நீங்க மட்டும்தான் எங்க நாட்டுக்குள்ள நுழைவீங்களா! நாங்களும் காலடி வைப்போம்.. தரமான பைக்கை கொண்டு போயிருக்காங்க

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ப்யூர் இவி (PURE EV)-யும் ஒன்றாகும். மின்சார இரண்டு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியிலேயே இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதுவே தற்போது உலக நாடுகளிலும் தன்னுடைய வர்த்தக பணிகளை விரிவாக்கம் செய்யும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. முதல் கட்டமாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தன்னுடைய காலடி தடத்தை பதிக்க அது திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்வா எலெக்ட்ரிக் (Arva Electric) உடன் ப்யூர் இவி நிறுவனம் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.

விற்பனை மற்றும் டிஸ்ட்ரிபியூசன் உள்ளிட்ட பணிகளில் ப்யூர் இவி-க்கு இந்த நிறுவனமே பெரும் உதவியாக இருக்க போகின்றது. ஈகோ ட்ரிஃப்ட் (ecoDryft) மற்றும் இ-ட்ரிஸ்ட் எக்ஸ் (eTryst X) இரண்டு மின்சார டூ-வீலர் மாடல்களையே இந்த நாடுகளில் ப்யூர் இவி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Pure ev and arva electric join forces for expansion

மேலும், முதல் கட்டமாக 50 ஆயிரம் யூனிட்டுகளை விற்பனைச் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதனை, அடுத்தடுத்த ஆண்டுகளில் 60 ஆயிரம் யூனிட்டுகளாக அதிகரிக்கவும் ப்யூர் இவி நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. பன்னாட்டு நிறுவனங்கள் பல இந்தியாவில் கால் தடம் பதித்துக் கொண்டு உள்ளன.

இந்த சூழலிலேயே இந்திய நிறுவனம் உலக நாடுகளை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருப்பது இந்தியாவிற்கு பெருமிதம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. ப்யூர் இவி மட்டுமல்ல இன்னும் பல இந்திய நிறுவனங்கள் உலக நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. அவர்களில் புதிய ஓர் நபராகவே ப்யூர் இவி இணைந்திருக்கின்றார்.

ஈகோ ட்ரிஃப்ட்: ஓர் மின்சாரத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் பைக் மாடல் ஆகும். ஓர் முழு சார்ஜில் இந்த வாகனத்தில் 171 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுதவிர, பன்முக சிறப்பம்சங்களைத் தாங்கிய வாகனமாகவும் இது காட்சியளிக்கின்றது. அந்தவகையில், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டவுன் ஹில் அசிஸ்ட், ரிவர்ஸ் மோட், பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் ஸ்மார்ட் ஏஐ வசதிக் கொண்ட பேட்டரி சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களையே ஈகோ ட்ரிஃப்ட் தாங்கி இருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். 150 கிலோ வரையில் இந்த எலெக்ட்ரிக் பைக் எடை தாங்கும். 3.5 kWh மற்றும் 3 kWh ஆகிய இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளிலேயே இந்த மின்சார பைக் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 99,999 ஆகும். இந்த விலையிலேயே பலதரப்பட்ட சிறப்பம்சங்களை இந்த பைக்கில் ப்யூர் இவியில் வழங்கி இருக்கின்றது.

இ-ட்ரிஸ்ட் எக்ஸ்: இதுவும் ஓர் மின்சார பைக் மாடல் ஆகும். இது இந்தியாவில் ஒற்றை தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதிலும் ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை ப்யூர் இவி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 17.78 செமீ அளவுள்ள எல்இடி திரை, ரிமோட் ஸ்டார்ட் வசதி, ஸ்மார்ட் ஆக்டீவ் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை இந்த காரில் வழங்கி இருக்கின்றனர்.

இதுதவிர, 72V-3.5 KW திறன் கொண்ட பேட்டரி பேக்கையே ப்யூர் இவி இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 94கிமீ வரையில் ரேஞ்ச் தரும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 94 கிமீ ஆகும். இதற்காக பிஎல்டிசி வகை மோட்டாரே இந்த எலெக்ட்ரிக் பைக்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பைக்கும் 150 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை தாங்கிச் செல்லும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நிலவிக் கொண்டிருப்பதைப் போலவே உலக சந்தையிலும் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலிலேயே உலக அளவில் உள்ள வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு ப்யூர் இவி நிறுவனம் தற்போது தன்னுடைய நடவடிக்கையைத் தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 20, 2024, 14:20 [IST]
English summary
Pure ev collaborates with arva electric to boost ev sales in middle east and africa
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+