ஹோண்டாவை பார்த்து பயந்த ஓலா, ஒரு வழியா மக்கள் கேட்ட வண்டியை ரெடி பண்ணிட்டாங்க!
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஓலா தான் இந்நிறுவனம் தற்போது தடுப்பு புதிய தயாரிப்பை களம் இறக்க தயாராகி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது புதிதாக டெலிவரி செக்மென்டை குறி வைத்து தனது அடுத்த தயாரிப்பை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வரவேற்பு இருக்கிறது. மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக ஓலா நிறுவனம் மாறி வருவதால் இந்நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் பல இடங்களில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தனது அடுத்த புதிய தயாரிப்பை கொண்டு வர தயாராகி விட்டது.

பேட்டரி ஸ்கூட்டர் செக்மெண்ட் தற்போது விரிவடைந்து கொண்டே செல்லும் நிலையில், ஓலா நிறுவனம் தற்போது புதிதாக டெலிவரி செக்மெண்டை குறிவைத்து தனது புதிய தயாரிப்பை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. அதாவது லாஸ்ட் மைல் டெலிவரி தொழில் இந்தியாவில் சமீப காலமாக பெரிய அளவில் வளர்ந்துள்ள நிலையில், அந்த தொழிலில் இருப்பவர்கள் பயன்படுத்தும் விதமான வாகனத்தை தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்த நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த சில முன்னோட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இதில் இந்த ஸ்கூட்டர் குறித்த சில முக்கியமான அப்டேட்டுகள் நமக்கு கிடைத்துள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள அம்சங்களை பார்க்கும்போது இந்த ஸ்கூட்டரில் முன்பக்கம் லோடுகளை வைப்பது போலவும் பின்பக்க சீட்டுக்கு பதிலாக லோடு வைக்கும் அளவுக்கு இட வசதி கொண்டதாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த ஸ்கூட்டரில் கிராஸ் கார்டுகளும் பக்கவாட்டில் கால் வைக்க இடமும் வழங்கப்பட்டிருப்பதால் இது ஒரு லோடு எடுத்துச் செல்லும் வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

இந்த ஸ்கூட்டரில் உள்ள பின்பக்க சீட்டை தேவைப்பட்டால் கழட்டிக் கொள்ளும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்படும் என தெரிகிறது. இதனால் லாஸ்ட் மைல் டெலிவரி தொழிலில் இருப்பவர்களுக்க பயன்படும் வகையில் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. பின்பக்கம் உள்ள சீட்டை எடுத்து விட்டால் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணித்துக் கொள்ள முடியும் அளவுக்குக்கான ஸ்கூட்டராக மாறிவிடும். ஆனால் அதில் அதிகமான லோடு ஏற்றி செல்லும் வகையில் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்த முடியும்.
இதில் உள்ள சீட்டுக்கு கீழே பேட்டரி மாற்றுவதற்காக இட வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டோரேஜ் எதுவும் செய்ய முடியாத பேட்டரியை கழட்டி மாட்டும் வசதிகொண்ட ஸ்கூட்டராக இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் உடன் இரண்டு பேட்டரிகள் வழங்கப்படும் என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒரு பேட்டரி சார்ஜ் செய்து கொண்டு மற்றொரு பேட்டரியை வைத்து பயணம் செய்ய முடியும்.

இன்று டெலிவரி தொழில் இருப்பவர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க யோசிப்பதற்கு மிக முக்கியமான காரணம் ரேஞ்ச்தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 100 முதல் 120 கிலோமீட்டர் ரேஞ்ச் தான் தருகிறது. அதை வைத்து அவர்கள் தினந்தோறும் டெலிவரி பிசினஸை செய்ய முடியாது. ஒருமுறை சார்ஜ் தீர்ந்து விட்டால் அவர்கள் சார்ஜ் ஏற்ற அதிக நேரம் தேவைப்படுவதால் எலெக்ட்ரிக் வாகனங்களை நம்ப முடியாத சூழ்நிலை இருக்கிறது.
அதற்கு தீர்வு சொல்லும் விதமாக தற்போது பேட்டரியை மாற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி பார்ட்னர்களுக்காக ஓலா நிறுவனம் தற்போது வடிவமைத்துள்ளது. இது எப்பொழுது அறிமுகமாகும் என்ற தகவல் எல்லாம் இதுவரை நிறுவனம் வெளியிடவில்லை. இருந்தாலும் விரைவில் இந்த ஸ்கூட்டர் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க ஹோண்டா நிறுவனம் தற்போது தனது ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதிலும் பேட்டரியை மாற்றும் தொழில்நுட்பம் தான் பொருத்தப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், ஓலா நிறுவனமும் தற்போது இந்த வாகனத்தை விரும்பும் வாடிக்கையாளர்களை தவறவிடக்கூடாது என இந்த புதிய தயாரிப்பை களம் இறங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ஹோண்டா நிறுவனமும் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் களம் இறங்குவது போல நிறுவனத்திற்கு தற்போது பயத்தை ஏற்படுத்தியிருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்பை ஸ்வாப்பபிள் பேட்டரியுடன் கூடிய தயாரிப்பாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நிச்சயம் மக்கள் மத்தியில் ஓலா நிறுவனமும் இப்படியான கூற்றை தயாரிக்கிறது என்ற பேச்சை ஏற்படுத்துவதற்காக தான் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications









