இ-கார்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனிலும் சார்ஜ் செஞ்சுக்கலாம்.. சென்னை நிறுவனத்தின் கை வண்ணத்தில் தயாரான இ-பைக்!
மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ராப்டீ.எச்வி (Raptee.HV), இந்தியாவின் முதல் ஹை-வோல்டேஜ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் (High-Voltage Electric Motorcycle)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை, எலெக்ட்ரிக் கார்களைச் சார்ஜ் செய்யும் மையம் (Electric Car Charging Stations)-களில் வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. தயாரிப்பு நிறுவனமும் இதை உறுதிச் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் மையங்களில் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ளும் திறுன் கொண்ட பைக் எனும் மகுடத்தை இந்த இ-பைக் சூடியிருக்கின்றது.
ராப்டீ டி 30 (Raptee T30) எனும் பெயரிலேயே இந்த அந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

மேலும், இந்த மின்சார பைக் ஓர் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வைத்து தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் பைக் மாடல் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இதனை ராப்டீ நிறுவனம் 250 சிசி - 300 சிசி திறன் கொண்ட ஐசிஇ பைக்குகளுக்கு இணையான திறனை வெளியேற்றக் கூடியதாக தயார் செய்திருக்கின்றது.
மேலும், ஓர் முழு சார்ஜில் 200 கிமீ வரையில் ரேஞ்ச் தரக் கூடியதாகவும் இந்த இ-பைக்கை அது தயார் செய்திருக்கின்றது. நிஜ வாழ்க்கை பயன்பாட்டில் இந்த எலெக்ட்ரிக் பைக் 150 கிமீ வரை ரேஞ்ச் தரும் என கூறப்படுகின்றது. இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பது ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரி என கூறப்படுகின்றது.
ஆகையால், தூசி மற்றும் நீர் போன்றவற்றால் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என நம்பலாம். இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் அதிக திறனை வெளியேற்றக் கூடியது ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 135 கிமீ ஆகும். மேலும், வெறும் 3.5 செகண்டுகளிலேயே அது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிடும்.
இந்த வாகனத்தில் பிரத்யேகமான பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அது தொடர்ந்து, பேட்டரியைக் கண்கானிக்கும். வாகனம் ஓடும் போதும், நிற்கும் போதும் அல்லது ஐடிலிங்கில் இருக்கும் என 24x7 அது கண்கானிப்பைச் செய்யும். இத்துடன், ஏதேனும் ஆபத்தான சூழல் ஏற்படும் எனில் அதுகுறித்த எச்சரிக்கையை அது வழங்கும்.
இதுபோன்று இன்னும் பல புதிய தொழில்நுட்ப வசதிகளை இந்த எலெக்ட்ரிக் பைக்கில் ராப்டீ.எச்வி வழங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஒட்டுமொத்தமாக நன்கு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஹரிசோன் ரெட் (Horizon Red), ஆர்க்டிக் ஒயிட் (Arctic White), மெர்க்குரி கிரே (Mercury Grey) மற்றும் எக்லிப்ஸ் பிளாக் (Eclipse Black) ஆகியவையே அவை ஆகும்.
முதலில் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் டெலிவரி தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும், கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவிலும்தான் இந்த நிறுவனம் தொடங்க இருக்கின்றது. மேலும், எலெக்ட்ரிக் பைக்கின் டெலிவரி பணிகள் ஜனவரியில் இருந்து தொடங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. எனவே சீக்கிரமே இந்த எலெக்ட்ரிக் பைக்கை இந்திய சாலைகளில் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ராப்டீ டி30 எலெக்ட்ரிக் பைக் அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாகவும் காட்சியளிக்கின்றது. அந்தவகையில் இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஓஎஸ் வசதி உடன் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. வாகனங்களுக்கான லினக்ஸ் பிளாட்பாரத்தை தழுவிய ஓஎஸ்-ஸே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார்களுக்கான சார்ஜிங் மையங்களிலும் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ளும் திறனுடன் விற்பனைக்கு வரும் முதல் இ-பைக் என்பதால் ராப்டீ டி 30 இதற்கு நல்ல வரவேற்பு மின்சார டூ-வீலர்கள் மத்தியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது இந்தியாவில் இ-வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








