இவ்வளவு சீக்கிரமா மார்க்கெட்டை விட்டு போகும்னு எதிர்பார்க்கல... இந்தியர்கள் கண்டுக்காமல் விட்ட பைக்குகள்!!
இந்தியா, உலகளவில் முன்னணி பைக் மார்க்கெட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இருந்து பல்வேறு 2-வீலர் மாடல்கள் மார்க்கெட்டிற்கு வந்துள்ளன. ஆனால், அவற்றில் சில மாடல்கள் மட்டுமே மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளன. அதேநேரம் சில மோட்டார்சைக்கிள்கள் விரைவாகவே மார்க்கெட்டை விட்டு சென்றுள்ளன. அவ்வாறு இந்திய சந்தையை விட்டு சென்ற சில இருசக்கர வாகனங்களை பற்றியும், அவை நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
யமஹா ஆர்டி350 (Yamaha RD350): உலகளவில் பிரபலமான யமஹா பைக்குகளுள் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் சில விஐபிகளிடம் இப்போதும் உள்ளது. 1983ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த யமஹா பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மிகவும் செயல்திறன்மிக்க பைக்குகளுள் ஒன்றாக விளங்குகிறது. ஆனால், இதுதான் இந்த பைக்கின் நிறுத்தத்திற்கும் காரணம் என சொல்ல வேண்டும்.

மிகவும் அதிவேகமானதாக இருந்ததினால், நிறைய ரைடர்கள் விபத்துகளில் சிக்கினர். அதற்கேற்றாற் போன்று, பைக்கில் டிஸ்க் பிரேக்குகளும் கொடுக்கப்படவில்லை. மைலேஜ் விஷயத்திலும் ஆர்டி350 பைக் கொஞ்சம் பின்தங்கியே இருந்தது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக யமஹா ஆர்டி350 பைக்கின் விலை அதிகமாக இருந்தது. இதுதான் மக்கள் எல்லாராலும் இந்த பைக்கை வாங்க முடியவில்லை.
டிவிஎஸ் சுஸுகி ஷோகன் (TVS Suzuki Shogun): டிவிஎஸ் மோட்டார் மற்றும் சுஸுகி நிறுவனங்கள் கூட்டணியில் இருந்த சமயத்தில் கொண்டுவரப்பட்ட மோட்டார்சைக்கிள் இதுவாகும். 'தி பாஸ்' என்கிற அடைமொழி உடன் பிரபலமான யமஹா ஆர்.எஸ்100 பைக்கிற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட ஷோகன் பைக்கில் 108.2சிசி, 2-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்பட்டது.

இந்த டிவிஎஸ் சுஸுகி பைக் ஓட்டுவதற்கு மிகவும் ஜாலியாக இருந்தது. குறிப்பாக, அதிக ஆர்பிஎம்-இல் இந்த பைக்கில் இருந்து அதிக எக்ஸாஸ்ட் சத்தம் ரைடர்களை குஷியாக்கியது. வெறும் 105 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட இந்த பைக் எளிதாக 120kmph வேகத்தை எட்டியது. ஆனால் இதன் காரணமாகவே, எளிதாக கண்ட்ரோல் செய்ய முடியாத காரணத்தினால் இந்த பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டது.

முதல் தலைமுறை பஜாஜ் பல்சர் (First-Gen Bajaj Pulsar): இந்திய 2-வீலர் மார்க்கெட்டை முற்றிலுமாக மாற்றியமைத்த பெருமையை பெறும் பைக்குகளுள் பஜாஜ் பல்சரும் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. ஹீரோ-ஹோண்டா நிறுவனம் புதியதாக சிபிஇசட் பைக்கை அறிமுகம் செய்வதை பார்த்து பஜாஜ் பல்சர் 150 மற்றும் 180 பைக்குகளை அறிமுகம் செய்தது. பெரிய அளவிலான பெட்ரோல், முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்களினால் பஜாஜ் பல்சர் பைக்குகள் விரைவாகவே வெற்றி பெற்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்திருப்பது சில மட்டுமே இன்னும் விரிவாக ஆராய்ந்தால் நிறைய பைக்குகள் வரும். உலகின் பெரும் 2-வீலர் சந்தையாக இந்தியா விளங்கினாலும், நம் நாட்டில் வேகமான, மூர்க்கதனமாக இயங்கக் கூடிய பைக்குகளை விரும்புபவர்கள் குறைவே. இதுதான், மேற்கூறப்பட்ட பைக்குகள் நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications









