ஓலா ஸ்கூட்டர்களின் விலையும் எடையும் தரைமட்டத்துக்கு குறையப்போகுது! எப்படி தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஓலா நிறுவனம் விரைவில் தங்கள் ஸ்கூட்டர்களில் சாலிட் ஸ்டேட் பேட்டரிகளை பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் என்றால் என்ன இதை எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது. இதனால் மக்களுக்கு என்ன பலன் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஓலா ஏத்தர் போன்ற நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு இந்த செக்மெண்டில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் விற்பனையாகும் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா நிறுவனத்தை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே உள்ளன.

ola solid state battery

இந்நிலையில் ஓலா நிறுவனம் தற்போது தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சாலிட் ஸ்டேட் பேட்டரி தொழில்நுட்பத்தை உட்படுத்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் ஏற்கனவே உறுதி செய்துள்ளார். இது குறித்து ஆய்வு நிறுவனம் துவங்கி உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் இந்த ஆய்வு ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள பேட்டரி தொழில்நுட்பத்திலேயே சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் தான் ஸ்டிராங்காகவும் அதிக நவீன தொழில்நுட்பங்களை கொண்டதாகவும் கருதப்படுகிறது. இந்த பேட்டரியை பயன்படுத்துவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் அதிகமாகும் அதே நேரம் பாதுகாப்பும் அதிகரிக்கும் என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது.

ola solid state battery

தற்போது பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்களில் எலக்ட்ரோ லைட்டை அடிப்படையாகக் கொண்ட லித்தியம் அயான் பேட்டரிகளை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. இருந்தாலும் தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தில் இந்த பேட்டரி தான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பதால் இதை பயன்படுத்தி வருகிறார்கள் ஆனால் சாலிட் ஸ்டேட் பேட்டரிகளை எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தகுந்தார் போல் மாற்றிவிட்டால் அது சிறந்ததாக மாறிவிடும்.

சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் எடை குறைவாக இருக்கும். இதனால் ஒட்டுமொத்த வாகனத்தின் எடை குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வாகனத்தின் ரேஞ்ச் அதிகமாகும் மேலும் இந்த சாலிட் ஸ்டேட் பேட்டரிகளில் சிறப்பான தெர்மல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் இருக்கும். இதனால் ரைடருக்கு நீண்ட ரேஞ்ச் மட்டுமல்லாமல் சிறப்பான ரைடிங் அனுபவமும் கிடைக்க அதிகமான வாய்ப்பு உள்ளது.

ola solid state battery

இது மட்டுமல்லாமல் லித்தியம் அயான் பேட்டரிகளை ஒப்பிடும்போது சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் விரைவாக சார்ஜ் ஏறும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் அதிக உழைப்பை தரும் வகையிலும் இந்த பேட்டரிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் பேட்டரி மாற்ற வேண்டிய அவசியமும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்படாது.

ஓலா நிறுவனத்தைப் பொறுத்தவரை தற்போது அந்நிறுவனம் பயன்படுத்தும் லித்தியம் அயான் பேட்டரிகளை அந்நிறுவனம் தயாரிக்கவில்லை. அந்நிறுவனம் தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இயங்கும் இரு வேறு நிறுவனம் இருந்து வாங்கி அதை வாகனங்களை பொருத்தி வருகிறது. இருந்தாலும் ஓலா நிறுவனம் பேட்டரிகளை சொந்தமாக தயாரிக்க திட்டமும் வைத்துள்ளது.

ஓலா நிறுவனம் சொந்தமாக பேட்டரிகளை தயாரிக்கும் பட்சத்தில் பேட்டரியின் விலை கணிசமான அளவு குறையும். இது நேரடியாக வாகனத்தின் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஓலா நிறுவனம் லித்தியம் அயான் பேட்டரிகளை மட்டுமே தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சாலிட் ஸ்டேட் பேட்டரிகளை எப்படி வாகனங்களில் பொருத்துவது அதன் விலையை எப்படி குறைப்பது உள்ளிட்ட ஆய்வுகளை மட்டுமே நடத்தி வருகின்றன. இது எல்லாம் வெற்றிகரமாக நடக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் சாலிட் ஸ்டேட் பேட்டரி எலெக்ட்ரிக் வாகன உலகில் புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா போன்ற நிறுவனங்கள் சாலிட் ஸ்டேட் பேட்டரியை தங்கள் வாகனத்தில் அறிமுகப்படுத்தினால் இது எலெக்ட்ரிக் வாகன உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் பிரச்சனைகளான நீண்ட தூர ரேஞ்ச் உடனடியான சார்ஜிங் உள்ளிட்ட பிரச்சினைகள் எல்லாம் இந்த தொழில்நுட்பத்தில் நீங்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 1, 2024, 7:00 [IST]
English summary
Ola solid state battery development by ola electric
மேலும்... #ola #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X