உதயமாகிறது புதுமுக நிறுவனம்! ஓலா-டிவிஎஸ் எல்லாருக்கும் வேட்டு வைக்க போறாங்க! புது ஆலை எங்கு அமைய போகுது தெரிமா
இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உலகை அலங்கரிக்கும் விதமாக ஓர் புதுமு நிறுவனம் விரைவில் உதயமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ராஃப்ட் காஸ்மிக் இவி (Raft Cosmic EV). இந்த பிராண்டே புதிதாக மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளராக அவதாரம் எடுக்க இருக்கின்றது. நிறுவனம் அதன் தாயகத்திலேயே உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹவுரா மாவட்டத்தில் உள்ள டோம்ஜுர் பகுதியிலேயே நிறுவனம் அதன் உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டு இருக்கின்றது. ராஃப்ட் காஸ்மிக் இவி, இது காஸ்மிக் பிர்லா குழுமம் (Cosmic Birla Group)-இன் சப்சைடி பிராண்ட் ஆகும். இந்த பிராண்டு முன்னதாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முக்கிய பாகங்களை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இயங்கி வந்தது.

இந்த நிலையிலேயே தற்போது புதிதாக அது ராஃப்ட் காஸ்மிக் இவி எனும் பெயரில் இ-வாகன உற்பத்தியைக் கையில் எடுத்திருக்கின்றது. நிறுவனம் தொடக்கத்தில் ஆண்டிற்கு 12 ஆயிரம் யூனிட்டுகள் எலெக்ட்ரிக் டூ-வீலர்களையே உற்பத்தி செய்ய இருக்கின்றது. இந்த உற்பத்தி எண்ணிக்கை பின் நாளில் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ராஃப்ட் மோட்டார்ஸ் (Raft Motors) கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் கையகப்படுத்தியது. இதற்கு பின்னரே மின்சார வாகன உற்பத்தியை மேற்கொள்ளும் பணியை காஸ்மிக் பிர்லா குரூப் கையில் எடுத்தது. இந்த நிலையிலேயே ராஃப்ட் காஸ்மிக் இவி ரூ. 50 கோடியை மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்திக்கு ஒதுக்கி இருக்கின்றது.
நிதியாண்டு 2025 ஆம் ஆண்டிற்குள் நிறுவனம் இ-வாகன உற்பத்தியைத் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது. ராஃப்ட் மோட்டார்ஸ் சில ஆண்டுகளாகவே மின்சார வாகன உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஆண்டிற்கு 11 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை முதலீட்டையும் அது ஈட்டி வருகின்றது.
இத்தகைய பிராண்டையே கையகப்படுத்தி தற்போது ராஃப்ட் காஸ்மிக் இவி எனும் பிராண்டாக மாற்றியிருக்கின்றது. காஸ்மிக் பிர்லா குழுமம். அதேநேரத்தில் காஸ்மிக் பிர்லா குழுமம் என்பது ஆண்டிற்கு பல கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டி வருகின்றது. நிறுவனம் இந்தியன் ரயில்வேஸ்-க்கே மிகப் பெரிய சப்ளையராக இருந்து வருகின்றது.
இது மேற்கு வங்கத்தில் மட்டும் 12 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தகைய பிரமாண்ட நிறுவனமே தற்போது எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தியிலும் களமிறங்கி உள்ளது. இதன் வருகை ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி, பஜாஜ் மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட பிராண்டுகளுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போதைய நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே இந்தியாவின் முதன்மையான மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளராக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய பிராண்டாக ராஃப்ட் காஸ்மிக் இவி ரூ. 50 கோடி முதலீட்டுடன் நாட்டில் களமிறங்க இருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன உலகில் போட்டி மிகப் பெரிய அளவில் சூடுபிடித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகன மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அரசின் மின் வாகன விற்பனை ஊக்குவிப்பு திட்டத்தின் வாயிலாக இது விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. இதை தங்களுக்கு சாதமாக மாற்றிக் கொள்ளும் பொருட்டே புதுமுக நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தியாவில் கால் தடம் பதித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








