ஓலாவின் புதிய சலுகை என்ன தெரியுமா? இப்ப வாங்கினா செம்ம ஒர்த்.. ஆனா 26ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்!

இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) உருவெடுத்து இருக்கின்றது. இந்த நிறுவனத்தை வீழ்த்த வேண்டும் என்பதே போட்டி நிறுவனங்களின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. ஆனால், ஓலா நிறுவனத்திற்கோ அதன் இடத்தை விட்டுக் கொடுக்கும் எண்ணும் துளியளவும் இல்லை. இதன் அடிப்படையிலேயே புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகமாக இருக்கட்டும், சலுகைகளை அறிவிப்பதாக இருக்கட்டும் அனைத்தையும் ஓலா மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, தன்னுடைய முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் அந்நிறுவனம் அடிக்கடி சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றது.

இப்போதுகூட ஓர் குறுகிய கால சலுகையை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் அறிவித்து இருக்கின்றது. இந்தியர்களைக் கவரும் விதமாக சுமார் 15 ஆயிரம் ரூபாய்க்கான பலன் திட்டங்களை அது அறிவித்து இருக்கின்றது. எஸ்1 வரிசையில் உள்ள அனைத்து மாடல்களுக்கும் இந்த சலுகைப் பொருந்தும் என அது தெரிவித்து இருக்கின்றது.

Ola electric scooters offer

இந்த சலுகையின்கீழ் புதிதாக ஓலா எஸ்1 எக்ஸ் பிளஸ் (S1 X+) மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றது. இதுதவிர, கிரெடிட் கார்டை பயன்படுத்தி இஎம்ஐ திட்டத்தில் இந்த ஸ்கூட்டரை வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படும் வழங்கப்படும் என கூறப்பட்டு இருக்கின்றது.

மேலும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ரூ. 5 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்பட இருக்கின்றது. இதேபோல், எஸ்1 ப்ரோ (S1 Pro) மற்றும் எஸ்1 ஏர் (S1 Air) ஆகிய மாடல்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

மேலே கூறப்பட்டு சலுகைகளுடன் சேர்த்து கூடுதல் சிறப்பு சலுகையாக ரூ. 2,999 மதிப்புள்ள ஓலா கேர் பிளஸ் (Ola Care+) எனும் சந்தா திட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த சந்தா திட்டத்துடன் சேர்த்து வருடாந்திர விரிவான பாதிப்புகளைக் கண்டறியும் சேவை, சர்வீஸ்க்காக பிக்அப் மற்றும் டிராப் செய்வது, வாகன திருட்டின்போதான உதவி மற்றும் சாலையோர உதவி ஆகியவற்றையும் ஓலா வழங்க இருக்கின்றது.

இந்த அனைத்து சலுகைகளும் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். வருகின்ற 26 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், நேற்றைய (ஜூன் 20) தினமே இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு ஓலா வழங்கத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சந்தையில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மே மாதத்தில், ஓலா நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் ஒட்டுமொத்தமாக 49 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றது. அரசாங்கத்தின் வாஹன் தளத்தின்படி, கடந்த மே மாதத்தில் உள்நாட்டில் மட்டும் 37 ஆயிரத்து 191 யூனிட்களை அது விற்றிருக்கின்றது.

புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எஸ்1 எக்ஸ்-க்கு வாடிக்கையாளர் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதன் டெலிவரி பணிகள் கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓலா எஸ்1 எக்ஸ் சந்தையில் மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2 kWh, 3 kWh மற்றும் 4 kWh ஆகியவையே அவை ஆகும். 2 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 95 கிமீ ரேஞ்ஜை வழங்கும். 3 kWh பேட்டரி பேக் கொண்ட ஆப்ஷனில் ஓர் முழு சார்ஜில் 143 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

4kWh பேட்டரி பேக் கொண்ட ஆப்ஷனில் ஓர் ஃபுல் சார்ஜில் 190 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய சூப்பரான ரேஞ்ஜை தரும் தேர்வுகளையே ஓலா எஸ்1 எக்ஸ் கொண்டுள்ளது. இதனால்தான் இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது.

விலை குறைப்பு நடவடிக்கையால் தற்போது ஓலா எஸ்1 எக்ஸ் 2 kWh ரூ. 74,999க்கும், ஓலா எஸ்1 எக்ஸ் 3 kWh 84,999க்கும், ஓலா எஸ்1 எக்ஸ் 4 kWh 99,999க்கும் விற்கப்படுகின்றது. இதேபோல், எஸ்1 ப்ரோ ரூ. 1.29 லட்சத்திற்கும், எஸ்1 ஏர் மாடல் ரூ. 1.04 லட்சத்திற்கும் மற்றும் எஸ்1 எக்ஸ் பிளஸ் ரூ. 89,999க்கும் விற்கப்படுகின்றது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் டார்கெட் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் மட்டுமல்ல. அது இந்தியாவில் ஆக்டிவா மற்றும் ஃபஸ்ஸினோ போன்ற பெட்ரோல் டூ-வீலர்களுக்கு போட்டியளிக்கும் விதமாகவும் சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியைக் கண்டு ஐசிஇ எஞ்சின் கொண்ட டூ-வீலரை தயாரிக்கும் நிறுவனங்களும் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, June 21, 2024, 21:39 [IST]
English summary
Ola electric unveils electric rush offers on s1 scooters with up to inr 15 000 benefits
மேலும்... #ola #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+