யாருமே எதிர்பார்க்கல.. இணையத்தில் வெளியாகிய ஓலா எலெக்ட்ரிக் பைக்கின் வரை படம்.. ஏதோ பெரிய பிளான்ல இருக்காங்க!

மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனமே முன்னணியில் உள்ளது. இதனாலேயே இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன உலகின் மகுடம் சூடா மன்னனாக அது விளங்குகின்றது. மேலும், இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் ஓலா எலெக்ட்ரிக் மிக தீவிரமாக உள்ளது.

இதன் அடிப்படையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அது அறிவித்து வருகின்றது. அந்தவகையில், கடந்த நாட்களில் பல்வேறு சிறப்பு சலுகை திட்டங்களை மின்சார இரண்டு சக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக ஓலா எலெக்ட்ரிக் அறிவித்திருக்கின்றது. அதுதவிர, ஓலா எஸ்1 எக்ஸ் எனும் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய மிகவும் விலை குறைவான தேர்வு ஒன்றையும் அது விற்பனைக்குக் களமிறக்கியது.

Ola electric bike design patent

இந்த நிலையிலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதுமுக மின்சார இரண்டு சக்கர வாகனங்களின் வாயிலாகவும் இந்தியர்களைத் தன் வசம் ஈர்க்கும் முயற்சியில் களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஓர் எலெக்ட்ரிக் புதுமுக மின்சார பைக் (Electric Bike)-கிற்கான பேடண்ட் (Patent) உரிமத்தை தற்போது நாட்டில் பெற்றிருக்கின்றது.

அது ஸ்போர்ட்ஸ் வகை பைக் ஆகும். இதற்கே தற்போது ஓலா எலெக்ட்ரிக் பேடண்ட் உரிமத்தைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. மேலும், அது பேடண்ட் உரிமம் பெற்றிருக்கும் இ-பைக்கின் வரைபடமும் வெளியாகி இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின்கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன.

Ola electric motorcycle design patent

ஆனால், இந்த நிலை சீக்கிரமே மாற இருக்கின்றது என்பது ஓலாவின் இந்த செயலின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஆமாங்க, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்கள் பிரிவைத் தொடர்ந்து, மின்சார பைக் பிரிவிலும் கால் தடம் பதிக்க உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் ஏற்கனவே சில கான்செப்ட் இ-பைக் மாடல்களை நாட்டில் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே அது ஓர் புதுமுக எலெக்ட்ரிக் பைக்கிற்கான பேடண்ட் உரிமத்தைப் பெற்றுள்ளது. விரைவில் இந்த பைக்கின் உற்பத்தி பணிகளை ஓலா எலெக்ட்ரிக் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இது விற்பனைக்கு வரும்போது அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய எலெக்ட்ரிக் பைக்காகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே பைக்கின் வரைபடம் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், தற்போது வெளியாகி இருக்கும் வரைப்படத்தை வைத்து பார்க்கையில் இந்த எலெக்ட்ரிக் ஆரம்ப நிலை மாடலாக இருக்கக் கூடும் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளையும் ஓலா இதுவரை வெளியிடவில்லை.

ஆகையால், இந்த புதுமுக எலெக்ட்ரிக் பைக்கில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இடம் பெறும்? ஓர் முழு சார்ஜில் எத்தனை கிமீ தூரம் பயணிக்க முடியும் என்கிற விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. விரைவில் இதுபற்றிய தகவல்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இந்த ஆண்டு இறுதிக்குள் ஓலா இதன் அறிமுகம் பற்றிய தகவலையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எலெக்ட்ரிக் பைக் பிராக்டிக்கலான தோற்றத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் சீக்கிரமே அது விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை டார்க் க்ரடோஸ் ஆர் (Tork Kratos R) மற்றும் ரிவோல்ட் ஆர்வி400 (Revolt RV400) ஆகிய எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு போட்டியாக அமையும். இப்போதைக்கு இவையே இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் எலெக்ட்ரிக் பைக்காக காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே இப்போது அதிகளவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கே நல்ல விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே விற்பனை வரவேற்பை எலெக்ட்ரிக் பைக்கின் பக்கம் திருப்பும் முயற்சியில் ஓலா களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 9, 2024, 18:21 [IST]
English summary
Ola has patented new electric bike design
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+