ஓலா எஸ்1எக்ஸ் ஸ்கூட்டர் வச்சிருக்கீங்களா? வந்துடுச்சு புது அப்டேட்!
ஓலா நிறுவனம் தனது எஸ்1எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புதிய அப்டேட்டுகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த ஸ்கூட்டரில் இல்லாத பல்வேறு புதிய அம்சங்கள் தற்போது இந்த அப்டேட் மூலம் கிடைத்துள்ளன. இந்த அப்டேட்டை ஓலா எஸ்1எக்ஸ் வாடிக்கையாளர்கள் தற்போது சர்வீஸ் சென்டருக்கு செல்லாமல் தங்கள் வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்து கொள்ள முடியும். இதற்கு கட்டணமும் செலுத்த தேவையில்லை. புதிய அப்டேட்டில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் வந்துள்ளன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1எக்ஸ் என்ற ரேஞ்சில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்கூட்டரிலேயே பல்வேறு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி, 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி, 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி என்ற ஆப்ஷன்களெல்லாம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.

இந்நிலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஓலா நிறுவனம் தற்போது புதிய அப்டேட்டை கொடுத்துள்ளது. அதன்படி இந்த அப்டேட் எல்லாம் போட்டியை மூலம் அப்டேட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அப்டேட்களை பெற வாடிக்கையாளர்கள் சர்வீஸ் சென்டருக்கு வர தேவையில்லை. ஆன்லைன் மூலமே இது அப்டேட்களை தங்கள் ஸ்கூட்டரில் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதிதாக வெக்கேஷன் மோடு என்ற புதிய மோடை அப்டேட்டில் வழங்கியுள்ளது. இந்த மேடை வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருக்கும் போது பயன்படுத்த வேண்டியதாக தெரிவித்துள்ளது. பொதுவாக எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள பேட்டரிகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சார்ஜ் செய்யாமல் இருந்தால் அதில் இருக்கும் சார்ஜ் குறைந்து கொண்டே போகும்.

அது மட்டுமல்லாமல் அது ஸ்கூட்டரின் பேட்டரியை பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. இந்த அபாயத்திலிருந்து விடுபட ஓலா நிறுவனம் வெக்கேஷன் மோடு என்ற புதிய மோடை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம் ஸ்கூட்டர் டீப் ஸ்லீப்பிற்கு செல்லும். இதனால் பேட்டரியில் இருக்கும் சார்ஜ் 200 நாட்கள் சார்ஜ் போடாமல் இருந்தாலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் சார்ஜ் குறையாமல் இருக்கும்.
அடுத்ததாக இந்த அப்டேட்டில் அட்வான்ஸ் ரீஜென் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆன் செய்து நகராமல் இருந்தால் அதன் பேட்டரி சார்ஜ் வீணாக குறைந்து கொண்டிருக்கும். இந்த சார்ஜை பயன்படுத்தியே மீண்டும் இந்த பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பம் தான் பேட்டரி ரீஜென் தொழில்நுட்பம் இதை அட்வான்ஸ்டு தொழில்நுட்பமாக அப்டேட் செய்து இந்த அப்டேட்டில் ஓலா நிறுவனம் தனது எஸ்1எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக வழங்கி உள்ளது.

இதுபோக தற்போது கூடுதல் அம்சங்களாக ஃபைண்ட் மை ஸ்கூட்டர் என்ற தொழில்நுட்பம் அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி உங்கள் செல்போன் ஆப் மூலம் உங்கள் ஸ்கூட்டரை தேட விரும்பினால் ஒரு பெரிய பார்க்கிங்கில் உங்கள் ஸ்கூட்டர் எங்கு இருக்கிறது என்பதை தேடுவதற்காக ஒரு பட்டனை அழுத்தினால் ஸ்கூட்டர் தன்னைத்தானே அடையாளம் காட்டிக் கொள்ளும் வகையில் லைட்டை லிங்க் செய்யும் அந்த ஆப்ஷனும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இது போக ரைடர்களுக்கான தகவல்கள் பேட்டரி சார்ஜ் குறித்த தகவல்கள் பேட்டரி உபயோகம் குறித்த தகவல்கள் எல்லாம் ஸ்கூட்டரில் டிஸ்ப்ளே ஆகும்படியும் அதே நேரம் செல்போன் ஆப்-ல் வரும்படியும் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. நாம் முன்னரே சொன்னது படி இந்த அப்டேட்டுகளை பெற வாடிக்கையாளர்கள் சர்வீஸ் சென்டர் செல்ல தேவை இல்லை. அவர்கள் பைக்கிலேயே ஆன்லைன் மூலம் இதை அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஓலா எஸ்1எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது அந்நிறுவனம் குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச பேட்டரி பேக்கப்பான 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கப்பை பொறுத்தவரை 193 கிலோமீட்டர் அளவுக்கு ரேஞ்ச் தரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது ரூ 99,999 என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் தனது எஸ்1எக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு இது அப்டேட்டை வழங்கியதால் வாடிக்கையாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். வாகனம் வாங்கும் போது இந்த அம்சங்கள் எல்லாம் இருக்கிறது என சொல்லாமலேயே தற்போது இந்த அம்சங்களை வழங்கியதால் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கு நன்மதிப்பு உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications









