ரூ39,999க்கு விற்பனைக்கு வரும் புதிய ஓலா ஸ்கூட்டர்! எல்லாரும் எதிர்பார்த்தது இது தான்!

ஓலா நிறுவனம் தற்போது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை களமிறங்கி உள்ளது. வழக்கமான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இல்லாமல் இது டெலிவரி தொழிலில் இருப்பவர்கள் பயன்படுத்தும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நிறுவனம் கிக் என பெயர் வைத்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன அம்சங்கள் இருக்கிறது இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஓலா நிறுவனம் தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயார் செய்யும் எலெக்ட்ரிக் ஸ்கூடர்கள் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் நிலையில், தற்போது இந்நிறுவனம் b2b செக்மென்ட் டெலிவரி தொழிலில் இருப்பவர்களுக்கான தனி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கி உள்ளது.

ola gig scooter

ஏற்கனவே இது குறித்த டீசர்கள் எல்லாம் வெளியான நிலையில், தற்போது இந்த ஸ்கூட்டர் குறித்த விபரங்களையும் ஓலா நிறுவன வெளியிட்டுள்ளது. இதன் விலையை அறிவித்து இந்த ஸ்கூட்டரை தற்போது இந்திய மக்களுக்காக நிறுவனம் அறிமுகப்படுத்தியும் உள்ளது. இந்த ஸ்கூட்டர் இரண்டு விதமான வேரியன்ட்களில் வருகிறது. கிக் மற்றும் கீக் பிளஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

ஓலா நிறுவனம் இதை டெலிவரி தொழிலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு நபர் அமர்ந்து செல்லும் வகையில் பெரிய சீட் வழங்கப்பட்டுள்ளது. இதன் முன் பகுதியிலும் பின்பகுதியிலும் சரக்கு ஏற்றி செல்ல போதுமான இட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்கூட்டரில் உள்ள இரண்டு வீல்களிலும் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது.

ola gig scooter

ஓலா கிக் மாடலை பொருத்தவரை அதில் 250 வாட்ஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டர் 25 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணம் செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஸ்கூட்டரை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை வாங்கி அப்படியே பயன்படுத்தலாம்.

பெரிய நகரங்களில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் யூலு என்ற நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போலவே இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளதால் அதற்கு நேரடி போட்டியாக இந்த மாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக கிக் பிளஸ் என்ற மற்றொரு வேரியன்டும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓலா கிக் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை 1.5 கிலோ வாட் ஹவர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 45 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்கூட்டரை கட்டாயம் பதிவு செய்து தான் சாலையில் பயன்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கிறது. அதே நேரம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளன.

ஓலா கிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை ஒரு முறை சார்ஜ் போட்டால் 112 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஓலா கிக் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை சிங்கிள் பேட்டரியில் 81 கிலோ மீட்டரும், இரண்டு பேட்டரி ஆப்ஷன் இருந்தால் 157 கிலோ மீட்டரும் ரேஞ்ச் தரும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய சாவிகள் எதுவும் கிடையாது. செல்போன் ஆப் மூலமே ஸ்டார்ட் செய்து பயன்படுத்த வேண்டும். இந்த ஸ்கூட்டர் பேட்டரிகள் விரைவாக சார்ஜ் ஏறிவிடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது0 எவ்வளவு நேரத்தில் சார்ஜ் ஏறும் என்ற விபரங்கள் எதையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. இந்நிலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிஜிட்டல் ரெண்டர் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டுள்ளன.

இதுவரை வெளியாகவில்லை சீட் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது. ஸ்கூட்டர் மொத்தம் எவ்வளவு எடை கொண்டதாக இருக்கிறது. எவ்வளவு லோடை இதில் எடுத்து செல்ல முடியும். வீல் அளவு என்ன என்ற விவரங்கள் எல்லாம் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் விலை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓலா கிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை ரூபாய் 39,999 என்ற விலையிலும், ஓலா கிக் பிளஸ் என்ற ஸ்கூட்டரின் விலையை பொருத்தவரை ரூபாய் 49,999 என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் தற்போது கிக் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இது b2b பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் இதை நேரடியாக மக்களுக்காக விற்பனை செய்யப் போகிறதா அல்லது மற்ற நிறுவனங்கள் மூலம் டெலிவரி பார்ட்னர்களுக்கு விற்பனை செய்யப் போகிறதா என்ற விரிவான விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் குறைந்த விலையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது நிச்சயம் பலரை கவர்ந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 26, 2024, 18:10 [IST]
English summary
Ola gig scooter electric launch prices start rs 39999
மேலும்... #ola #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+