பெட்ரோல் பைக்கை வாங்கி அலுத்து போனது போதும்!! ரூ.20,000 வரை பணத்தை மிச்சப்படுத்தலாம்!
ப்யூர் இவி (Pure EV), இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ப்யூர் இவி ஒன்றாகும். தீபாவளியை முன்னிட்டு மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று ப்யூர் இவி நிறுவனமும் அதன் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, ப்யூர் இவி நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகளை எவ்வளவு குறைவான விலையில் வாங்கலாம் என்பதையும், சலுகைகளை பெறும் எலக்ட்ரிக் பைக்குகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தீபாவளியின் போது தான் கஸ்டமர்களை அதிகமாக கவர முடியும் என்பதை உணர்ந்து நிறைய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பண்டிகை கால சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்து உள்ளன. ஏனெனில், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தான் நிறைய பேர் புதியதாக வாகனங்களை வாங்க விரும்புகின்றனர்.

இதனை உணர்ந்த ப்யூர் இவி என்கிற எலக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அதன் பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் ப்யூர் இவி நிறுவனத்தின் ஈக்கோ ட்ரிஃப்ட் 350 மற்றும் இடிரைஸ்ட் எக்ஸ் என்கிற எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் ரூ.20,000 குறைந்துள்ளன.
இதன் மூலமாக, ப்யூர் இவி-இன் இந்த எலக்ட்ரிக் பைக்குகளை ரூ.99,999 என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம். இது குறுகிய கால சலுகை மட்டுமே ஆகும். அதாவது, நவம்பர் 10ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். இந்த எலக்ட்ரிக் பைக்குகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இவை இரண்டும் ப்யூர் இவி-இன் பிரெடிக்டிவ்-ஏஐ எக்ஸ்-பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலமாக, அட்வான்ஸான வசதிகளை இவை பெற்றுள்ளன. இந்த வகையில், க்ளவுட் அலார்ட்ஸ், ஸ்மார்ட் பேட்டரி மேனேஜ்மெண்ட், காஸ்டிங் ரீஜெனரேஷன், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் மோட் மற்றும் பார்க் அசிஸ்ட் உள்ளிட்டவற்றை இந்த எலக்ட்ரிக் பைக்குகளில் பெற முடிகிறது. ப்யூர் இவி நிறுவனத்தின் ஈக்கோ டிரிஃப்ட் எலக்ட்ரிக் பைக் ஆனது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற எலக்ட்ரிக் பைக் ஆக விளங்குகிறது.
அதாவது, இந்த பைக்கில் ரேஞ்ச் அதிகமாக கிடைப்பதால் அதற்கேற்ப இந்த எலக்ட்ரிக் பைக்கில் தினந்தோறும் அதிக தொலைவிற்கு பயணிக்கலாம். மறுப்பக்கம், ப்யூர் இவி நிறுவனத்தின் இடிரைஸ்ட் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை பொறுத்தவரையில், இது பவர்ஃபுல்லான எலக்ட்ரிக் பைக் ஆகும். அதாவது, அதிவேக பயணம் மற்றும் உடனடி டார்க் திறனை எதிர்பார்ப்பவர்கள் இந்த எலக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்.
பவர்ஃபுல்லான எலக்ட்ரிக் பைக்காக இருப்பினும் இடிரைஸ்ட்டில் 171கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம். அதேபோல், ஈக்கோ டிரிஃப்ட் 350 பைக்கிலும் 171கிமீ ரேஞ்சை பெறலாம் என ப்யூர் இவி தெரிவிக்கிறது. இந்த எலக்ட்ரிக் பைக்குகள் இல்லாமல், இட்ரான்ஸ் நியோ மற்றும் இப்ளுடோ 7ஜி என்கிற எலக்ட்ரிக் பைக்குகளையும் ப்யூர் இவி விற்பனை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த பல வருடங்களாக எலக்ட்ரிக் 2-வீலர்கள் உற்பத்தியில் ஈடுப்பட்டுவரும் நிறுவனங்களுள் ஒன்று ப்யூர் இவி ஆகும். இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகள் மார்க்கெட்டில் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றை இந்த இந்த பண்டிகை காலத்தில் சொந்தமாக்கினால், ரூ.20,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








