இதுவரை யாருமே செய்யாத சாதனையை செய்த ஓலா! ஒரே வருஷத்துல அசூரன் மாதிரி வளர்ந்துட்டாங்க!

ஜூலை மாதம் பிறந்துள்ள நிலையில் தற்போது கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களை வரிசையாக ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன. அதன்படி ஓலா நிறுவனமும் கடந்த மாதம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்ற விபரம் நமக்கு கிடைத்துள்ளது. அதன்படி ஓலா நிறுவனம் ஒரே ஆண்டில் 107 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிறுவனம் கடந்த மாதம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது? எப்படியான வளர்ச்சியை பெற்றுள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாறி உள்ளது. இந்நிறுவனம் துவங்கியது முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் பலர் ஓலா நிறுவனத்தின் வாகனங்களை விரும்பி வாங்கி வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு மாதமும் இந்நிறுவனத்தின் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ola electric sales june 2024

கடந்த ஜூன் மாதம் மட்டும் ஓலா நிறுவனம் மொத்தமாக 36,716 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இந்த தகவலை மத்திய அரசின் வாகன் தளம் வெளியிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் கடந்த மாதம் இந்தியா முழுவதும் விற்பனையான எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையில் 46 சதவீத பங்கை வைத்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும்போது 107 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

இதன் படி இந்த நிதியாண்டின் முதல் 3 மாதங்களுக்கான விற்பனை விபரங்களையும் ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந் நிறுவனம் மட்டும் 1.08 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் முதல் மூன்று மாத விற்பனையை ஒப்பிடும்போது 57% விற்பனை அதிகமாகியுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த 2024ம் ஆண்டு முதல் ஆறு மாதத்திற்கான விற்பனை விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் இந்த முதல் ஆறு மாதத்திலேயே 2லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்த ஒரே நிறுவனம் இதுதான். இந்த 2024ம் ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 2.28லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓலா நிறுவனம் எஸ்1 என்ற பிராண்டில் மொத்தம் 6 மாடல்களில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக நிறுவனம் எஸ்1 எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்கிறது. இந்த ஸ்கூட்டர் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களில் உள்ளன. 2 கிலோ வாட் ஹவர், 3 கிலோ வாட் ஹவர் மற்றும் 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் தான் இருக்கிறது.

இதன் விலைகளை பொருத்தவரை 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் ரூ74,999 என்ற விலையிலும் 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் ரூ84,999 என்ற விலையிலும், நான்கு கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் ரூ99,999 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. ஸ்கூட்டரை விரும்புபவர்களுக்கு ஓலா நிறுவனம் எஸ்1 ப்ரோ, எஸ் ஒன் ஏர் மற்றும் எஸ்1 எக்ஸ் பிளஸ் ஆகிய வேண்ட்களை விற்பனை செய்து வருகிறது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கான பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 80,000 கிலோ மீட்டர் வரை வாரண்டிகளை வழங்கி வருகிறது. இதனால் இந்த வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக நீண்ட நாட்கள் இந்த வாகனத்தை பயன்படுத்த முடியும். இதனால் இந்த வாகனத்தின் ஆயுட்காலமும் அதிகமாகும்.

ஓலா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி கவரேஜ்களையும் வழங்குகிறது. இதை ஆட்-ஆன் பிளான் மூலமாக வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் எவ்வளவு கிலோமீட்டர் அவர்கள் ஓட்டுகிறார்கள் என்பதற்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இதுபோக தங்கள் வாகனங்களை சார்ஜ் ஏற்ற மூன்று கிலோ வாட் சார்ஜரும் வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகள் எல்லாம் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் கடும் போட்டி போட்டு வருகின்றன. அனைத்து விதமான வாகன விரும்பிகளுக்கும் இந்நிறுவனம் வாகனங்களை பிரித்து வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 2, 2024, 7:00 [IST]
English summary
Ola electric sales june 2024 ev two wheeler 107 percent growth
மேலும்... #ola #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+