இப்போவே வாங்கினால் ரூ.3,000 கம்மியா கிடைக்கும்... சென்னையிலேயே ஷோரூம் வந்தாச்சு!! அட... இந்த பகுதியிலா?

குவாண்டம் எனர்ஜி (Quantum Energy) இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. ஹைதராபாத்தில் உற்பத்தி தொழிற்சாலையை கொண்டிருக்கும் குவாண்டம் எனர்ஜி அதன் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. அந்த வகையில், சென்னையில் புதியதாக ஒரு டீலர்ஷிப் ஷோரூமை குவாண்டம் எனர்ஜி திறந்துள்ளது. சென்னையில் எந்த பகுதியில் இந்த ஷோரூம் திறக்கப்பட்டு உள்ளது என்பதையும், இங்கு விற்பனை செய்யப்பட குவாண்டம் எனர்ஜியின் எலக்ட்ரிக் 2-வீலர்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் தீவிரமாக இருக்கும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் குவாண்டம் எனர்ஜியும் ஒன்றாகும். எலக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக வாகனங்களில் இருந்து கார்பன் மாசு உமிழப்படுவதை தடுத்து, பசுமையான போக்குவரத்தை கொண்டுவர வேண்டும் என்பது இந்த நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் சுமார் 50 ஆண்டுகால அனுபவமிக்க குசாலவா க்ரூப்பின் கீழ் குவாண்டம் எனர்ஜி செயல்படுகிறது.

quantum energy inaugurated chennai showroom

எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை உருவாக்குவதற்கான ஆய்வு மையத்தையும், உற்பத்தி தொழிற்சாலையையும் ஹைதராபாத்தில் குவாண்டம் எனர்ஜி கொண்டுள்ளது. தற்போதைக்கு இந்த நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் பைக்குகள் எதுவும் விற்பனையில் இல்லை; எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே இப்போதைக்கு குவாண்டம் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்கிறது.

ஏற்கனவே கூறியதுபோல், சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதில் குவாண்டம் எனர்ஜி முனைப்புடன் உள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்துவது இந்த நிறுவனத்தின் விருப்பம் ஆகும். அதன் ஒரு பகுதியாக, சென்னையில் பெருங்குடி பகுதியில் புதியதாக ஒரு டீலர்ஷிப் ஷோரூம் மையத்தை குவாண்டம் எனர்ஜி நிறுவனம் திறந்துள்ளது.

quantum energy inaugurated chennai showroom

இது, தமிழ்நாட்டில் குவாண்டம் எனர்ஜியின் 4வது டீலர்ஷிப் ஷோரூம் ஆகும். தலைநகர் சென்னையில் இதுதான் முதல் ஷோரூம் ஆகும். திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் வேறு சில மாநகரங்களிலும் குவாண்டம் எனர்ஜிக்கு டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன. சென்னை, பெருங்குடி டீலர்ஷிப் ஷோரூம் திறப்பு நிகழ்ச்சியில் குவாண்டம் எனர்ஜியின் இயக்குனர் திரு.குஷால் சி, விஜிபி க்ரூப்பின் நிர்வாக இயக்குனர் திரு.விஜிபி ரவிதாஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

சென்னை பெருங்குடியில் ஏறக்குறைய மொத்தம் 800 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள குவாண்டம் எனர்ஜியின் இந்த டீலர்ஷிப் ஷோரூம் 'டி.எஸ்.எல் இவி' (DSL EV) என்கிற பெயரில் செயல்பட உள்ளது. இந்த புதிய ஷோரூமில் குவாண்டம் எனர்ஜியின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு ரூ.3,000 பணம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

quantum energy inaugurated chennai showroom

இந்த பணம் தள்ளுபடி ஆனது இந்த ஆகஸ்ட் மாதம் முடியும் வரையில் மட்டுமே வழங்கப்பட உள்ளது. சென்னையில் திறக்கப்பட்டுள்ள இந்த முதல் ஷோரூமில் குவாண்டம் எனர்ஜியின் பிளாஸ்மா எக்ஸ், பிளாஸ்மா எக்ஸ்.ஆர், எலக்ட்ரான், மிலன் மற்றும் பிஸினெஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம். தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய ஷோரூமை சேர்த்து, இந்தியாவில் குவாண்டம் எனர்ஜி நிறுவனத்திடம் மொத்தம் 65 டீலர்ஷிப் ஷோரூம் மையங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.79 ஆயிரத்தில் இருந்து ரூ.1.10 லட்சம் வரையில் பல்வேறு தரப்பு வாடிக்கையாளர்களுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை குவாண்டம் எனர்ஜி விற்பனை செய்கிறது. வணிகத்தை பெருக்க வேண்டுமெனில், இவ்வாறு புது, புது இடங்களில் ஷோரூம்களை திறக்க வேண்டியது அவசியமாகும். இதனால், வரும் காலங்களில் குவாண்டம் எனர்ஜியின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்னை சாலைகளிலும் ஓடவுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2024, 8:00 [IST]
English summary
Quantum energy inaugurated new showroom in chennai check all details here
மேலும்... #electric scooter #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X