கழட்டி மாட்டும் வசதி கொண்ட பேட்டரிக்கு காப்புரிமை பெற்ற ஓலா... இந்த வசதி வேற வரபோகுதா!

இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டுசக்கர வாகன (Electric Two-Wheeler) உற்பத்தி நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), புதிய வகை பேட்டரி பேக் (Battery Pack)கிற்கு இந்தியாவில் காப்புரிமைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன மாதிரியான பேட்டரி பேக்கிற்கு காப்புரிமை (Patent)-ஐ பெற்றிருக்கின்றது என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மின்சார இரண்டுசக்கர வாகன பிரிவை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கின்றது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளே மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு பின்னாடியே இந்திய இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான்களான டிவிஎஸ் (TVS)-ம், பஜாஜ் (Bajaj)-ம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Ola removable battery

இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டுசக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா எலெக்ட்ரிக் ஓர் புதிய வகை பேட்டரி பேக்கிற்கான காப்புரிமையைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது, கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக் (Removable Battery)-கிற்கே காப்புரிமையைப் பெற்றிருக்கின்றது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த வகை பேட்டரி பேக்கை ஏற்கனவே தங்களுடைய தயாரிப்புகளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், ஓலா இப்போதே இந்த வகை பேட்டரி பேக்கிற்கான காப்புரிமையைப் பெற்று இருக்கின்றது.

இதன் வாயிலாக எதிர் வரும் நாட்களில் ஓலா எலெக்ட்ரிக்-இன் தயாரிப்புகளில் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வரை நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் நிலையாக பொருத்தப்பட்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 (S1) வரிசையில், எஸ்1 எக்ஸ் (S1 X), எஸ்1 ஏர் (S1 Air) மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) ஆகிய ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் விரைவில் ஓலா எலெக்ட்ரிக் அதன் எலெக்ட்ரிக் பைக்குகளையும் இணைக்க இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஓர் புதுமுக இ-பைக்கிற்கான பேடண்ட் உரிமத்தையும் பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே தற்போது புதிய வகை பேட்டரி பேக்கிற்கான காப்புரிமையையும் ஓலா எலெக்ட்ரிக் பெற்றிருக்கின்றது. இந்த பேட்டரி பேக் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மட்டுமின்றி எலெக்ட்ரிக் பைக்குகளிலும் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பேட்டரி பேக் அதிக பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், ஐபி67 தர சான்று பெற்றதாகவும் அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஃபிக்ஸ்டு டைப் பேட்டரி பேக்குகளே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வாகனத்துடன் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும் என்கிற சூழல் இருக்கின்றது. இது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்கள் சிலருக்கு தலை வலி வழங்கும் செயலாக இருக்கின்றது.

காரணம், சில அடுக்குமாடி குடியிருப்புகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்கான வசதி வாய்ப்பு இல்லாத சூழலே தென்படுகின்றது. எனவே பலர் பொது சார்ஜிங் மையத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் இருக்கின்றது. இதுதவிர, சில நெருக்கடியான குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் அவர்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சார்ஜ் செய்ய முடியாத சூழலே நிலவுகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே ஓலா எலெக்ட்ரிக் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்கை அறிமுகம் செய்வதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது. இது பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களால் அவர்களின் வாகனத்தில் பேட்டரியை தனியாக கழட்டிச் சென்று வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2024, 5:00 [IST]
English summary
Ola patents for removable ev battery here is more details
மேலும்... #ola #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+