எல்லாரும் வாங்க போட்டி போடுறாங்க... ஷோரூம்களில் தள்ளுமுள்ளு நடக்காதது மட்டும்தான் குறை!!

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்குகிறது. குறிப்பாக, நடப்பு அக்டோபர் மாதத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், இந்த மாதத்தில் முதல் 14 நாட்களிலேயே 15 ஆயிரத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் விற்பனை செய்துள்ளது. வழக்கத்தை காட்டிலும் இவை எந்த அளவிற்கு அதிகம் என்பதையும், மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஓலா எலக்ட்ரிக் கொஞ்சம் தாமதமாகவே இந்தியாவின் எலக்ட்ரிக் 2-வீலர்கள் மார்க்கெட்டில் நுழைந்தது. இருப்பினும் தற்போதைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனம் ஓலா எலக்ட்ரிக் ஆகும். ஆரம்பத்தில் எல்லா நிறுவனங்களை போல தான் ஓலா எலக்ட்ரிக் நிறுவனமும் பயணத்தை துவங்கியது.

ola electric scooters sales milestone

ஆனால், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் விரைவாகவே மக்கள் மத்தியில் பிக்-அப் ஆகிவிட்டது. மாதத்திற்கு மாதம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கியவர்கள் மத்தியில் சில பல குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு ஒருபக்கம் கஸ்டமர்கள் குவிகின்றனர்.

குறிப்பாக, நடப்பு அக்டோபர் மாதத்தில் புதிய உச்சத்தை தொடும் அளவிற்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை பதிவாகி வருகிறது. இந்த மாதத்தின் முதல் 14 நாட்களில் மட்டும் 15,672 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதற்கு காரணம், இந்த 14 நாட்களில் தான் இந்தியாவில் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் நவராத்ரி சென்றது குறிப்பிடத்தக்கது.

ola electric scooters sales milestone

பொதுவாகவே, இவ்வாறான பண்டிகை காலத்தின்போதுதான் நிறைய பேர் புதியதாக வாகனங்களை வாங்க விரும்புவர். இருப்பினும், இந்த 14 நாட்களில் எலக்ட்ரிக் 2-வீலர்களை வாங்கியவர்களில் 3இல் ஒருவரது தேர்வு நிச்சயமாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்துள்ளது. இந்த 14-நாள் விற்பனையில் ஓலா எலக்ட்ரிக்கின் பங்களிப்பு 34% ஆகும். இந்த தகவலை மத்திய அரசின் வாஹான் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக்கில் இருந்து தற்போதைக்கு எஸ்1 என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மட்டுமே பல்வேறு விதமான பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், எஸ்1 ஸ்கூட்டரின் டிசைன் பலருக்கு பிடித்த காரணத்தினாலும், சேல்ஸ் & சர்வீஸ் மையங்கள் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட காரணத்தினாலும் ஓலா எலக்ட்ரிக்கின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது.

ola electric scooters sales milestone

இதனை மேலும் பெருக்கும் விதமாகவும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை பயன்படுத்தி கொள்ளும் விதமாகவும் வாடிக்கையாளர்களை கவர சில முயற்சிகளில் ஓலா எலக்ட்ரிக் ஈடுப்பட்டு வருகிறது. குறிப்பாக, டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் இந்த நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஹைப்பர் சர்வீஸ் என்கிற பெயரிலான திட்டத்தை ஓலா எலக்ட்ரிக் செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின்படி, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ்களில் ஓலா எலக்ட்ரிக் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், இந்த ஹைப்பர் சர்வீஸ் திட்டத்தின்படி, 2024 டிசம்பர் மாதத்திற்குள் ஓலா எலக்ட்ரிக்கின் டீலர்ஷிப் ஷோரூம்களின் எண்ணிக்கையை 1,000ஆக அதிகரிக்க ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, வருகிற 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் சேல்ஸ் & சர்வீஸில் உள்ள பார்ட்னர்களின் மொத்த எண்ணிக்கையை 10,000ஆக உயர்த்துவதில் ஓலா எலக்ட்ரிக் தீவிரமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூரை சேர்ந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை புகழ்ச்சி, இகழ்ச்சி என இரண்டுமே சுற்றிக் கொண்டு இருக்கிறது. முன்னணி எலக்ட்ரிக் வாகன நிறுவனமாக ஏற்கனவே உருவெடுத்து நிற்கும் ஓலா எலக்ட்ரிக், வரும் காலங்களில் இதனை விட அசூர வளர்ச்சி அடைவதற்கான எல்லா தகுதிகளையும் கொண்டுள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால், இந்த அக்டோபர் மாதத்தை எந்த மாதிரியான விற்பனை எண்ணிக்கைகள் உடன் ஓலா எலக்ட்ரிக் முடிக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Monday, October 14, 2024, 23:50 [IST]
English summary
Ola electric scooters sales crossed 15000 in just 14 days of october 2024
மேலும்... #ola #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X