இதைவிட யாராலும் விலையை குறைக்க முடியாது!! மத்திய அரசுக்கு தான் நன்றி சொல்லணும்... குறுகிய கால சலுகை!
குவாண்டம் எனர்ஜி (Quantum Energy) நிறுவனம் அதன் பிளாஸ்மா எக்ஸ் மற்றும் எக்ஸ்.ஆர் (Plasma X & XR) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்ச் மாத சலுகைகளை ஏப்ரல் மாதத்திற்கும் நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சலுகைகள் குறித்தும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்தும் கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்று குவாண்டம் எனர்ஜி ஆகும். இந்த நிறுவனம் அதன் பிளாஸ்மா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் குறுகிய கால சலுகைகளை அறிவித்து இருந்தது. மார்ச் 31ஆம் தேதி வரையில் இந்த சலுகைகள் வழங்கப்படும் என குவாண்டம் எனர்ஜி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

நடந்து முடிந்த 2023-24ஆம் நிதியாண்டில் முடிந்தவரையில் பிளாஸ்மா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்ய சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், பிளாஸ்மா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சலுகைகளை இந்த 2024 ஏப்ரல் மாதத்திற்கும் குவாண்டம் எனர்ஜி நிறுவனம் நீட்டித்துள்ளது. இதன்படி, குவாண்டம் எனர்ஜியின் பிளாஸ்மா எக்ஸ் மற்றும் எக்ஸ்.ஆர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகைகளை பெறலாம்.
எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக மத்திய அரசாங்கம் EMPS 2024 என்கிற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு எலக்ட்ரிக் 2-வீலரிலும் ரூ.10,000 வரையிலான மானியத்தை உற்பத்தி செய்யும் இவி நிறுவனங்கள் பெறலாம். இந்த மானியம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது என்றாலும், குவாண்டம் எனர்ஜி நிறுவனம் தொடர்ந்து அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது.

இதன்படி, குவாண்டம் எனர்ஜியின் பிளாஸ்மா எக்ஸ் மற்றும் எக்ஸ்.ஆர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் 10% குறைக்கப்பட்டு உள்ளன. இதன் விளைவாக, ரூ.1,19,525 மற்றும் ரூ.99,757 ஆக இருந்த இந்த குவாண்டம் பிளாஸ்மா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் தற்போது ரூ.1,09,000 மற்றும் ரூ.89,000 ஆக குறைந்துள்ளன.
குவாண்டம் பிளாஸ்மா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 10% பணம் தள்ளுபடி ஆனது இந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் கிடைக்கும். இவற்றுடன், தனது அனைத்து 2-வீலர்களுக்கும் பிரத்யேகமான பிராண்ட் சலுகைகளை வழங்கிவரும் குவாண்டம் எனர்ஜி நிறுவனம், மிந்த்ரா, பிஸா ஹட், பேடிஎம், தி மேன் கம்பெனி போன்ற முன்னணி பிராண்ட்களில் இருந்து கூப்பன்களையும் தனது கஸ்டமர்களுக்கு வழங்கி வருகிறது.

இதற்கு நீங்கள் பிளாஸ்மா எலக்ட்ரிக் ஸ்கூட்டரையே வாங்க வேண்டும் என்றில்லை, குவாண்டம் எனர்ஜியின் எந்தவொரு எலக்ட்ரிக் 2-வீலரை வாங்கினாலும் இந்த கூப்பன்களை பெறலாம். பிளாஸ்மா எக்ஸ் மற்றும் எக்ஸ்.ஆர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 1500 கிலோவாட்ஸ் மோட்டார் மற்றும் 60 வோல்ட் 50 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது.
பிளாஸ்மா எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 7.5 வினாடிகளில் எட்டிவிடலாம். ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் ரைடிங் மோட்களுடன் கிடைக்கும் இந்த ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 65kmph ஆகும். பிளாஸ்மா எக்ஸ்.ஆர் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 60kmph வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். ஆனால், இந்த மாடலை 100% பேட்டரி சார்ஜில் பிளாஸ்மா எக்ஸ் ஸ்கூட்டரை காட்டிலும் 20கிமீ கூடுதலாக கொண்டு செல்ல முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குவாண்டம் எனர்ஜியின் இந்த மானியத்துக்கு முக்கிய காரணம், இந்த நிறுவனத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் மானியம் ஆகும். தனக்கு கிடைக்கும் மானியத்தை (ரூ.10,000) அப்படியே சலுகையாக குவாண்டம் எனர்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக, வரும் மாதங்களில் குவாண்டம் பிளாஸ்மா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









