஆரம்பத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்துக்கு பெரியதாக நம்பிக்கை இல்லை. ஆனால், இப்போது 500வது டீலர்ஷிப் ஷோரூமை திறக்கும் அளவிற்கு ஓலா எலக்ட்ரிக் வளர்ந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 20, 2024, 19:44 [IST]
English summary
Ola electric inaugurates 500th service centre check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X