என்னது அடாஸ் அம்சம் இ-ஸ்கூட்டரிலா! ஓலா ஜென் 3 பிளாட்பாரம் இவ்ளோ தரமானதா! இந்தியர்கள வளச்சுபோட இதுபோதும்!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் தன்னுடைய வருங்கால எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)களை தயாரிப்பதற்காக உருவாக்கி இருக்கும் புதிய தலைமுறை பிளாட்பாரத்தின் டீசர் வீடியோ (Teaser Video)-வை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கின்றது. இது நிறுவனத்தின் 3 ஆம் தலைமுறை பிளாட்பாரம் (Gen 3) ஆகும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், இந்தியா மின்சார இரண்டு சக்கர வாகன உலகின் அறவிக்கப்படாத தலைவனாக மாறியிருக்கின்றது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டாக அது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், 'சங்கல்ப் 2024' எனும் பெயரில் ஆகஸ்டு 15 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை ஓலா எலெக்ட்ரிக் நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது. இதுதவிர, தன்னுடைய இன்னும் சில புதிய தயாரிப்புகளையும் இ-பைக்கின் அறிமுகத்தோடு சேர்த்து ஓலா நிறுவனம் அன்றைய தினம் வெளியீடு செய்தது.

அந்தவகையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக தயார் செய்யப்பட்டு இருக்கும் ஜென்-3 பிளாட்பாரத்தையும் இந்த நாளிலேயே ஓலா வெளியீடு செய்திருந்தது. இந்த நிலையிலேயே தற்போது அதன் டீசர் வீடியோவை ஓலா எலெக்ட்ரிக் வெளியிட்டு இருக்கின்றது. இந்த புதிய 3 ஆம் தலைமுறை பிளாட்பாரத்தின் வாயிலாக என்ன மாதிரியான திறன் கொண்ட இ-வாகனங்களை தயார் செய்ய இருக்கின்றோம் என்பது பற்றிய தகவலையே இந்த வீடியோவில் ஓலா காட்சிப்படுத்தி இருக்கின்றது.
புதிய தலைமுறை பிளாட்பாரத்தின் வாயிலாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பலதரப்பட்ட வகை இ-ஸ்கூட்டர்களை தயார் செய்ய இருக்கின்றது. கம்யூட்டர் (தினசரி பயன்பாட்டு) வாகனம், ஸ்போர்ட்டி லுக் கொண்ட வாகனம் மற்றும் டூரிங் வகை மாடல்கள் போன்றவற்றின் தயாரிப்பை ஆதரிக்கும் வகையிலேயே இந்த புதிய பிளாட்பாரத்தை ஓலா தயார் செய்திருக்கின்றது.
மேலும், இந்த பிளாட்பாரத்திலேயே நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான பாரத் 4689 செல் (Bharat 4680 Cell)களாலான பேட்டரி பேக்கையும் ஓலா பயன்படுத்த இருக்கின்றது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் 2170 பேட்டரி செல் அமைப்புடன் ஒப்பிடுகையில், அதிக அடர்த்தி மற்றும் அதிக சக்தி வாய்ந்ததாக இது இருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும், இந்த பிளாட்பாரத்தில் மோட்டார், பேட்டரி மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தாங்கும் இடங்கள் புதிய தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, பேட்டரி பொருத்தப்படும் இடம் அலுமினியத்தால் கட்டப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இது பேட்டரியை இருக்கமாக தாங்கி இருக்கும் வகையில் சுற்றிலும் கட்டப்பட்டு இருக்கும்.

மேலும், தலைமுறை 1 மற்றும் தலைமுறை 2 ஆகிய பிளாட்பாரங்களில் காணப்பட்ட சில சிக்கல்களையும் இந்த புதிய பிளாட்பாரத்தில் ஓலா எலெக்ட்ரிக் தவிர்த்திருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், ஒயரிங் அமைப்பையும் சீராக இருக்கும் வகையிலேயே இந்த புதிய பிளாட்பாரத்தை அது தயார் செய்திருக்கின்றது.
ஆகையால், புதிய 3ஆம் தலைமுறை பிளாட்பாரம் அனைத்திலும் சிறந்ததாகவே இருக்கும் என தெரிகின்றது. மிக முக்கியமாக அடாஸ் (ADAS) அம்சத்தையும் இந்த புதிய பிளாட்பாரத்திலேயே நிறுவனம் வழங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதை உறுதி செய்யக் கூடியக் காட்சிகளும் தற்போது வெளியாகி இருக்கும் டீசர் வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன. ஆகையால், வரவிருக்கும் ஜென் 3 பிளாட்பாரத்தினாலான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் இந்தியர்களின் மனம் கவர்ந்த வாகனமாக மாறும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய தலைமறை பிளாட்பாரம் பலவகை இ-ஸ்கூட்டர்களை தயாரிக்கவும், அதிக செயல்திறன் மிக்க இ-ஸ்கூட்டர்களையும் தயாரிக்க பயன்படும் என தெரிகின்றது. இதுதவிர, அடாஸ் அம்சமும் இதில் இடம் பெற இருப்பதால் அதிக பாதுகாப்பை வழங்கும் இ-வாகனமாகவும் ஜென்3 பிளாட்பாரத்தைக் கொண்ட வாகனம் இருக்கும் என்பதும் தெரிகின்றது.


Click it and Unblock the Notifications









