இப்பதான் எலெக்ட்ரிக் பைக் வந்துச்சு! அதுக்குள்ள இதுவா! வாடிக்கையாளர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்த ஓலா!

இந்தியாவை சேர்ந்த ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை (Bangalore) தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் எஸ்1 (S1) என்ற பிராண்டின் கீழ், நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters), ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் (First Electric Motorcycle), இந்திய சந்தையில் நேற்று (ஆகஸ்ட் 15) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சுதந்திர தினத்தை (Independence Day) முன்னிட்டு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. அப்போது இந்திய சந்தைக்கான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

Ola To Launch 5 New Electric Scooters

இதன்படி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வரும் ஆண்டுகளில் இந்திய சந்தையில் 5 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எஸ்2 (S2) மற்றும் எஸ்3 (S3) என்ற 2 புதிய பிராண்டுகளின் கீழ், அந்த 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

எஸ்2 பிராண்டின் கீழ், சிட்டி, ஸ்போர்ட்ஸ் மற்றும் டூரர் என மொத்தம் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் களமிறக்கப்படவுள்ளன. இதில், சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வழக்கமான டிசைனைதான் கொண்டிருக்கும். ஆனால் டூரர், மேக்ஸி-ஸ்கூட்டராக (Maxi-scooter) டிசைன் செய்யப்படவுள்ளது.

Ola Roadster

மறுபக்கம் எஸ்3 பிராண்டின் கீழ், க்ராண்ட் அட்வென்ஜர் மற்றும் க்ராண்ட் டூரர் என மொத்தம் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. ஆக மொத்தம் எஸ்2 மற்றும் எஸ்3 ஆகிய 2 புதிய பிராண்டுகளின் கீழ், மொத்தம் 5 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் களமிறக்கவுள்ளது.

இந்த 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், ஜென் 3 பிளாட்பார்ம் (Gen 3 Platform) அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளன. எனவே செயல்திறன் மற்றும் ரேஞ்ச் ஆகிய 2 முக்கியமான அம்சங்களிலும், இந்த 5 புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தலைசிறந்து விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தற்போதைய நிலையிலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனி ஆதிக்கம் செலுத்தி கொண்டுதான் உள்ளது. இந்த சூழலில் விற்பனைக்கு வரவுள்ள 5 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்க உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.

ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் விலைக்கு அதிக முக்கியத்துவம் வழங்க கூடியவர்கள். எனவே விலை நிர்ணயம் சரியாக இருப்பது மிகவும் அவசியம். விலை நிர்ணயம் சரியாக இருக்கும்பட்சத்தில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதுவரவுகள், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2024, 17:15 [IST]
English summary
Ola to launch 5 new electric scooters in india full details here
மேலும்... #ola #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+