ஓலா ஸ்கூட்டர் ஓனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இனி ஸ்கூட்டர் ரிப்பேர் ஆனா சந்தோஷம்தான் போங்க

ஓலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிறகான சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் இனி விரைவாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவும் எதிர்காலத்தில் பிரச்சினை வராமல் பாதுகாப்பதற்கான தொழிற்நுட்பத்தை உட்படுத்தவும், பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல் சரி செய்ய காலதாமதம் ஆகும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கான இலவச ஓலா கேப் கூப்பன்களையும் வழங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்து வருகிறது. இதனால் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ola hyper service

இது ஒரு பக்கம் ஓலா நிறுவனத்திற்கு நல்ல செய்தியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் ஏற்கனவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிய வாடிக்கையாளர்கள் பலர் பல்வேறு குற்றச்சாட்டுகளை நிறுவனத்தின் மீது வைத்து வருகிறார்கள். முக்கியமாக ஓலா நிறுவனம் ஒலா வாகனத்தை சர்வீஸ் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். மேலும் ஓலா வாகனங்கள் அடிக்கடி பழுதாகி போவதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் விதமாக ஓலா நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஓலா நிறுவனம் விற்பனைக்கு பிறகான சர்வீஸ் திட்டத்தை விரிவுபடுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மூன்று விதமான அப்டேட்கள் தற்போது செய்யப்பட உள்ளன. இவை எல்லாம் செய்யப்படும் போது நிச்சயம் ஓலா வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவை கிடைக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ola hyper service

தற்போது ஓலா நிறுவனம் இந்தியா முழுவதும் 500க்கும் அதிகமான சொந்த சர்வீஸ் சென்டர்களை வைத்துள்ளது. இதை வரும் டிசம்பர் மாதத்திற்குள் 100 உயர்ந்த திட்டமிட்டுள்ளது. இப்படியாக உயர்த்தும் பட்சத்தில் அதிக வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ஓலா சர்வீஸ் சென்டருக்கு வாகனத்தை கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த முயற்சியாக வெளியில் டூவீலர் ஒர்க் ஷாப் நடத்தி வரும் மெக்கானிக்களுக்கு ஓலா ஸ்கூட்டர்களை சர்வீஸ் செய்யும் பயிற்சியை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் சுமார் ஒரு லட்சம் மெக்கானிக்கரை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பயிற்சி பெற்றவுடன் இவர்கள் நெட்வொர்க் பார்ட்னர் புரோகிராமிற்க்குள் கொண்டுவரப்பட்டு அவர்கள் கடையிலேயே ஓலா வாகனத்தை சர்வீஸ் செய்யும் வாய்ப்பையும் வழங்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகமான வாடிக்கையாளர்கள் சிறு சிறு பிரச்சனைகள் எல்லாம் அருகில் உள்ள இதுபோன்ற நெட்வொர்க் பார்ட்னர் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றாலே அவர்களது வாகனத்தை சர்வீஸ் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் தற்போது சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினை சர்வீஸ் செய்வதற்கு காலதாமதம் ஆவது தான். இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரே நாளில் வாகனத்தை சர்வீஸ் செய்யும் உத்திரவாதத்தை வழங்குகிறது. இதன்படி வாகன ஓட்டிகள் தங்கள் வாகனம் ரிப்பேர் ஆகிவிட்டது. அதை சரி செய்ய வேண்டும் என ஓலா நிறுவனத்தின் வாகனத்தை புக் செய்தால் ஒரே நாளுக்குள் அந்த சர்வீஸை அந்நிறுவனம் செய்து கொடுக்கும்.

தவறும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக பயன்படுத்த ஓலா எஸ் ஒன் ஸ்கூட்டரை அவர்களுக்கு வழங்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அவர்களது சொந்த ஸ்கூட்டர் சரியாகும் வரை வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக வழங்கும் ஓலா எஸ்1 ஸ்கூட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதலாக ஓலா கேர் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு இலவசமான கேப் சேவை கூப்பன்களையும் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இப்படியாக ஓலா கேர் பிளஸ் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்கூட்டர் ரிப்பேர் ஆகிவிட்டால் இந்த கூப்பன்களை வைத்து இலவசமாக ஓலா கேப்களை புக் செய்து அவர்களது ரயில்களை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் தற்போது ஓலா வாடிக்கையாளர்களை குஷிபடுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இது போக ஓலா மூவ் ஒஎஸ் அடுத்த அப்டேட்டில் பல ரிப்பேர்களை ஆன்லைன் மூலமே சரி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு அப்டேட்டை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஓலா ஸ்கூட்டர்கள் பழுதாவது பெரும் அளவில் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா ஸ்கூட்டர்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் பலர் அதை சர்வீஸ் கொடுத்து அதிகம் கவலைப்படுகிறார்கள். இதனால் புதிய வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் வாகனங்களை வாங்க தயங்கி வரும் நிலையில் இப்படியான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிச்சயம் ஓலா நிறுவனத்திற்கு ஒரு நல்ல முன்னேற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2024, 19:10 [IST]
English summary
Ola hyper service ceo bhavish aggarwal doubles service centres
மேலும்... #ola #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+