எல்லாரும் ஓலா வண்டியதான் வாங்குறாங்க! மீண்டும் முதலிடத்தை பிடித்த ஓலா!
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் 114 சதவீதம் அளவுக்கு தனது விற்பனையை அதிகரித்துள்ளது. மிகப்பெரிய வளர்ச்சியை இந்நிறுவனம் சந்தித்து வருகிறது. பெட்ரோல் ஸ்கூட்டர் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் பலர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் அளவுக்கு இந்நிறுவனம் வளர்ச்சி பெற்று உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஸ்கூட்டர் செக்மெண்டில் புதிதாக வாகனம் வாங்க நினைக்கும் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்பி வருகிறார்கள். ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் அதை சிட்டி பயன்பாடுகாகவே அதிகம் பயன்படுத்துகிறார்கள். குறுகிய தூர பயன்பாட்டிற்கு இவை உதவுகிறது.

இந்நிலையில் இந்த தேவைகளை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பூர்த்தி செய்வதாலும் அதே நேரம் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மற்றும் அதிக ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூடர்கள் மார்க்கெட்டில் வந்து விட்டதாலும், பெட்ரோல் செலவைவிட எலெக்ட்ரிக் பேட்டரி ரீசார்ஜ் செய்யும் செலவு மிக குறைவு என்பதாலும், மக்கள் பலர் இந்த ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க விரும்புகிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஓலா நிறுவனம் தான் இருக்கிறது. ஓலா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 41,597 வாகனங்களை பதிவு செய்துள்ளது. இது வாகன் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவாகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஒட்டுமொத்த மார்க்கெட்டில் 39 சதவீத பங்கை ஓலா நிறுவனம் தான் வைத்துள்ளது.

ஓலா நிறுவனம் கடந்த ஜூன் மாத விற்பனையை 2023ம் ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, 114 சதவீதம் அளவுக்கு இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ந்துள்ளது. மார்க்கெட்டில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூடர்களுக்கு போட்டியாக டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் என்ற ஸ்கூட்டரையும், ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் பல்வேறு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், பஜாஜ் நிறுவனம் சேர்த்தக் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து வருகிறது.
தற்போது ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் காத்திருப்பு காலம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் காத்திருந்து இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டரை வாங்குகிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இந்த நிறுவன ஸ்கூட்டரின் மதிப்பு உயர்ந்து விட்டது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் நல்ல பெயரை பெற்று வருகின்றன.

ஓலா நிறுவனம் தற்போது எஸ்1 எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூ்டரில் இரண்டு கிலோவாட் ஹவர் பேட்டரி அவர் ஆப்ஷன் கொண்ட ஸ்கூட்டரை ரூ74,999 என்ற விலையிலும், எஸ்ஒன் எக்ஸ் 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஆப்ஷனை ரூ85,999 என்ற விலை என்ற விலையிலும், இதே 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஆப்ஷனை ரூ99,999 என்ற விலையிலும் விற்பனை செய்து வருகிறது.
ஓலா எஸ்1எக்ஸ் பிளஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 89,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஓலா எஸ்1 ஏர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1,06,499 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. எஸ்1 ப்ரோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1,33,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
ஒலா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிடும். இந்த ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பல்வேறு விதமான சர்பிரைஸ் அறிவிப்புகளை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதற்காக அந்நிறுவனம் தயாராகி வருகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் பெரும்பாலும் தனது முதல் எலெக்ட்ரிக் பைக் குறித்த அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் ஐபிஓ தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிவிப்புகள் கூட வெளியாக வாய்ப்புகள் உள்ளன. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









