ஓலாவுக்கு கிடைக்கல.. 5 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஆர்டரை தட்டி தூக்கிய குவாண்டம்.. ரொம்ப பெரிய ஆர்டர்!

இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனங்களில் குவாண்டம் எனெர்ஜி லிமிடெட் (Quantum Energy Limited)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே மிக மிகப் பெரிய ஆர்டர் ஒன்றை தட்டி தூக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, சுமார் 5 ஆயிரம் மின்சார இரண்டு சக்கர வாகனங்களை தயாரித்துக் கொடுப்பதற்கான ஆர்டரையே அது மற்றும் ஒரு முன்னணி நிறுவனத்திடம் இருந்து பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்கும் அந்த நிறுவனம் எது? மேலும், இவ்வளவு எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களை வாங்கி அவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? என்பது பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையுமே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Quantum receives order for 5000 electric scooters

கிரீன் டிரைவ் மொபிலிட்டி (Green Drive Mobility) எனும் நிறுவனமே 5 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஆர்டரை குவாண்டம் எனெர்ஜி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனத்திடம் வழங்கி இருக்கின்றது. கிரீன் டிரைவ் மொபிலிட்டி ஓர் வாடகை வாகன சேவை நிறுவனம் ஆகும். அது டெலிவரி சேவையிலும் ஈடுபட்டு வருகின்றது.

இந்த தன்னுடைய சேவைகளிலும் மின்சார வாகனங்களையே அது பெருமளவில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தன்னுடைய இரண்டு சக்கர வாகன வாடகை சேவையில் கூடுதல் புதிய எலெக்ட்ரிக் டூ-வீலர்களை இணைக்கும் பொருட்டு குவாண்டம் எனெர்ஜியிடம் மிகப் பெரிய ஆர்டரை அது வழங்கி இருக்கின்றது.

இந்த ஆர்டருக்காக இரு நிறுவனங்கள் இணைந்து ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் கிரீன் டிரைவ் மொபிலிட்டிக்கு ஒவ்வொரு கட்டமாக டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றன. ஐந்தாயிரம் யூனிட்டுகளுக்கு ஆர்டர் என்பது அவ்வளவு சாதாரணமான எண்ணிக்கை கிடையாது.

இது மிகப் பெரிய எண்ணிக்கை ஆகும். இதனால்தான் இந்த ஆர்டர் இந்தியாவில், முக்கியமாக, வாகன உலகில் மிகப் பெரிய பேசு பொருளாக மாறி இருக்கின்றது. குறிப்பாக, ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) போன்ற முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்களை இந்த மிகப் பெரிய ஆர்டர் மிகப் பெரிய பொறாமைக்கு ஆளாக்கி இருக்கின்றது.

குவாண்டம் பிசினஸ் (Quantum Bziness) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கே தற்போது ஆர்டர் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதனை வாடகை வாகனமாகவும் மற்றும் டெலிவரி வாகனமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான பிரத்யேக வசதிகளுடனேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குவாண்டம் தயார் செய்திருக்கின்றது.

இதன் அடிப்படையில் ஸ்கூட்டரின் பின் இருக்கை நிற்க வைக்கும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறு செய்யும்பட்சத்தில் பின் பக்கத்தில் டெலிவரி பொருட்களை வைப்பதற்கான பெட்டியை அங்கு வைத்துக் கொள்ள முடியும். இந்த இருக்கையை கீவே இறக்கிவிடும்பட்சத்தில் அங்கு ஓர் நபரால் அமர்ந்து பயணிக்க முடியும்.

இத்தகை சூப்பரான வசதிக் கொண்ட குவாண்டம் பிசினஸ் ஆகும். இதுமாதிரியான வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் அரிதாகவே கிடைக்கின்றது. ஆனால், ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தரிடம் இதுமாதிரியான தயாரிப்புகள் ஒன்று கூட இல்லை. எனவேதான் மிகப் பெரிய ஆர்டர் தற்போது குவாண்டம் பக்கம் திரும்பி இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும். இதற்காக 1200 W திறன் கொண்ட ஹப் வகை எலெக்ட்ரிக் மோட்டார் குவாண்டம் பிசினஸில் வழங்கப்பட்டு இருக்கின்றது. பேட்டரி பேக்கை பொருத்த வரை 60V 36.4Ah திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்கையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனைக் கொண்டு ஒரு நாளுக்கான நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் உச்சபட்ச டெலிவரியை இதில் செய்ய முடியும். மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் 12 டிகிரி சாய்வான பகுதிகளில் பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

ஆகையால், எந்த மாதிரியான இடங்களில் டெலிவரி வந்தாலும் குவாண்டம் பிசினஸ் வாயிலாக டெலிவரி செய்ய முடியும் என தெரிகின்றது. கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு விதமான நிற தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நீங்கள் டெலிவரி சேவையில் ஈடுபட விரும்புபவர் என்றால் உங்களுக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 99,593 க்கு விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். 12அங்குல வீல், முன் மற்றும் பின் பக்க வீலில் டிஸ்க் பிரேக், எல்சிடி திரை, ரிமோட் லாக் மற்றும் அன்லாக் வசதி என ஏகப்பட்ட சிறப்புகளை குவாண்டம் பிசினஸ் தாங்கி இருக்கின்றது. எனவே தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் மிக சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இது இருக்கும் என தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 30, 2024, 16:11 [IST]
English summary
Quantum energy secures massive 5000 electric scooter order
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+