ஓலா எலெக்ட்ரிக் பைக்கா நாளைக்கு அறிமுகபோகுது!! பவிஷ் வெளியிட்ட தகவலால் மிகழ்ச்சியில் ஆழ்ந்த ஓலா ரசிகர்கள்!
ஓர் கால் டாக்சி நிறுவனமாக இந்தியாவில் கால் தடம் பதித்து முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்து இருக்கின்றது ஓலா (Ola). இது ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) எனும் பெயரிலேயே இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
கால் டாக்சி துறையைப் போலவே மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவிலும் இந்த நிறுவனத்தின் பெயர் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. இதுவே அறிவிக்கப்படாத தலைவனாக நாட்டின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவின் தலைவனாக மாறி இருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய நிறுவனத்திற்கு மேலும் வலு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் அது ஓர் புதுமுக மின்சார இரண்டு சக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்ய அது திட்டமிட்டு இருக்கின்றது. அந்த வாகனத்தையே நாளைய தினம் ஓலா எலெக்ட்ரிக் இந்தியாவில் வெளியீடு செய்ய இருக்கின்றது. இதனை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ-வான பவிஷ் அகர்வாலும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
அவரின் சமீபத்திய எக்ஸ் பதிவில், "நாளை மதியம் ஓலா எலெக்ட்ரிக் அதன் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும்" என்று தெரிவித்து இருக்கின்றார். ஆகையால், ஓலா எலெக்ட்ரிக் வாகன காதலர்கள் தற்போது மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர். ஆனால், ஓலா எந்த வாகனத்தை இந்தியாவில் வெளியீடு செய்ய இருக்கின்றது என்பது பற்றிய தகவலை வெளியிடவில்லை.
இருப்பினும், எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக ஒரு சிலர் ஓலா நிறுவனம் நாளைய தினம் அதன் மின்சார பைக் மாடலையே அறிமுகம் செய்ய இருக்கின்றது என தங்களின் எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கின்றனர். இதற்கு காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓலா அதன் கான்செப்ட் மாடல்கள் சிலவற்றை இந்தியாவில் வெளியீடு செய்திருந்தது.
அதில், நிறுவனத்தின் இ-பைக்குகளும் இடம் பெற்றிருந்தன. இதுதவிர, எம்1 அட்வென்சர் (M1 Adventure), எம்1 க்ரூஸர் (M1 Cruiser), எம்1 சைபர் ரேசர் (M1 Cyber Racer), எம்1 ரோட்ஸ்டர் (M1 Roadster) மற்றும் எம்0 டைமண்ட் ஹில் (M0 Diamond Hill Trademark) ஆகிய புதுமுக மாடல்களுக்கான ரேட்மார்க் பதிவையும் அது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் செய்தது.
ஆகையால், இந்த மாடல்களில் ஏதேனும் ஒன்றும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பேடண்ட் பதிவை செய்திருந்தது. ஆகையால், நாளைய தினத்தில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்படலாமோ என்கிற எதிர்பார்ப்பும் இந்தியர்கள் மத்தியில் தோன்றியிருக்கின்றது.
ஆனால், ஓலா என்ன வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது நாளையே தெரிய வரும். இருப்பினும், வர்த்தக பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே நாளைய தினம் அறிமுகம் செய்யப்படும் என்கிற எதிர்ப்பே வலுவாக எழும்பியிருக்கின்றது. இது ஓர் கழட்டி மாட்டும் பேட்டரி பேக் வசதிக் கொண்ட வாகனம் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
ஆகையால், பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் பேட்டரியை தனியாக கழட்டி எடுத்துச் சென்று சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இது ஓர் கமர்சியல் வகை பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனம் என்பதால் அது சார்ந்த வசதிகள் பல இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக டெலிவரி சேவைக்கு பயன்படும் வகையில் பல்வேறு வசதிகளை அது தனக்குள் தாங்கியிருக்கும். மிக முக்கியமாக அதிக இட வசதியை சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் அது கொண்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த வாகனம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ஓலா வெளியிடவில்லை. அறிமுகத்தின்போதே அந்த வாகனம் பற்றிய அனைத்து முக்கிய தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு பலமடங்கு அதிகரித்து உள்ளது. இந்த நிலையிலேயே சந்தையை அலங்கரிக்கும் நோக்கில் ஓலா புதிய வாகனங்களை களமிறக்கும் பணியில் இறங்கியிருக்கின்றது. அது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் பைக்குகளையும் களமிறக்க உள்ளது.


Click it and Unblock the Notifications








