குவாண்டம் எனெர்ஜி-யின் புதிய ஷோரூம் திருநெல்வேலியில் திறப்பு!.. தமிழர்களை வளச்சு போட முடிவு பண்ணிட்டாங்க!

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி ஸ்டார்ட்-அப் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் குவாண்டம் எனெர்ஜி (Quantum Energy)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் வசம் வளைத்து போடும் விதமாக, தன்னுடைய விற்பனை மையங்களை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி-யில் குவாண்டம் தன்னுடைய புத்தம் புதிய ஷோரூமை திறந்திருக்கின்றது. சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு மட்டுமின்றி இரண்டாம் நிலை நகரங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கும் விதமாக குவாண்டம் எனெர்ஜி தன்னுடைய ஷோரூமை நெல்லையில் திறந்திருக்கின்றது.

இந்த புதிய ஷோரூமால் மாநிலத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஷோரூம்களின் எண்ணிக்கை லேசாக அதிகரித்து இருக்கின்றது. முன்னதாக இரண்டு ஷோரூம்கள் மட்டுமே இருந்து வந்தது. மூன்றாவதாகவே தமிழகத்தில் இந்த ஷோரூம் திறக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த எண்ணிக்கையை பலமடங்கு குவாண்டம் எனெர்ஜி அதிகரிக்கச் செய்யும் என நம்பப்படுகின்றது.

New quantum energy ev showroom in tirunelveli

நெல்லையில் அமைந்துள்ள புதிய குவாண்டம் எனெர்ஜி ஷோரூம் 1300 சதுர அடி அளவைக் கொண்டதாக இருக்கின்றது. மேலும், அது ஸ்ரீ அருண் மோட்டார்ஸ் எனும் பெயரிலேயே செயல்படும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைச் செய்வது மட்டுமின்றி, குவாண்டம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அனைத்து விபரங்களையும் வழங்கக் கூடிய ஓர் மையமாகவும் இது விளங்கும் என கூறப்படுகின்றது.

நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக பிளாஸ்மா (Plasma), எலெக்ட்ரான் (Elektron), மிலன் (Milan) மற்றும் பிசினஸ் (Bziness) ஆகியவை இருக்கின்றன. இதில், பிளாஸ்மாவே நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. பிளாஸ்மா எக்ஸ் (Plasma X) மற்றும் பிளாஸ்மா எக்ஸ்ஆர் (Plasma XR) என இரண்டு விதமான வேரியண்டுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

New quantum energy ev showroom

இதில், பிளாஸ்மா எக்ஸ் இல் 1500 W எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும். மேலும், ஓர் முழு சார்ஜில் இதில் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் விலை ரூ. 1.04 லட்சம் ஆகும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பிளாஸ்மா எக்ஸ் வேரியண்டைக் காட்டிலும் சற்று விலை குறைவானதாக பிளாஸ்மா எக்ஸ்ஆர் இருக்கின்றது. ரூ. 89 ஆயிரம் விலையே இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதிலும், 1500 W எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஆனால், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும். ரேஞ்ஜ் தருவதிலும் சற்றே பின் தங்கி இருக்கின்றது இந்த தேர்வு. ஓர் முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜை மட்டுமே இது வழங்கும். இதற்கு அடுத்தபடியாக எலெக்ட்ரான் இருக்கின்றது. இதில் 1000 W எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும். மேலும், இதில் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்கு ரூ. 79 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். நிறுவனத்தின் சிறப்புமிக்க தயாரிப்பாக மிலன் உள்ளது.

எலெக்ட்ரானை போலவே இதிலும், 1000 W மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும். ஓர் முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதற்கு ரூ. 89,896 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. பிசினஸ், இதுவே நிறுவனத்தின் கடைநிலை தயாரிப்பாகும்.

அதேவேளையில் இதில் அதிகபட்சமாக 110 கிமீ ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும். இதற்காக 1200 வாட் மோட்டாரே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு அதிகபட்சமாக ரூ. 98,291 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து தயாரிப்புகளும் நெல்லையில் தொடங்கப்பட்டு இருக்கும் புதிய ஷோரூமில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், நெல்லை வாசிகள் குவாண்டம் எனெர்ஜி நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கும், ஷோரூம்க்கும் எத்தகைய வரவேற்பை வழங்குவார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2024, 17:46 [IST]
English summary
Quantum energy electric vehicle startup inaugurated new showroom in tirunelveli
மேலும்... #electric bike #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+