அஜித், விஜய் பட அப்டேட்டுக்காக காத்திருப்பவங்களைவிட இந்த அப்டேட்டுக்காக காத்திருப்பவங்களே அதிகம்..

முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), நேற்றைய (ஆகஸ்டு 15) தினம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதன் முதல் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)ஐ நாட்டில் அறிமுகப்படுத்தியது. ரோட்ஸ்டர் (Roadster) எனும் மாடலையே அது அறிமுகப்படுத்தியது. ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X), ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro) ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 74,999 மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான இ-பைக் இதுவாகும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை மட்டுமல்ல இன்னும் சில முக்கிய அறிவிப்புகளையும் இன்றைய தினத்தில் அது வெளியிட்டது. அந்தவகையில், ஓலா எலெக்ட்ரிக் வாகன பயனர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான மூவ்ஓஎஸ் 5 (MoveOS 5) பற்றிய அறிவிப்பையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

MoveOS 5 beta by ola

இப்போது பயன்பாட்டில் இருப்பது மூவ்ஓஎஸ் 4 (MoveOS 4) ஆகும். இதற்கு ஓலா எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய புதிய ஆபரேட்டிங் சாஃப்ட்வேர் (Operating Software)-ஆன மூவ்ஓஎஸ் 5 பற்றிய தகவலை அது வெளியிட்டு இருக்கின்றது.

மூவ்ஓஎஸ் 5 வாயிலாக பல்வேறு சிறப்பு வசதிகளை ஓலா எலெக்ட்ரிக் அன்லாக் செய்திருக்கின்றது என்றே கூறலாம். அந்தவகையில், புதிய வசதியாக குரூப் நேவிகேஷன் (Group Navigation), லைவாக இருப்பிடத்தை (Live Location) பகிரும் வசதி மற்றும் ஓலா மேப்ஸ்-இன் ரோட் ட்ரிப் மோட் (Road Trip Mode) ஆகிய வசதிகளே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமின்றி, இந்த புதிய சாஃப்ட்வேர் அப்டேட் வாயிலாக செயல்திறனையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. அந்தவகையில், ஸ்மார்ட் சார்ஜிங் (Smart Charging) வசதியை இதன் வாயிலாக பெற முடியும் என தெரிகின்றது. தொடர்ந்து, ஸ்மார்ட் பார்க் (Smart Park) மற்றும் பிரீமியம் கார்களில் காணப்படக் கூடிய டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிகின்றது.

இதுதவிர, ஓலாவால் உருவாக்கப்பட்ட க்ருட்ரிம் ஏஐ (Krutrim AI) அசிஸ்டன்ஸையும் இந்த அப்டேட் வாயிலாகப் பெற்றுக் கொள்ள முடியுமாம். இந்த ஏஐ கண்கானிப்பு உள்ளிட்ட சில முக்கிய வேலைகளை செய்யும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்துடன், வாய்ஸ் அசிஸ்டன்ஸையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இத்தகைய தரமான ஓர் சாஃப்ட்வேரே மூவ்ஓஎஸ் 5 ஆகும். இதையே சீக்கிரமே பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. பீட்டா (Beta) வெர்ஷனாக தீபாவளி அல்லது தீபாவளிக்கு முன்னதாகவே இது பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தெரிகின்றது. ஓடிஏ அப்டேட் வாயிலாக ஓலா எலெக்ட்ரிக் இதனை வழங்க இருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் பொருட்டே தன்னுடைய புதிய தயாரிப்புகளை இன்று அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, தன்னுடைய எதிர்கால இ-பைக்குகள் சிலவற்றையும் நேற்றைய நிகழ்வின்போத அது அறிமுகப்படுத்தியது. மேலும், உள்நாட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட பாரத் 4680 செல் (Bharat 4680 Cell)-யும் அது அறிமுகம் செய்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏழை மற்றும் எளிய மக்களும் வாங்கும் பொருட்டே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் பைக் மாடலை தயார் செய்திருக்கின்றது. இதற்கான ரிசர்வேஷன் பணிகளும் நேற்று முதல் தொடங்கி இருக்கின்றன. ஆனால், இதன் டெலிவரி பணிகள் 2025 நிதியாண்டின் இறுதியிலேயே தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2024, 5:00 [IST]
English summary
Ola to release moveos 5 beta by diwali get ready for ota update
மேலும்... #ola #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+