விலையை இவ்வளவு கம்மி பண்ணிட்டாங்களே எப்படி கட்டுப்படி ஆகும்? இந்த தீபாவளிக்கு வாங்க ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!!
குவாண்டம் எனர்ஜி (Quantum Energy) நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சலுகைகளை அறிவித்துள்ளது. வருகிற தீபாவளி பண்டிகையில் வாடிக்கையாளர்களை அதிகமாக கவரும் முயற்சியாக பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளன. அந்த வரிசையில், குவாண்டம் எனர்ஜி நிறுவனமும் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எவ்வளவு குறைவான விலையில் வாங்கலாம் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களுள் குவாண்டம் எனர்ஜியும் ஒன்றாகும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பல்வேறு தோற்றங்களில் வடிவமைத்து, உற்பத்தி செய்துவரும் குவாண்டம் எனர்ஜி அதன் தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளை குவாண்டம் எனர்ஜியின் பிளாஸ்மா எக்ஸ், பிளாஸ்மா எக்ஸ்.ஆர் மற்றும் மிலன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெறுகின்றன.

இந்த தீபாவளி சலுகையின்படி, குவாண்டம் எனர்ஜியின் பிளாஸ்மா எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்து 29,150இல் இருந்து ரூ.99,999 ஆகவும், பிளாஸ்மா எக்ஸ்.ஆர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சத்து 9,999இல் இருந்து ரூ.89,095 ஆகவும், மிலன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.85,999இல் இருந்து ரூ.79,999 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி துவங்கிய இந்த சலுகை காலம் அக்டோபர் 31ஆம் தேதியில் நிறைவடைய உள்ளது. இந்த தீபாவளி சலுகையை இந்தியாவில் உள்ள அனைத்து குவாண்டம் எனர்ஜி ஷோரூமிலும் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆக்ரா, லக்னோ மற்றும் கான்பூரில் துவங்கப்பட்ட குவாண்டம் எனர்ஜியின் புதிய ஷோரூம்களிலும் இந்த சலுகைகளை பெறலாம்.
குவாண்டம் எனர்ஜியின் ஷோரூம்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது மற்றும் அவற்றிற்கான சர்வீஸ்களை பெறுவது மட்டுமின்றி, அவற்றிற்கான உதிரி பாகங்களையும் பெற முடிகிறது. விருப்பப்படுவர்கள் அருகில் உள்ள குவாண்டம் எனர்ஜி ஷோரூம் வாயிலாகவோ அல்லது அதிகாரப்பூர்வ இணையத்தளம் வாயிலாகவோ இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்து டெஸ்ட் ரைடு செய்து பார்க்கலாம்.

தீபாவளி சலுகையை பெற்றுள்ள குவாண்டம் எனர்ஜியின் பிளாஸ்மா எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1500 வாட்ஸ் மோட்டார் பொருத்தப்படுகிறது. இதில் பொருத்தப்படும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 120கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 65kmph ஆகும். பிளாஸ்மா எக்ஸ்.ஆர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் 1500 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் தான் பொருத்தப்படுகிறது.
ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 100கிமீ மட்டுமே ஆகும். அதேபோல், இந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 60கிமீ ஆகும். மிலன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1000 வாட்ஸ் மோட்டார் பொருத்தப்படுகிறது. இதில் பொருத்தப்படும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் 100கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 60கிமீ ஆகும்.
தீபாவளி சலுகைகள் குறித்து குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குனர் சேதனா சுக்காபள்ளி கூறுகையில், "தீபாவளி கொண்டாட்டத்திற்கான நேரம், மேலும் இந்த சிறப்புத் தள்ளுபடிகளுடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரிக் மொபைலிட்டிக்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்குவதில் குவாண்டம் எனர்ஜியில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமானதாக வடிவமைக்கப்படுகின்றன" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், தீபாவளியின் போதுதான் நிறைய பேர் புதிய வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். ஆதலால், கஸ்டமர்களை மேலும் ஈர்க்க இவ்வாறான சலுகைகள் அவசியமாகுகின்றன. அதேபோல், இவ்வாறான சலுகைகள் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட்டையும் விரிவுப்படுத்தும்.


Click it and Unblock the Notifications








