தமிழ்நாட்டுல காட்சிப்படுத்தினாங்களே அதுதானே இது.. இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா! ஓலாவுக்கே அப்பனாக ஆகபோது!

புதுமுக மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ரேப்டீ (Raptee), அதன் முதல் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)-ஐ இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதை உறுதி செய்திருக்கின்றது. அது என்ன பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது? அதன் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலை காரணமாகவே புதிய வாகனங்களை போலவே இந்தியாவில் புதுமுக மின்வாகன உற்பத்தியாளர்களின் அதிகரித்துக் காணப்படுகின்றது. அந்தவகையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியைத் தொடங்கியிருக்கும் புதுமுக நிறுவனங்களில் ரேப்டீ (Raptee)-யும் ஒன்றாகும்.

Raptee electric motorcycle

இந்த நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை (Electric Vehicle) இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றது. வருகின்ற ஜூன் மாதத்திலேயே அது அதன் முதல் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றது. 2025 நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் எலெக்ட்ரிக் டூ-வீலரை அறிமுகம் செய்யவே ரேப்டீ திட்டமிட்டு இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனம் அதன் தயாரிப்பாக எலெக்ட்ரிக் பைக்கையே தனது முதல் இ-டூவீலராக இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அது ஓர் பிரீமியம் இ-பைக்காகும். இந்த பைக்கையே அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரேப்டீ நிறுவனம் காட்சிப்படுத்தியது. இதையே இந்தியாவிற்கான முதல் இ-பைக்காக அந்நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கவும் திட்டமிட்டு இருக்கின்றது.

Raptee electric motorcycle side view

ரூ. 2.5 லட்சம் தொடங்கி ரூ. 3 லட்சம் வரையிலான விலையிலேயே இது விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது. இது ஓர் பிரீமியம் தர பைக் என்பதாலேயே இந்த அளவு அதிக விலையில் அது விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது. இந்த பைக்கை உருவாக்க அதிக காலத்தை நிறுவனம் செலவிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன்படி, ஆர் அண்ட் டி (R&D)-யில் அது 5 ஆண்டுகள் வரை செலவிட்டிருக்கின்றது. இந்த கடுமையான உழைப்பிற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதேவேளையில், இதுபோன்று நீண்ட நாட்களை செலவிட்டதனாலேயே ரேப்டீயின் இந்த எலெக்ட்ரிக் பைக் அதிக அதி நவீன வசதிகளைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் வழக்கமான டூ-வீலர்களுக்கான சார்ஜிங் பாயிண்டில் வைத்து மட்டுமல்ல இந்த பைக்கை எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் பாயிண்டிலும் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதுபோன்ற ஏகப்பட்ட சிறப்பம்சங்களைக் கொண்டதாகவே இந்த பைக்கை உருவாகி இருப்பதாக ரேப்டீ தெரிவித்து இருக்கின்றது.

குறிப்பாக, வெறும் 45 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்யும் திறனும் இந்த வாகனத்திற்கு வழங்கப்பட்டு இருப்பதாக ரேப்டீ கூறியிருக்கின்றது. வீட்டிலேயே வைத்து இந்த அளவு வேகமாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் சிசிஎஸ்2 (CCS2) திறன் வாய்ந்த இ-பைக்காகும்.

இதனாலேயே அதனால் அதிக வேகத்தில் சார்ஜாகும் திறனை பெற முடிந்திருக்கின்றது. இந்த வசதியை கட்டணமில்லா நிலையிலேயே ரேப்டீ அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏசி மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக இது சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரேப்டீயின் இந்த எலெக்ட்ரிக் பைக் 250 சிசி திறன் கொண்ட ஐசிஇ வாகனங்களுக்கு டஃப் கொடுக்கும் என கூறுகின்றது. ஆகையால், 150 சிசி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்சர் தொடங்கி ராயல் என்பீல்டு பைக் வரை என பலவற்றிற்கு இது மிகப் பெரிய போட்டியாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ரேப்டீ நிறுவனம் இந்த பைக்கை வரும் நிதியாண்டில் சுமார் 10 ஆயிரம் யூனிட்டுகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதில் பாதியை இந்த ஆண்டு முடிவடைவதற்குள் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதன் உற்பத்தி பணிகள் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலேயே நடைபெற இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், நடப்பாண்டு இறுதிக்குள் ரேப்டீயின் எலெக்ட்ரிக் பைக் இந்திய சாலையில் நடமாடத் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரேப்டீயின் எலெக்ட்ரிக் பைக் முற்றிலும் தனித்துவமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருப்பதால் பலரின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற ஸ்டைல் மற்றும் உள்ளே இருக்கும் அனைத்தும் தெரிகின்ற வகையில் நேக்கட் ஸ்டைல் ஆகியவற்றைக் கொண்டதாகவே ரேப்டீ எலெக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

நிறுவனம் சுமார் 85 கோடி ரூபாயை மின்வாகன உற்பத்திக்காக முதலீடு செய்திருக்கின்றது. இது முதல் கட்ட முதலீடு மட்டுமே ஆகும். அடுத்தடுத்து வரும் நாட்களில் இந்த முதலீட்டை பலமடங்கு அதிகரிக்கவே ரேப்டீ திட்டமிட்டுள்ளது. நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கும் மின்சார வாகன உற்பத்தி ஆலையில் ஆண்டு ஒன்றிற்கு 1 லட்சம் யூனிட் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை தயாரிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரேப்டீ நிறுவனத்தின் புதிய ஆலையால் சுமார் 500-க்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. இந்த நிறுவனம் மின்சார இருசக்கர வாகனம் மட்டுமின்றி பேட்டரி பேக் உற்பத்தியையும் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கின்றது. விரைவில் இந்த பணிகளையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆலையும் அதே சென்னை உற்பத்தி ஆலையிலேயே தொடங்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ரேப்டீயின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின்படி, நிறுவனம் மணிக்கு 135கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் பைக்கையே தயாரித்துக் கொண்டிருக்கின்றது என்பது தெரிகின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கால் வெறும் 3.5செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60கிமீ வேகத்தை எட்ட முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும், ஒரு முழு சார்ஜில் 150கிமீ ரேஞ்ஜ் தரும் என்றும் தெரிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தனித்துவமான மற்றும் அதிக சிறப்புகள் தாங்கிய வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. அந்தவகையில், ரேப்டீயின் இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கும் மிகவும் சிறப்பான வரவேற்பே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், போட்டி சற்று அதிகம் என்பதால் இது என்ன மாதிரியான வெற்றியைக் காணும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதேவேளையில், ஓலா போன்ற நிறுவனங்களே இன்னும் எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்காத சூழல் காணப்படும் நிலையில், ரேப்டீ முன்னணி நிறுவனங்களையே மிஞ்சும் வகையில் இந்த பிரீமியம் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. எனவே இந்த பிரிவில் ரேப்டீ அதன் கொடியை நிலைநாட்டும் என்றும் யூகிக்க முடிகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 20, 2024, 19:41 [IST]
English summary
Raptee all set to launch its first e bike in india here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+