கொஞ்சம் லேட்தான் ஆனா பெஸ்ட்டான விலை தள்ளுபடி! 10சதவீதம் வரை விலை குறைச்சுட்டாங்களா! வாயை பிளந்த போட்டியாளர்கள்

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் குவாண்டம் எனெர்ஜி (Quantum Energy)-யும் ஒன்றாகும். இது ஓர் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம். இதுவே அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது. விலையைக் குறைப்பையே அது அறிவித்திருக்கின்றது.

பிளாஸ்மா (Plasma) வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் பிளாஸ்மா எக்ஸ் (Plasma X) மற்றும் பிளாஸ்மா எக்ஸ்ஆர் (Plasma XR) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலையையே குவாண்டம் எனெர்ஜி தற்போது குறைத்திருக்கின்றது. இரண்டும் சமீபத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும். இரண்டின் விலையிலும் 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது.

Quantum plasma x price cut

விலை குறைப்பால் தற்போது குவாண்டம் பிளாஸ்மா எக்ஸ் 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும், குவாண்டம் பிளாஸ்மா எக்ஸ்ஆர் ரூ. 89 ஆயிரத்திற்கும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. விலைக் குறைப்பிற்கு முன்னர் இதே பிளாஸ்மா எக்ஸ் ரூ. 1,19,525க்கும், பிளாஸ்மா எக்ஸ்ஆர் 99,757 ரூபாய்க்கும் விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போது செய்யப்பட்டு இருக்கும் விலை குறைப்பான வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை நிலுவையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே ஓலாகூட இதேபோன்றதொரு சிறப்பு விலை குறைப்பு சலுகையை இந்தியாவில் இந்தியர்களுக்காக அறிவித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Quantum plasma x

ஓலா எலெக்ட்ரிக் அறிவித்திருக்கும் சலுகையும் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே நிலுவையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், முன்னணி நிறுவனங்கள் வேறு சிலதும் இம்மாதிரியான மார்ச் மாத சிறப்பு விலை குறைப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த நிலையிலேயே தற்போது குவாண்டம் நிறுவனம் மார்ச் மாத விலை குறைப்பு சலுகையை அறிவித்திருக்கின்றது. நிதியாண்டின் இறுதி மாதமான இம்மாதத்தில் நல்ல விற்பனை வளர்ச்சியை பெற என்கிற நோக்கிலேயே வாகன உற்பத்தியாளர்கள் இம்மாதிரியான சிறப்பு சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Quantum plasma xr

பிளாஸ்மா எக்ஸ் மற்றும் பிளாஸ்மா எக்ஸ்ஆர் இரண்டும் ஓட்டுவதற்கு மிகவும் சௌகரியமாக இருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், தடையில்லா பயணம் கம்ஃபோர்டபிளான டிராவல் அனுபவத்துடன் வழங்கும் வகையில் இந்த வாகனங்களை தயார் செய்திருப்பதாக குவாண்டம் அறிவித்து இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிக பவர்ஃபுல் எலெக்ட்ரிக் மோட்டார்களான 1500 வாட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், 60V 50Ah அயன் பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் பிளாஸ்மா எக்ஸ் அதிக திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக குவாண்டம் தெரிவித்து இருக்கின்றது. அது 7.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்றே நிறுவனம் கூறி இருக்கின்றது.

அதேவேளையில், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும். இதுதவிர இதில் ஓர் முழு சார்ஜில் 110 கிமீ தூரம் வரை நம்மால் டிராவல் செய்துக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கே தற்போது குவாண்டம் விலை தள்ளுபடியை அறிவித்து இருக்கின்றது.

இரண்டு ரைடிங் மோட்கள் பிளாஸ்மா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகியவையே அவை ஆகும். இதுதவிர, சாவியே இல்லாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் ரிவர்ஸ் செய்யும் வசதி ஆகியவையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பல விஷயங்களில் பிளாஸ்மா எக்ஸ்-ஐ போலவே பிளாஸ்மா எக்ஸ்ஆர் தேர்வு இருக்கின்றது. ஆனால், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ மட்டுமே ஆகும். இதன் முழு சார்ஜ் ரேஞ்ஜ் திறனும் 100 கிமீட்டராக மட்டுமே இருக்கின்றது. இந்த இரண்டு மாடல்களும் தினசரி பயன்பாட்டிற்கு உகந்தவையாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இல்லதரசிகள், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் என பலதரப்பட்டோர் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாகவே குவாண்டம் அதன் பிளாஸ்மா வரிசையில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயார் செய்திருக்கின்றது. இத்தகைய வாகனத்திற்கே விலை குறைப்பை குவாண்டம் அறிவித்து இருக்கின்றது. ஆகையால், இதற்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 12, 2024, 5:00 [IST]
English summary
Quantum energy ev maker announced price cut for plasma x and plasma xr electric scooters
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X