2.5 வருஷத்துலையே இவ்ளோ வாகனங்களா! என்ன வசியம் பண்ணுச்சுனே தெரியல.. ஈ போல மொய்க்குறாங்க!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் யாருமே நம்ப முடியாத அளவிற்கு அதன் ஆரம்ப நிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான எஸ்1 எக்ஸ் (S1 X)-இன் விலையை குறைத்துள்ளது. அதாவது, இந்த மாடலில் புதிய மலிவு விலை தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது, ஓலா எலெக்ட்ரிக்.
அது ரூ. 69,999க்கு விற்பனைக்குக் கிடைக்கும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த மலிவு விலை இ-ஸ்கூட்டரின் அறிமுகத்தைத் தொடர்ந்து அந்நிறுவனம் மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் தகவலையும் வெளியிட்டு இருக்கின்றது. அதாவது, அது விற்பனை பதிவில் மிகப் பெரிய சாதனையைப் படைத்திருப்பதாகவே தெரிவித்து இருக்கின்றது.

நிறுவனம் இந்தியாவில் வர்த்தக பணிகளைத் தொடங்கி 2.5 ஆண்டுகளே ஆகின்றன. இதற்குள்ளாகவே அது 5 லட்சம் வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. வாஹன் (Vahan) தளத்தில் இருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல் இது என்றும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
ஆகையால், இது நம்பக் கூடிய தகவலே ஆகும். ஓலா நிறுவனம் தொடர்ச்சியாக விற்பனையில் வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருப்பதன் விளைவாகவே அதனால் இந்த சாதனையைப் படைக்க முடிந்திருக்கின்றது. சென்ற மாதத்தில்கூட ஓலா எலெக்ட்ரிக் இதுவரை இல்லாத அளவிற்கு விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் 2024 மார்ச் மாத்தில் மட்டும் சுமார் 53 ஆயிரத்திற்கும் அதிகமான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. இதுவரை இல்லாத மிகப் பெரிய விற்பனை எண்ணிக்கை இதுவாகும். இதுமாதிரியான விற்பனை சாதனையையே ஒவ்வொரு மாதமும் ஓலா எலெக்ட்ரிக் இந்தியாவில் படைத்துக் கொண்டிருக்கின்றது.
இதன் விளைவாகவே நிறுவனம் வர்த்தக பணிகளைத் தொடங்கி வெறும் 2.5 ஆண்டுகளே ஆகின்ற நிலையில் அதனால் 5 லட்சம் யூனிட்டுகளை பதிவு செய்ய முடிந்திருக்கின்றது. ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் போல பெரிய பெரிய நடிகர்களின் படத்தையே மிஞ்சும் அளவிற்கு தொடர்ச்சியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையில் ஹிட் அடித்துக் கொண்டிருப்பதும் இதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.
இதனால்தான் இந்திய மின்சரா இரண்டு சக்கர வாகன பிரிவின் அறிவிக்கப்படாத தலைவனாக ஓலா எலெக்ட்ரிக் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இப்போது இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையாகிக் கொண்டிருக்கும் வேகத்தை வைத்து பார்க்கையில் இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு இதுவே இந்திய மின்சார வாகன உலகின் மகுடம் சூடப்படாத ராஜாவாக இருக்கும் என தெரிகின்றது.
மேலும், அடுத்து வரும் நாட்களிலும் அது விற்பனையில் புதிய புதிய சாதனைகளைப் படைக்கும் என்றும் நம்பப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்றைய தினம் அது மலிவு விலை எஸ்1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி ஓலா நிறுவனம் எஸ்1 வரிசையில் மூன்று விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
எஸ்1 ப்ரோ (S1 Pro) , எஸ்1 ஏர் (S1 Air) மற்றும் எஸ்1 எக்ஸ் (S1 X) ஆகியவையே அவை ஆகும். இதில் எஸ்1 எக்ஸ் மாடலே நிறுவனத்தின் மலிவு விலை மாடல் ஆகும். எஸ்1 எக்ஸ் (S1 X) மற்றும் எஸ்1 எக்ஸ் பிளஸ் (S1 X+) என இதில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன், 2 kWh, 3 kWh மற்றும் 4 kWh ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்களும் இதில் வழங்கப்படுகின்றன.
இதில், எஸ்1 எக்ஸ் 2 kWh பேட்டரி பேக்கைக் கொண்ட ஆப்ஷனே ஓலாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். முன்னதாக கூறியதைப் போல இதன் 69,999 மட்டுமே ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் இதுபோன்று மலிவு விலைையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலே அது தற்போது விற்பனையில் உச்சத்தில் உள்ளது. இத்துடன், இந்தியர்களின் மனம் கவர்ந்த எலெக்ட்ரிக் டூ-வீலர் பிராண்டாகவும் அது காட்சியளிக்கின்றது. இந்த இடத்தை இன்னும் சில ஆண்டுகளுக்கு ஓலா தன் வசம் தக்க வைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








