ஓலா எலெக்ட்ரிக் பைக்கை அதோட ஹெட்லைட்டுக்காகவே எல்லாரும் வாங்க போறாங்க.. ஹெட்லைட்டே இவ்ளோ அழகா இருக்குதா!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் பைக் (Eelctric Bike)-ஐ விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமான தகவலே சமீப சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சில தினங்களுக்கு முன்னர் ஓலா எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரி பேக்-இன் படங்கள் வெளியிடப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக ஓலா இ-பைக்கை ஒரு நபர் இயக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையிலேயே தற்போது ஓலா எலெக்ட்ரிக் பைக்கின் முன் பக்கத்தை வெளிக்காட்டக் கூடிய டீசர் படம் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த டீசர் படத்தின் வாயிலாக ஓலாவின் எலெக்ட்ரிக் பைக்கில் மிகவும் கவர்ச்சியான எல்இடி ஹெட்லைட் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது. ட்வின் பாட் வகை எல்இடி ஹெட்லைட்டே ஓலா எலெக்ட்ரிக் பைக்கில் இடம் பெற இருக்கின்றது. இந்த ஹெட்லைட் டிஆர்எல்-களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Ola electric bike

இப்போதைக்கு இந்த தகவல்கள் மட்டுமே ஓலா எலெக்ட்ரிக் பைக் பற்றிய வெளியாகி உள்ளது. விரைவில் இன்னும் சில முக்கிய விபரங்களையும் இந்த இ-பைக் பற்றி ஓலா எலெக்ட்ரிக் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, வருகின்ற ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்று இந்த இ-பைக் பற்றிய முக்கிய தகவலை ஓலா எலெக்ட்ரிக் வெளியிட இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அன்றைய தினம் இ-பைக்கை ஓல வெளியீடு செய்ய இருப்பதாகவே தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாளில் இன்னும் பல புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றின் வரிசையிலேயே தற்போது ஓலா எலெக்ட்ரிக் பைக்கும் இணைந்திருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின்கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இவற்றிற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் நிறுவனம் அதன் இ-பைக் வாயிலாகவும் இந்தியர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஓலா எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனில் ஓபென் ரோர், டார்க் க்ரடோஸ் ஆர், ரிவோல்ட் ஆர்வி 400 மற்றும் அல்ட்ராவைலட் எஃப்77 மேக் 2 மற்றும் மேட்டர் ஏரா ஆகிய இ-பைக் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாளனாக அமையும்.

எனவே, இந்த போட்டியாளர்களுக்கு ஓலா மின்சார பைக்கின் வருகை மிகப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் பைக் என்பதால் இது அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் பைக்காகவே இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது. நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே இதற்கு சான்றாக உள்ளது.

ஓலா எஸ் 1 ப்ரோ மிக மிக அதிக சிறப்புகளையும், அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய இ-ஸ்கூட்டராக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. ஓலா நிறுவனம் இதை மட்டுமல்ல எஸ்1 ஏர், எஸ்1 எக்ஸ் பிளஸ் மற்றும் எஸ்1 எக்ஸ் ஆகியவற்றையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதில் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக எஸ்1 எக்ஸ் இருக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 74,999 மட்டுமே ஆகும். அதேநேரத்தில், மிக மிக அதிக விலைக் கொண்ட மாடலாக முன்னதாக பார்த்த எஸ்1 ப்ரோ இருக்கின்றது. இதன் விலை ரூ. 1.34 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே இ-பைக்குகளுக்கும் டிமாண்ட் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஓலா நிறுவனம் அதன் இ-பைக்கை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 7, 2024, 5:00 [IST]
English summary
Ola electric teases its first electric motorcycle set to debut on 15 august
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+