ஓலாவுக்கு இந்தியர்கள் பாடம் கத்து கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. போன மாசம் விழுந்த அடியை அது மறக்கவே மறக்காது!
முன்னணி நிறுவனங்களையே உச்சபட்ச விற்பனையின் வாயிலாக வாயை பிளக்க செய்த நிறுவனமே ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric). உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியில் ஓலா எலெக்ட்ரிக் கொடிக் கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதெல்லாம் போன மாசம் வரை மட்டுமே ஆகும். இந்த மாசம் கதை அப்படி மாறிவிட்டது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இந்த நிறுவனம் நவம்பர் 2024 இல் மாபெரும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது.
கடந்த அக்டோபர் மாதத்தில் விழாக் காலத்தை முன்னிட்டு மாபெரும் விற்பனை வளர்ச்சியை பதிவு செய்த இந்த நிறுவனம் சென்ற நவம்பர் மாதத்தில் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து இருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேநேரத்தில் இந்தியர்கள் இந்த நிறுவனம் பாடம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்களோ என்று நினைக்கவும் செய்திருக்கின்றது.

சமீப சில தினங்களாக ஓலா எலெக்ட்ரிக் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக புகார்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, சில ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கு இந்த வாகனமே வேண்டாம் என கூறி சாலையில் போட்டு அடித்து நொறுக்குவது போன்ற செயல்களில் எல்லாம் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே சென்ற நவம்பர் மாதத்தில் 33 சதவீத விற்பனை வீழ்ச்சியை அது பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மத்திய அரசின் வாகன் (Vahan) தளத்தில் வெளியாகி இருக்கும் தரவுகளின்படியே இந்த தகவல் தெரிய வந்திருக்கின்றது.
2024 அக்டோபரில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஓலா எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகிய நிலையில், 2024 நவம்பரில் வெறும் 27,746 யூனிட்டுகள் மட்டுமே நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. குறைவான விற்பனை பதிவின் காரணமாக நிறுவனத்தின் சந்தைப் பங்கு நவம்பரில் 24 சதவீதமாகக் குறைந்திருக்கின்றது.
என்னதான் மிகப் பெரிய விற்பனை வீழ்ச்சியை ஓலா எலெக்ட்ரிக் சந்தித்து இருந்தாலும் அது அதன் முதல் இடத்தைத் தக்க வைத்திருக்கின்றது. ஆமாங்க, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சர்வசாதாரணமாக எட்டி வரும் 27 ஆயிரம் யூனிட் விற்பனையை தொட மற்ற நிறுவனங்கள் அரும்பாடு பட்டு வருகின்றன.
சொல்லப்போனால் 20 ஆயிரம் யூனிட் விற்பனையை எட்டுவதே பலரின் வாழ்க்கை லட்சியமாக அமைந்திருக்கின்றது. சென்ற நவம்பரில் இந்த நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து இருந்தாலும், வரும் நாட்களில் விற்பனையில் மீண்டும் மாபெரும் வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த நிறுவனம் இரண்டு புதுமுக அடிமட்ட விலைக் கொண்ட எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அது விற்பனைக்குக் களமிறக்கியது.
ஜிக் (Gig) மற்றும் எஸ்1 இசட் (S1 Z) ஆகிய இரண்டு மாடல்களையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதில் ஜிக் ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவான விலையிலும் எஸ்1 இசட் மாடல் ரூ. 60 ஆயிரத்திற்கும் குறைவான விலையிலேயே இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
இதில், ஜிக் என்பது டெலிவரி சேவைக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். அதேவேளையில், எஸ்1 இசட் மாடலை இரண்டு பிரிவிற்குமான வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதாவது, தனி நபர் பயன்பாட்டிற்கான வாகனம் மற்றும் டெலிவரி சேவைக்கான வாகனம் என இரண்டு விதமான பிரிவுகளில் இந்த மாடலை ஓலா எலெக்ட்ரிக் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக்கை விற்பனையில் பின்னுக்கு தள்ள வேண்டும் என்பதே பெருவாரியான நிறுவனங்களின் பிளான் ஆகும். அந்தவகையிலேயே, ஹோண்டா அகன் ஆக்டிவா இ: வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இத்துடன், சியூ1 எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








