எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக எஸ்1 எக்ஸ் (S1 X) மாடல் இருக்கின்றது. இதன் டெலிவரி பணிகள் எப்போது தொடங்கும் என்கிற தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. இம்மாத இறுதிக்குள் அது தொடங்கிவிடும் என்றே தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேரியண்ட் (Varient) மற்றும் பேட்டரிபேக் ஆப்ஷன் (Battery Pack Option) விபரங்கள்: ஓலா எஸ்1 எக்ஸ் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எஸ்1 எக்ஸ் (S1 X) மற்றும் எஸ்1 எக்ஸ் பிளஸ் (S1 X+) ஆகியவையே அவை ஆகும்.

Ola s1 x

இதில் எஸ்1 எக்ஸ் பிளஸ் ஒற்றை பேட்டரி பேக் ஆப்ஷனிலும், எஸ்1 எக்ஸ் மூன்று விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். அந்தவகையில், 2 kWh, 3 kWh மற்றும் 4 kWh ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்களே இந்த எஸ்1 எக்ஸ் மாடலில் வழங்கப்படுகின்றது.

ஓலா எஸ்1 எக்ஸ் 2 kWh பேட்டரி பேக் கொண்ட ஆப்ஷனின் முக்கிய சிறப்புகள்: இந்த தேர்வில் ஓர் முழு சார்ஜில் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் விலையும் மிக மிக மலிவுதான். ரூ. 69,999 மட்டுமே அதன் விலை ஆகும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. 10.9 செமீ அளவுக் கொண்ட திரை, வழக்கமான சாவி ஆகியவையே இதன் சிறப்பு வசதிகள் ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 4.1 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும்.

வீட்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது 100 சதவீத சார்ஜை வெறும் 5 மணி நேரங்களில் எட்டிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய ரைடிங் மோட்களே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. சைடு ஸ்டாண்டு அலர்ட், ரிவர்ஸ் மோட், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் செயலி உள்ளிட்ட வசதிகள் இதில் வழங்கப்பட்டு இருக்கும்.

ஓலா எஸ்1 எக்ஸ் 3 kWh பேட்டரி பேக் கொண்ட ஆப்ஷனின் முக்கிய சிறப்புகள்: இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். ஓர் முழு சார்ஜில் இதில் 143 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இதனால் வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும்.

இந்த தேர்வை வீட்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது ஃபுல்லாக சார்ஜ் செய்ய 7.4 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். மற்றபடி சிறப்பம்சங்கள் மற்றும் திரை உள்ளிட்டவற்றில் மேலே பார்த்த 2 kWh ஆப்ஷனும், 3 kWh ஆப்ஷனும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலை ரூ. 84,999 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஓலா எஸ்1 எக்ஸ் 4kWh பேட்டரி பேக் கொண்ட ஆப்ஷனின் சிறப்பம்சங்கள்: மேலே பார்த்த இரண்டு ஆப்ஷன்களைக் காட்டிலும் அதிக சிறப்புகளைத் தாங்கியதாக இந்த பேட்டரி பேக் தேர்வு காட்சியளிக்கின்றது. 4.3அங்குல திரை, ஃபுல் சார்ஜில்190கிமீ டிராவல் மற்றும் டாப் ஸ்பீடு மணிக்கு 90கிமீ ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை இதுக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ.99,999 ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும்.

ஓலா எஸ்1 எக்ஸ் பிளஸ்-இன் சிறப்பம்சங்கள்: இதில் ஓர் முழு சார்ஜில் 151 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். இதனால் வெறும் 3.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும்.

மேலே பார்த்த மூன்று தேர்வுகளிலும் இல்லாத சிறப்பு வசதிகளை இதில் காண முடியும். சாவியே இல்லாமல் பயணம் மேற்கொள்ளுதல், 5 அங்கு திரை என ஏகப்பட்ட வசதிகளை இதில் ஓலா எலெக்ட்ரிக் வழங்கி இருக்கின்றது. இதன் விலை ரூ. 84,999 மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய பலதரப்பட்ட சிறப்புகளைத் தாங்கிய மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளையே இம்மாத முடிவிற்குள் தொடங்க இருப்பதாக ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கின்றது. இதுதவிர ஓலா தன் வசம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்பொருட்டு 8 ஆண்டுகள் / 80 ஆயிரம் கிமீ வாரண்டி திட்டத்தை எந்தவொரு கூடுதல் கட்டணமும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, கூடுதல் கட்டணத்தின்கீழ் கூடுதல் கிமீ வாரண்டிகளையும் அது வழங்கிக் கொண்டிருக்கன்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2024, 11:59 [IST]
English summary
Ola s1x deliveries will start from end of april
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+