மணிக்கு 72 கிமீ வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. கொஞ்சமாதான் விற்பனை செய்ய போறாங்களாம்!

இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் ப்யூர் இவி (Pure EV)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனமே எக்ஸ் பிளாட்ஃபார்ம் 2.0 லிமிடெட்ட எடிசன் (X Platform 2.0 Limited Edition) எனும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்த சிறப்பு பதிப்பானது இ-ப்ளூட்டோவின் அனைத்து சீரிஸ்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, இ-ப்ளூட்டோ 7ஜி (ePluto Series 7G), இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோ (ePluto Series 7G Pro) மற்றும் இ-ப்ளூட்டோ 7ஜி மேக்ஸ் (ePluto Series 7G Max) ஆகிய மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Pure ev epluto7g limited edition

மிக சிறந்த வேக திறன், அதிக மைலேஜ் மற்றும் மிக சிறந்த ரைடு அனுபவம் ஆகியவற்றை இந்த சிறப்பு பதிப்பு வழங்கும் என ப்யூர் இவி தெரிவித்து இருக்கின்றது. எக்ஸ் பிளாட்பாரம் 2.0 லிமிடெட் எடிசனில் விற்பனைக்கு வந்திருக்கும் அனைத்து மாடல்களும் நிறுவனத்தின் எக்ஸ் பிளாட்பாரத்தில் வைத்தே தயாரிக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பிளாட்பாரத்தின் வாயிலாக பல புதிய அம்சங்களையும் அது வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், வழக்கமான ப்யூர் இவி இ-ப்ளூட்டோ 7ஜி, ப்ரோ மற்றும் மேக்ஸ் ஆகிய மாடல்களில் இடம் பெறாத 12 புதிய அம்சங்கள் எக்ஸ் பிளாட்பாரம் 2.0 லிமிடெட் எடிசன் மாடல்களில் இடம் பெற்றிருக்கின்றன.

Pure ev epluto7g

குறிப்பாக, அதிக வேகத்தை சிறப்பு பதிப்பு மாடல்கள் வெளியேற்றும் என்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, ஈகோ மோட்டிலும் ரைடர்களால் அதிகபட்ச வேகத்தை எட்ட முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மணிக்கு 58 கிமீ வேகம் வரை எட்ட முடியும்.

ஆனால், முன்னதாக ஈகோ மோடில் மணிக்கு 35 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சூழலையே அது தற்போது மாற்றி இருக்கின்றது. மேலும், அடிக்கடி மோடை மாற்றி மாற்றி இயக்க வேண்டும் என்கிற சூழலையும் இந்த சிறப்பு வசதியால் ப்யூர் இவி தற்போது நீக்கி இருக்கின்றது.

Pure ev epluto7g pro

பைக்குகளில் அடிக்கடி கியரை மாற்றுவதைப் போலவே மின்சார வாகனங்களில் மோட்களை மாற்றுவது இருக்கின்றது. இதை அடிக்கடி மாற்றுவதற்கான தேவை குறைக்கப்பட்டு இருப்பதால் பயனர்களுக்கு மிகுந்த சுவாரஷ்யமான ரைடு அனுபவம் கிடைக்கும் என ப்யூர் இவி தெரிவித்து இருக்கின்றது. மேலும், உச்சபட்ச வேகத்தில் பயணிப்பதற்கு என தனியாக ஓர் ஸ்போர்ட்ஸ் எனும் மோட் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட் வாயிலாக அதிகபட்சமாக மணிக்கு 72 கிமீ வேகம் வரை பயணிக்க முடியும். இதேபோல் ரேஞ்ஜ் விஷயத்திலும் இம்ப்ரூவ்மென்ட் வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், இப்ளூட்டோ 7ஜி ஓர் முழு சார்ஜில் 111-151 கிமீ ரேஞ்ஜையும், இப்ளூட்டோ 7ஜி மேக்ஸ் ஓர் முழு சார்ஜில் 150 கிமீ முதல் 201 கிமீ ரேஞ்ஜையும் தரக் கூடியதாக மாற்றப்பட்டு இருக்கின்றது.

இப்ளூட்டோ 7ஜி ப்ரோ அதிகபட்சமாக 131-171 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 7ஜி ப்ரோவில் மாடலில் 3 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கும், 7ஜி மேக்ஸில் 3.5 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இப்ளூட்டோ 7ஜியில் 2.5 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. சிறிய பேட்டரி பேக்கை இது கொண்டிருப்பதாலேயே இதன் விலையும் குறைவாக உள்ளது. இதன் விலை ரூ. 89,999 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும்.

7ஜி ப்ரோக்கு ரூ. 99,999ம், 7ஜி மேக்ஸிற்கு ரூ. 1.14 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை சிறப்பம்சங்கள் விஷயத்திலும் வழக்கமான வேரியண்டுகளிடம் இருந்து கணிசமான அளவில் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சூப்பரான நிலையில் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ப்யூர் இவி நிறுவனம் அதன் இ-ப்ளூட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வரிசையில் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதை குறைவான எண்ணிக்கையிலேயே அது விற்பனைச் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 7, 2024, 18:29 [IST]
English summary
Pure ev launches limited edition variants for epluto series here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X