மலிவு விலை ஓலா இ-ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கியாச்சு! விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ணுவீங்க!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் மலிவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலான எஸ்1 எக்ஸ் (S1 X) மாடலின் டெலிவரி பணிகளைத் தொடங்கி இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள் பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக எஸ்1 எக்ஸ் இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளே தற்போது தொடங்கி இருக்கின்றது. எஸ்1 எக்ஸ் இந்தியாவில் ரூ. 69,999 என்கிற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

3 விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2kWh, 3kWh மற்றும் 4kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளே ஓலா எஸ்1 எக்ஸ் ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றது. ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1 X) மற்றும் ஓலா எஸ்1 எக்ஸ் பிளஸ் (Ola S1 X+) என்கிற இரண்டு விதமான தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.
ஓலா எஸ்1 எக்ஸ் தேர்வை 2kWh, 3kWh மற்றும் 4kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளிலும், ஓலா எஸ்1 எக்ஸ் பிளஸ் தேர்வை 3kWh ஆப்ஷனிலும் வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் 2kWh பேட்டரி பேக் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 95 கிமீ ரேஞ்ஜையும், 3kWh பேட்டரி பக் தேர்வில் 143 கிமீ முதல் 151 கிமீ ரேஞ்ஜையும் பெற்றுக் கொள்ள முடியும்.
அதேவேளையில், 4 kWh பேட்டரி பேக் தேர்வில் 190 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். ஓலா எஸ்1 எக்ஸ் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5 அங்குல திரையும் மற்ற அனைத்து தேர்வுகளிலும் 4.3 அங்குல திரையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர சாவியில்லாமல் இயக்கும் வசதி, ஸ்மார்ட் இணைப்பு வசதி, பன்முக நிற அலங்கரிப்பு, தட்டையான கால் வைக்கும் இடம், 34 லிட்டர் பூட் ஸ்பேஸ், மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும் திறன், க்ரூஸ் கன்ட்ரோல், அட்வான்ஸ் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை ஓலா எஸ் எ1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
6 kW மோட்டாரே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால் வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்ட முடியும். இத்துடன், மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஈகோ (Eco), நார்மல் (Normal) மற்றும் ஸ்போர்ட்ஸ் (Sports) ஆகியவையே அவை ஆகும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 8 ஆண்டுள் / 80 ஆயிரம் கிலோ மீட்டர் வாரண்டியை அறிவித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதை வாடிக்கையாளர்கள் மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 4,999க்கு 1 லட்சம் கிமீ வாரண்டியையும், 12,999 ரூபாக்கு 1.25 கிலோ மீட்டர் வாரண்டியையும் வழங்குகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ஓலா எஸ்1 எக்ஸ் இருக்கின்றது. இதன் டெலிவரி பணிகள் தொடங்கி இருப்பது மின்சார இரண்டு சக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதன் விலைக்காக மட்டுமல்ல அதிக கிமீ வாரண்டி திட்டத்திற்காகவும் எலெக்ட்ரிக் வாகன காதலர்களை கவர்ந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








