ஓலா எலெக்ட்ரிக் பைக்ல இப்படி ஒரு சீட்டையா தர போறாங்க! இதோட ஹேண்டில்-பார் வேற லெவல்.. எல்லாமே செம்ம அழகு!!

கால் டாக்சி நிறுவனமாக இந்தியாவில் கால்தடம் பதித்த இன்று இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்திருக்கின்றது, ஓலா (Ola) நிறுவனம். அது, ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) எனும் பெயரிலேயே மின்சார இரண்டு சக்கர வாகனங்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனம் சீக்கிரமே ஓர் புதுமுக எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)-ஐ நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரபோவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கான பணியிலேயே ஓலா எலெக்ட்ரிக் தற்போது மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இப்போதைய நிலவரப்படி பிராண்டின்கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. இந்த நிலையிலேயே அது இ-பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே நிறுவனத்தின் செயலும் அமைந்திருக்கின்றது. அது, சமீப சில நாட்களாக மின்சார பைக்கின் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக டீசர் படங்களை வெளியிட்டு வருகின்றது.

Ola electric motorcycle teaser

அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இ-பைக்கின் பேட்டரி பேக்கின் படங்களை வெளியிட்டிருந்தது. இதுதவிர, பைக்கின் முகப்பு பகுதியின் டீசரையும், இதற்கு அடுத்தபடியாக ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் ஓலா எலெக்ட்ரிக் பைக்கை இயக்குகின்றதைப் போன்ற படத்தையும் வெளியிட்டது. இந்த நிலையிலேயே மேலும் சில டீசர் படங்களை இப்போது மீண்டும் ஓலா நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

இந்த டீசர் படத்தின் வாயிலாக ஓலா எலெக்ட்ரிக் பைக்கில் என்ன மாதிரியான இருக்கை இடம் பெற இருக்கின்றது. பக்கவாட்டு டிசைன் எப்படி இருக்கும் மற்றும் முகப்பு பகுதி எப்படி இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, ஓலா நிறுவனம் அதன் இ-பைக்கை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தயார் செய்திருப்பதை இப்போது வெளியாகி இருக்கும் படங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

இதுவரை எந்தவொரு நிறுவனமும் தயாரித்திராத தனித்துவமான ஸ்டைலிலேயே ஓலா எலெக்ட்ரிக் அதன் இ-பைக்கை தயார் செய்திருக்கின்றது. ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்களின் முக மூடியைப் போன்ற அமைப்பை இந்த பைக்கின் முகப்பு பகுதி பெற்றிருக்கின்றது. இதிலேயே மெல்லிய டிஆர்எல் மற்றும் ஹெட்லைட் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

மேலும், இந்த முகுமூடி அமைப்பின் மேல் பகுதியிலேயே இண்டிகேட்டர்கள் இடம் பெறும் என்பதை டீசர் படம் உறுதி செய்திருக்கின்றது. இந்த முக மூடி போன்ற அமைப்பு விண்ட் ஸ்கிரீனாகவும் செயல்படும். மேலும், பைக்கின் உடல் நிறத்திலேயே இது அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இத்துடன், ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கையே ஓலா இ-பைக் பெறும் என்பதையும் இப்போது வெளியாகி இருக்கும் டீசர் படங்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, பைக்கின் ஒரு பக்கம் ஹேண்டில் பார் மட்டுமே இந்த டீசரில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. மற்றொரு பக்கம் மறைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக அங்கு ஏதேனும் டுவிஸ்ட் இருக்கலாம் என யூகிக்க முடிகின்று. அதாவது, இந்த வாகனம் கியர் வைத்த அல்லது கியர் இல்லாததாக வருமா என்கிற சந்தேகத்தையே கிளப்பியிருக்கின்றது.

இவற்றுடன், பல வித வண்ணங்களால் இந்த இ-பைக் அலங்கரிக்கப்பட இருப்பதையும் டீசர் படம் உறுதி செய்திருக்கின்றது. மேலும், இ-பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஎஃப்டி திரையையே ஓலா வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த திரை ஓலா மேப்ஸ் நேவிகேஷன் வசதியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.

ஓலா நிறுவனம் இந்த பைக்கை வருகின்ற ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், அன்றைய தினம் இ-பைக் பற்றிய இன்னும் பல முக்கிய தகவல்கள் தெரிய வரும் என நம்பப்படுகின்றது.

மேலும், இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வரும் எனில் மேட்டர் ஏரா-விற்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். இதுதவிர, டார்க் க்ரடோஸ், ரிவோல்ட் ஆர்வி400, ஓபென் ரோர், டார்க் க்ரடோஸ் ஆர் மற்றும் அல்ட்ராவைலட் எஃப்77 மேக் 2 ஆகியவற்றிற்கும் ஓலா எலெக்ட்ரிக் பைக்கின் வருகை மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்தியர்களின் கவனத்தை இ-பைக்கின் பக்கமும் திசை திருப்பும் முயற்சியாக அது எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. நிறுவனத்தின் இப்போதைய வேகத்தை வைத்து பார்க்கையில் வெகு சீக்கிரமே இ-பைக் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 11, 2024, 5:30 [IST]
English summary
Ola electric motorcycle teaser unveils futuristic design features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+