ஸ்கூட்டர் வாங்கினால் ஸ்மார்ட்போன் இலவசம்! யாருக்கு இந்த தாராள மனசு வரும்... பணம் தள்ளுபடியும் இருக்கு!!
குவாண்டம் எனர்ஜி (Quantum Energy), எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை வடிவமைத்து உருவாக்குவதில் கைத்தேர்ந்த நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக சிறப்பு சலுகைகள் (Special Offer)-ஐ அறிவித்துள்ளது. வருகிற 2025 ஜனவரி 18 வரையில் வழங்கப்பட உள்ள இந்த சலுகைகளில் அட்டகாசமான அம்சங்கள் அடங்குகின்றன. அவற்றை பற்றியும், சலுகைகளை பெறும் குவாண்டம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
ஒவ்வொரு வருட இறுதியிலும், துவக்கத்திலும் தான் மக்களுக்கு புதிய வாகனங்களை வாங்க தோன்றுகிறது. விற்பனை புள்ளி விபரங்களும் அதை தான் காட்டுகின்றன. இதனால், வாடிக்கையாளர்களை மேலும் கவரும் முயற்சியாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவிக்கின்றன. சில நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலைகளை குறைத்துக் கொண்டுள்ளதை கூட பார்த்திருக்கிறோம்.

தற்போது, குவாண்டம் எனர்ஜி நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. கிறித்துமஸ், ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் என ஜனவரி 18ஆம் தேதி வரையில் வரவுள்ள அனைத்து பண்டிகைகளுக்கும் சேர்த்து இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குவாண்டம் எனர்ஜியில் இருந்து பிளாஸ்மா (Plasma), மிலான் (Milan) மற்றும் பிஸினஸ் சீரிஸ் (Bziness Series) என 3 விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை ஜனவரி 18ஆம் தேதி வரையில் வாங்குவோர் ரூ.20,000 வரையிலான பணம் தள்ளுபடியை பெறலாம். மேலும், குவாண்டம் எனர்ஜியின் எந்தவொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவோருக்கும் ரூ.15,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் (Smartphone) இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட்டுவரும் இந்த சலுகை மற்றும் பரிசை இந்தியாவில் உள்ள அனைத்து குவாண்டம் டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom)-லும் பெறலாம்.
குவாண்டம் எனர்ஜியின் பிளாஸ்மா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரையில், இது எக்ஸ் மற்றும் எக்ஸ்.ஆர் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டிலும் 1500 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் தான் பொருத்தப்படுகிறது. ஆனால், எக்ஸ் வேரியண்ட்டில் கூடுதல் வேகமாகவும், சிங்கிள்-சார்ஜ் பேட்டரியில் அதிக தொலைவிற்கும் பயணிக்கலாம்.

குவாண்டம் எனர்ஜியின் மிலான் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1000 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 100கிமீ தொலைவிற்கும், அதிகப்பட்சமாக மணிக்கு 60கிமீ வேகத்திலும் செல்லலாம். பிஸினெஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரையில், இது எக்ஸ் மற்றும் எக்ஸ்.பி என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இவை இரண்டிலும் ஒரே மாதிரியான 1200 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் தான் பொருத்தப்படுகிறது. ஆனால், மோட்டாருக்கு ஆற்றலை வழங்கும் பேட்டரியின் திறன் வேறுப்படுவதால், பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பி எக்ஸ் வேரியண்ட்டில் 110கிமீ தொலைவிற்கும், எக்ஸ்பி வேரியண்ட்டில் 135கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம். அதேபோல், எக்ஸ் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 60kmph வேகத்திலும், எக்ஸ்பி வேரியண்ட்டில் 45kmph வேகத்திலும் செல்லலாம்.
1964 இல் நிறுவப்பட்ட குசாலவா இண்டர்நேஷ்னல் (Kusalava International) நிறுவனத்தின் துணை நிறுவனமாக குவாண்டம் எனர்ஜி விளங்குகிறது. இதுவரையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருக்கும் குவாண்டம் எனர்ஜி, இந்தியாவின் டாப்-10 இவி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா, டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டுமென்றால் இவ்வாறான சலுகைகளையும், பரிசுகளையும் அறிவிப்பது அவசியமாகிறது. குவாண்டம் எனர்ஜி பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்திருப்பது மட்டுமின்றி, பரிசாக மொபைல் போனை அறிவித்து இருப்பது ஆச்சிரியமளிக்கிறது. ஆனால், ரூ.15,000இல் என்ன மாதிரியான ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








