திங்கள் ஏன்தான் வருதோனு நினைப்பவரும் வர திங்களை ஆவலோடு எதிர்பார்க்கறாங்க! ஏன் தெரிஞ்சா நீங்களும் ஒருவராயிருவீக
பொதுவாக திங்கள் கிழமையை வெறுப்பவர்களே நம்மில் அதிகம். ஆனால், வருகின்ற திங்கட்கிழமையை யாரும் வெறுக்க மாட்டார்கள் என தெரிகின்றது. குறிப்பாக, வரும் திங்களை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களே அதிகம். இதற்கு காரணம் ஓர் பிரபலத்தின் சமீபத்திய 'எக்ஸ்' பதிவு ஆகும்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ-வே அந்த எக்ஸ் பதிவிற்குச் சொந்தக்காரர் ஆவார். அவர் இன்று காலை ஓர் பதிவைப் போட்டிருந்தார். அந்த பதிவில் அவர் கூறியிருந்ததாவது, வருகின்ற திங்கள்கிழமை புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் அறிவித்திருக்கின்றார். இதனால்தான் பலர் தூக்கம் கெட்டு போயிருக்கின்றனர்.

ஆமாங்க இப்போது இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்பிற்கு என தனி ரசிக பட்டாளமே உருவாகி இருக்கின்றது. இவர்களின் எதிர்பார்ப்பையே மிகப் பெரிய அளவில் அவரின் பதிவு ஈர்க்கத் தொடங்கி இருக்கின்றது. ஆனால், என்ன தயாரிப்பை ஓலா விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அவர் ஓர் புதிய தயாரிப்பு என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கின்றார். எனவே, ஓலா என்ன தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பதே பலரின் சந்தேகமாக அமைந்து இருக்கின்றது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் நிறைய புதுமுக வாகனங்கள் (பைக் மற்றும் கார்கள்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
அந்தவகையில், ஏத்தர் நிறுவனம் குடும்பங்களுக்கான மின்சார வாகனமாக அதன் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், ஆம்பியர் நெக்சஸ், பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ் மற்றும் அல்ட்ராவைலட் நிறுவனத்தின் புதுமுக எலெக்ட்ரிக் பைக் ஆகியவை அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த பட்டியலில் பிஎம்டபிள்யூவின் தயாரிப்பை தவிர்த்து மற்ற அனைத்து தயாரிப்புகளும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்.
மேலும், அல்ட்ராவைலட் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் இந்த நிறுவனங்கள் மட்டும் என்ன மாதிரியான தயாரிப்பை அறிமுகம் செய்ய இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் அது பற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, வருகின்ற திங்கள் (ஏப்ரல் 1) அன்று ஓலாவின் புதிய தயாரிப்பு என்னவென்று நமக்கு தெரிய வரும்.
அது ஆட்டோவாக இருக்கலாம், அல்லது எலெக்ட்ரிக் பைக்காக இருக்கலாம் அல்லது புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கலாம். இதில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சமீபத்தில் ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. எனவே வரும் திங்கள் கிழமை எலெக்ட்ரிக் ஆட்டோவே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஓலா எஸ்1 ப்ரோ, ஓலா எஸ்1 ஏர் மற்றும் ஓலா எஸ்1எக்ஸ் பிளஸ் ஆகிய மாடல்களையே இப்போதைய நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ஓலா எஸ்1எக்ஸ் பிளஸ் இருக்கின்றது.
இதன் ஆரம்ப விலை ரூ. 84,999 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஓலா நிறுவனம் மார்ச் மாத சிறப்பு சலுகையாக ரூ. 25 ஆயிரம் தள்ளுபடியில் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த சலுகை நாளை இரவோடு முடிவடைய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
எனவே ஓலா எஸ்1எக்ஸ் பிளஸ் வருகின்ற 1ஆம் தேதியில் இருந்து ரூ. 1.09 லட்சத்திற்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல் சலுகை காரணமாக எஸ்1 ஏர் ரூ. 1.04 லட்சத்திற்கும், எஸ்1 ப்ரோ 1.29 லட்சத்திற்கும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
இந்த சலுகையால் வருகின்ற மாதத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துக் காணப்படும் என எதிர்பார்க்ப்படுகின்றது. சென்ற பிப்ரவரி மாதத்தில் 35 ஆயிரம் யூனிட்டுகள் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. முந்தைய எந்தவொரு மாதத்திலும் இல்லாத ஓர் மாபெரும் விற்பனை எண்ணிக்கை இதுவாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2023 பிப்ரவரியைக் காட்டிலும் இது 100 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். இந்த மாதிரியான மாபெரும் விற்பனை வளர்ச்சியைப் பெறும் நோக்கிலேயே ஓலா தற்போது மார்ச் மாத சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது. மேலும், ஏப்ரல் மாதத்தில் புதிய தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியிலும் அது களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








