ஓலா-வுக்கு லாபத்து மேல ஆசை இல்லையோ.. 10-12 தேதி வரை மட்டுமே இந்த சிறப்பு சலுகை கிடைக்கும்..
வருகின்ற விழாக் காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சிறப்பு சலுகைளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) யாரும் எதிர்பார்த்திராத சிறப்பு சலுகையை தற்போது அறிவித்திருக்கின்றது. நிறுவனம் 'பாஸ் 72 ஹவர் ரஷ்' (BOSS 72-hour Rush) எனும் திட்டத்தையே அறிவித்திருக்கின்றது. இந்த திட்டத்தின்கீழ் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பலன்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வழங்க இருக்கின்றது.
நிறுவனம் ஏற்கனவே 'பிக்கஸ்ட் ஓலா சீசன் சேல்' ( Biggest Ola Season Sale) எனும் பெயரின்கீழ் சிறப்பு சலுகையை அதன் தயாரிப்பு ஒன்றிற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது பாஸ் 72 ஹவர் ரஷ் எனும் சிறப்பு சலுகை திட்டமும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இது வெறும் 72 மணி நேரங்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய சூப்பர் சிறப்பு சலுகை ஆகும். அதாவது, இன்று (அக்டோபர் 10) தொடங்கி நாளை மறுநாள் (அக்டோபர் 12) வரை மட்டுமே நிறுவனத்தின் பாஸ் 72 ஹவர் ரஷ்-இன் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.
நிறுவனம் தற்போது அதன் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ரூ. 49,999-க்கு விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. பிக்கஸ்ட் ஓலா சீசன் சேல்-இன் கீழே இந்த அளவிற்கு குறைவான விலையில் அது தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது, ஓலா எஸ்1 எக்ஸ் 2kWh (S1 X 2kWh) ஆப்ஷனுக்கானது ஆகும்.
குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே இந்த விலையில் ஓலா எஸ்1 எக்ஸ் 2kWh எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தநிலையிலேயே, ரூ. 30 ஆயிரத்திற்கான கூடுதல் பலன்களுக்கான திட்டமாக 'பாஸ் 72 ஹவர் ரஷ்'-ஐ ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கின்றது.
இந்த திட்டத்தின்கீழ் எஸ்1 ப்ரோ (S1 Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ள முடியும். அத்துடன், ரூ. 5 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ்-ம் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இதுதவிர, ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிமீட்டர் வாரண்டி திட்டத்தையும் இலவசமாக பாஸ் 72 ஹவர் ரஷ் வாயிலாக வழங்க இருப்பதாகவும் ஓலா அறிவித்திருக்கின்றது.
மேலும், ஃபைனான்ஸ் ஆஃபராக ரூ. 5 ஆயிரம் வரை சிறப்பு சலுகை குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டு இஎம்ஐ-க்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இவற்றுடன் கூடுதல் போனஸாக இலவச மூவ்ஓஎஸ் பிளஸ் (MoveOS+) அப்கிரேடையும், ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள இலவச சார்ஜையும் வழங்க இருப்பதாக ஓலா அறிவித்திருக்கின்றது.
எனவே சில மாதங்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக சார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிகின்றது. இந்த அதிரடி திட்டங்களால் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இந்த விற்பனை காலத்திலும் மிக சிறப்பான வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பு போதாது என்று அதை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே பாஸ் 72 ஹவர் ரஷ் திட்டம் மற்றும் பிக்கஸ்ட் ஓலா சீசன் சேல் ஆகிய திட்டங்களை அது அறிவித்து இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








