எல்லாரோட கண்ணும் ஓலாவோட இந்த இ-பைக் மேலதான்.. விலையை பற்றி கவலைப்படாம வாங்கலாம் போலையே!

ஓலா எலெகட்ரிக் (Ola Electric) நிறுவனம் யாருமே எதிர்பார்த்திராத மிகவும் குறைவான விலையில் தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)-ஐ அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இந்தியாவின் 78 சுதந்திர தினமான நேற்று (ஆகஸ்டு 15 இல்) நடைபெற்ற சங்கல்ப் 2024 எனும் நிகழ்வின் வாயிலாகவே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், அதன் எலெக்ட்ரிக் பைக் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையிலேயே அதனை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ரோட்ஸ்டர் (Ola Roadster) எனும் பெயரிலேயே ஓலா இ-பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இந்த இ-பைக் விற்பனைக்குக் கிடைக்கும். ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X), ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro) ஆகியவையே அவை ஆகும். மூன்றிலும் வெவ்வேறு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

Ola roadster pro

இதேபோல், இவை மூன்றும் உருவத்தில் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. இதில், பலரின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக ரோட்ஸ்டர் ப்ரோ சீரிஸ் உள்ளது. இதைப்பற்றின சுவாரஷ்யமான டாப் ஐந்து முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

பேட்டரி பேக், ரேஞ்ஜ் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் விபரம்: ஓலா நிறுவனம் ரோட்ஸ்டர் ப்ரோவில் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளை வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இரண்டுமே அதிக பவர்ஃபுல்லான பேட்டரி பேக்குகள் ஆகும். 8 kWh மற்றும் 16 kWh ஆகியவையே அவை ஆகும்.

இத்துடன், அதிக பவர்ஃபுல்லான மோட்டாரே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 52 kW எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 194 கிமீ ஆகும். இது மட்டுமில்லைங்க வெறும் 1.9 செகண்டுகளிலேயே இந்த பைக் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

இந்த எலெக்ட்ரிக் பைக் இந்தியாவின் அதிக பவுர்ஃபுல்லான இ-பைக்காக அறியப்படும் அல்ட்ராவைலட் எஃப்77 மேக் 2-வைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றக் கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது. அல்ட்ராவைலட் எஃப் 77 மேக் 2 (Ultraviolette F77 Mach 2)-வின் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிமீ ஆகும்.

இதுமட்டுமில்லைங்க, இந்த எலெக்ட்ரிக் பைக்கின் 16 kWh பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்வு அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 579 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவின் மிக அதிக ரேஞ்ஜை வழங்கும் பைக்கும் இதுவே ஆகும். ஆமாங்க, இந்தியாவில் இப்போது விற்பனையில் இருக்கும் வேறு எந்த எலெக்ட்ரிக் பைக்கும் இந்த அளவிற்கு அதிக ரேஞ்ஜை வழங்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அட்டகாசமான டிசைன்: ரேஞ்ஜ் திறன் மற்றும் செயல்திறன் என அனைத்திற்கும் ஏற்றவாறு இந்த பைக்கின் தோற்றத்தையும் ஓலா எலெக்ட்ரிக் தயார் செய்திருக்கின்றது. குறிப்பாக, இதன் முகப்பு பகுதி ஹாலிவுட் திரைப்படங்களில் ரோபோ போலீஸ்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. ஹெட்லைட் கவுல் மற்றும் டிஆர்எல் ஆகியவையே இந்த லுக்கை ரோட்ஸ்டர் ப்ரோவிற்கு வழங்குகின்றது. தொடர்ந்து, மிகவும் மெல்லிய தேகம் கொண்ட வாகனமாகவும் இதை ஓலா தயார் செய்திருக்கின்றது.

ஆனால், முன் பக்கம் பெரிய பேட்டரி பேக் காரணமாக சற்று தடிமனானதாகக் காட்சியளிக்கின்றது. இத்துடன், இந்த இ-பைக்கிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக டூயல் டோன் நிறத்தை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இருக்கையைப் பொருத்த வரை இதில் ஸ்பிளிட் வகை இருக்கையே வழங்கப்பட இருக்கின்றது. ஆனால், நவீன கால ஸ்போர்ட் லுக்கில் இந்த தேர்வுக் காட்சியளிக்கும்.

சிறப்பம்சங்கள் விபரம்: ரோட்ஸ்டர் ப்ரோ-வை அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாகவும் ஓலா எலெக்ட்ரிக் தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், புதிய 10 அங்குல தொடுதிரை டிஎஃப்டி ஸ்கிரீனே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ப்ளூடூத் இணைப்பு மற்றும் க்ரூட்ரிம் ஏஐ டெக்னாலஜியைக் கொண்ட திரை ஆகும்.

இத்துடன், திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலையும் இந்த திரை வழங்கும். மேலும், மிகுந்த அட்வான்ஸ்டு அம்சங்களான அடாஸ் (Advanced Driver Assistance Systems) அம்சத்தையும் இந்த பைக்கில் ஓலா வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இது மட்டும் இந்த இ-பைக்கில் இடம் பெறும் எனில் இதுவே இந்தியாவின் முதல் அடாஸ் அம்சம் கொண்ட பைக்காக மாறும்.

மூவ்ஓஎஸ் 5 அப்டேட்டட் சாஃப்ட்வேரையும் இந்த இ-பைக்கில் வழங்க இருப்பதை ஓலா எலெக்ட்ரிக் உறுதிப்படுத்தி இருக்கின்றது. மேலும், கூடுதல் அம்சங்களாக டிராக்சன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல் மற்றும் நான்கு விதமான ரைடிங் மோட்கள் (ஈகோ, நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர்) ஆகிய அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும்.

பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் பற்றிய விபரம்: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஸ்டீல் ஃப்ரேமைக் கொண்டே தயார் செய்திருக்கின்றது. இத்துடன், சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு அப்சைடு டவுன் ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதைத் தொடர்ந்து, சூப்பரான பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த இ-பைக்கில் முன் மற்றும் பின் வீலில் டிஸ்க் பிரேக்குளும், ஏபிஎஸ் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. எனவே ரைடு விஷயத்தில் இந்த இ-பைக் மிகவும் தரமானதாக இருக்கும் என தெரிகின்றது.

விலை, புக்கிங் மற்றும் டெலிவரி விபரம்: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ரோட்ஸ்டர் ப்ரோ-வின் 8 kWh வேரியண்டிற்கு ரூ. 1,99,999-ம், 16 kWh பேட்டரி பேக் தேர்விற்கு ரூ. 2,49,999-ம் விலை நிர்ணயம் செய்திருக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இதற்கான ரிசர்வேஷன் பணிகள் ஆகஸ்டு 15 முதலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் டெலிவரி பணிகள் 2026 நிதியாண்டின் இறுதி காலாண்டிலேயே தொடங்கப்பட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன உலகின் மகுடம் சூடப்படாத பிராண்டாக ஓலா எலெக்ட்ரிக் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இடத்தையே தக்க வைத்துக் கொள்ளும் ஓலா நிறுவனம் இ-பைக் உள்ளிட்ட இன்னும் பல முக்கிய தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 17, 2024, 11:00 [IST]
English summary
Ola roadster pro e bike top 5 details to know features and price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+