ஓலா இவி விலை எக்கசக்கமா குறையப்போகுது! இப்படி ஒரு விஷயத்தை யாருமே எதிர்பார்க்கல!
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாளை சங்கல்ப் என்ற முக்கிய நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வின் போது ஓலா எலக்ட்ரிக் பைக் அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஓலா நிறுவனம் ஏதாவது ஒரு புதிய அறிவிப்பை வெளியிடும். அதன்படி தான் இந்த ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் ஓலா பேட்டரி குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என டீசர் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் முன்னணியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கப் போகிறது என்ற செய்தி வந்த போதே மக்கள் மத்தியில் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட உடன் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இதனால் இந்த ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போதைய நிறுவனம் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது.
இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தனது புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிடுவதை வாடிக்கையாக இருக்கிறது. இந்நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் வெளியிட்டது. இதை ஒரு சென்டிமெண்டாக வைத்து இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இதே தேதியில் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டும் அதற்காக தயாராகி வருகிறது.
இந்த ஆண்டு அந்த நிகழ்விற்கு சங்கல்ப் என நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இந்த நிகழ்வில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் உள்ளிட்ட சில முக்கிய தயாரிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. இது குறித்த டீசரையும் அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இதனால் இந்த அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் இருக்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்க ஓலா நிறுவனம் மிக முக்கியமான காரணமாக இருக்கும் நிலையில், தற்போது எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் இல்லை. பெரும்பாலும் பைக் வாங்குபவர்கள் பெட்ரோல் பைக்குகளையே வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் பைக் விலை அறிமுகப்படுத்தினால் எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் விரிவடையும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஓலா நிறுவனம் தற்போது தங்கள் வாகனங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேட்டரியை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓலா நிறுவனம் தனக்கென புதிதாக பேட்டரி தயாரிப்பாளையும் கட்டமைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்த ஒரு முக்கிய அப்டேட்டும் வெளியிட நிறுவனம் தயாராகியுள்ளது.
இது குறித்த டீசரை தற்போது ஓலா நிறுவனத்தின் சிஇஓ தனது சில பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஓலா நிறுவனத்தின் லோகோ குறித்த பேட்டரிகள் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதில் முக்கியமாக 4680 என்ற எண்ணும் பேட்டரியில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ரக பேட்டரிகள் பிரத்தியேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக பொருத்தப்படும் பேட்டரிகளாக இருக்கின்றன.
டெஸ்லா உள்ளிட்ட சில பிரபலமான எலெக்ட்ரிக் வாகனங்களை கூட இந்த ரக பேட்டரிகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பாதுகாப்பையும் அதே நேரம் அதிக ரேஞ்ஜையும் தரும் வகையில் உருவாக்கப்படும் பேட்டரி ஆகும். இதனால் ஓலா நிறுவனம் நாளை வெளியிட போகும் இந்த அறிவிப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் எல்லாம் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து பேட்டரியை இறக்குமதி செய்கிறார்கள். சொந்தமாக பேட்டரியை தயாரித்தால் அதன் விலை குறையும். இதனால் வாகனத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. ஓலா நிறுவனம் சொந்த எலெக்ட்ரிக் பேட்டரியை தயார் செய்யும் பட்சத்தில் ஓலா நிறுவனங்களின் தயாரிப்புகளின் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








