டிரைவரே இல்லாமல் ஓடும் ஸ்கூட்டரை தயாரித்த ஓலா! ஆக்டிவா, ஜூபிடர் எல்லாத்துக்கும் சங்கு ரெடி போலிருக்கே!

ஓலா நிறுவனத்தின் சிஇஓ-வான பவிஷ் அகர்வால் சமீபத்தில் (மார்ச் 30) ஓர் பதிவை வெளியிட்டு இருந்தார். ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று ஓர் புதுமுக தயாரிப்பை ஓலா எலெக்ட்ரிக் வெளியிட இருப்பதாகவே அவர் அந்த பதிவின் வாயிலாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையிலேயே அவருடைய அறிவிப்பின்படி, நேற்றைய தினம் ஓலா சோலோ (Ola Solo) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வெளியீடு செய்தது ஓலா எலெக்ட்ரிக். பலரின் கவனத்தை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கவர்ந்துள்ளது. குறிப்பாக, இதன் அறிமுகம் எப்போது அரங்கேறும் என்பதே பலரின் வினாவாக உள்ளது.

Ola solo

நிறுவனம், இப்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இல்லாத பலதரப்பட்ட அம்சங்களை சோலோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக தானாகவே ஓடும் வசதி அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, தலைப்பில் கூறியதைப் போலவே டிரைவரே இல்லாமல் இயங்கும் பிரத்யேக வசதியையே சோலோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓலா எலெக்ட்ரிக் வழங்கி இருக்கின்றது.

இந்த வாகனத்தையே நிறுவனம் நேற்றைய தினம் வெளியீடு செய்தது. இது நூறு சதவீதம் தன்னாட்சி திறன் கொண்டது என்பது மட்டுமல்ல ஏஐ தொழில்நுட்பம் கொண்டதும்கூட. எனவே ரைடர் இல்லாமல் இயங்குவது மட்டுமல்ல, டிரைவரே இல்லாமல் விரும்பிய இடத்திற்கும் இது செல்லும் என தெரிகின்றது.

அதாவது, தானாக ஓடுவது மட்டுமல்ல வழியில் இருக்கும் தடைகளுக்கு ஏற்ப வளைந்து-நெளிந்தும் அது இயங்கும். இத்தகைய திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே ஓலா சோலோ உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய தொழில்நுட்பத்தை இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்த திறனுக்கு எல்எம்ஏ09000 சிப்-பே காரணம் என கூறப்படுகின்றது. ஓலாவின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செல்ஃப் பேலன்ஸ் (self-balancing) வசதிக் கொண்டதும்கூட. ஆமாங்க, ஸ்டாண்டே போடலைனாலும் அது சாயாது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை ஓலா சோலோக் கொண்டிருக்கின்றது.

Ola solo rear

குறிப்பாக, செல்ஃப் சார்ஜிங் (தானாக சார்ஜாகும்) திறன் வழங்கப்பட்டு இருக்கின்றது. சார்ஜ் குறைந்துவிட்டால் அருகில் இருக்கும் சார்ஜிங் பாயிண்டைத் தேடி சென்று தன்னைத் தானே அது சார்ஜ் செய்துக் கொள்ளும். இதற்காக எலெக்ட்ரோ ஸ்நூஸ் குவாண்டம் எனும் அம்சத்தை சோலோவில் ஓலா வழங்கி இருக்கின்றது.

இதுதவிர, பலதரப்பட்ட மொழிகளை அறிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் இது இருக்கும். இத்துடன், முகத்தைக் கண்டறியும் அம்சம், ஹெல்மெட் இருந்தால் மட்டுமே ரைடு ஸ்டார்ட் செய்யும் வசதி, வைப்ரேட் ஆகும் இருக்கை, லிடார் (Light Detection and Ranging), ரேடார் (Radio Detection and Ranging), கேமிரா சிஸ்டம், அல்ட்ரா சோனிக் சென்சார் மற்றும் ஜிபிஎஸ் ஆகிய அம்சங்களையும் இது தாங்கி இருக்கும்.

Ola solo front look

இத்தகைய திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே நேற்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு செய்தது. அத்துடன், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தானாக இயங்கும் வீடியோவையும் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டது. ஆனால், இந்த வீடியோவைப் பார்த்த பலர் இது முட்டாள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது என கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று ஏப்ரல் 1 என்பதாலேயே பலர் இவ்வாறு கருத்து தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், "இது போலி அல்ல. இது எங்களின் தொழில்நுட்பம்" மிக சிறந்த என ஓலா நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்து இருக்கின்றார். எனவே எதிர்காலத்தில் ஓலா நிறுவனம் இந்த தானாக இயங்கும் சோலோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் என தெரிகின்றது.

Ola solo escootr

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா சோலோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விபரம் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலையும் ஓலா எலெக்ட்ரிக் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஓலா மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியைக் காண நேரிடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 2, 2024, 15:09 [IST]
English summary
Ola electric working on autonomous and self balancing e scooter solo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X