கொஞ்சமா-தான் மாத்தியிருக்காங்க மத்தபடி ராயல் என்பீல்டு பைக் மாதிரியே இருக்கு! இவங்களா இப்படி பண்ணயிருக்காங்க!
ரெனால்ட் (Renault) நிறுவனம், எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் (Electric Motorcycle) ஒன்றை இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சிகளில் ஒன்றான 'பாரிஸ் மோட்டார் ஷோ 2024' (Paris Motor Show 2024)-இன் வாயிலாகவே அது எலெக்ட்ரிக் பைக்கை அது அறிமுகம் செய்திருக்கின்றது. அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கிய இந்த மோட்டார் ஷோ வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இந்த நிலையிலேயே, பாரிஸ் மோட்டார் ஷோ வாயிலாக தன்னுடைய இ-பைக்கை ரெனால்ட் அறிமுகம் செய்திருக்கின்றது.
இந்த வாகனத்திற்கு ஹெரிடேஜ் ஸ்பிரிட் ஸ்கிராம்ப்ளர் (Heritage Spirit Scrambler) எனும் பெயரை ரெனால்ட் நிறுவனம் சூட்டி இருக்கின்றது. இது ஓர் ஸ்கிராம்ப்ளர் வகை மோட்டார்சைக்கிள் ஆகும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் மாடல்களில் ஒன்றான கான்டினென்டல் ஜிடி650 (Royal Enfield Continental GT650) பைக் மாடலை பிரதிபலிக்கும் ஸ்டைலிலேயே இந்த பைக்கை ரெனால்ட் நிறுவனம் தயாரித்து இருக்கின்றது.

அதேவேளையில், இது மின்சாரத்தில் இயங்கும் பைக் என்பது மட்டுமே இதில் வித்தியாசமாக உள்ளது. மேலும், இந்த எலெக்ட்ரிக் பைக்கை முதலில் ஐரோப்பிய சந்தையிலேயே அது விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. 23,340 யூரோக்களுக்கு அது விற்கப்பட இருக்கின்றது. தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ. 21.2 லட்சம் ஆகும்.
இந்த அதிக விலையிலேயே ரெனால்ட் பிராண்டின் இ-பைக் விற்கப்பட இருக்கின்றது. இந்த வாகனத்தை மிகவும் குறைவான எண்ணிக்கையில் விற்பனைக்கு வழங்க ரெனால்ட் திட்டமிட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஓர் கைகளால் தயாரிக்கப்பட்ட வாகனம் ஆகும். இதனால்தான் அதன் விலை மிகவும் காஸ்ட்லியாக இருக்கின்றது.

மேலும், இப்போதே இதற்கான ப்ரீ ஆர்டர்களை ஏற்க நிறுவனம் தொடங்கிவிட்டது. இந்த பைக்கின் உருவாக்கத்தில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான அடெலியர்ஸ் ஹெரிடேஜ் பைக்ஸ் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை இரண்டு விதமான வெர்ஷன்களில் ரெனால்ட் விற்பனைச் செய்ய இருக்கின்றது.
ஸ்டாண்டர்டு மற்றும் 50 வெர்ஷன் ஆகியவையே அவை ஆகும். இதில், 50 வெர்ஷனின் விலையே ரூ. 21.2 லட்சம் ஆகும். இதன் டாப் ஸ்பீடே மணிக்கு வெறும் 45 கிமீ மட்டுமே ஆகும். இந்த பைக்கை ஐரோப்பாவில் 16 வயது சிறுவர்களாலும் ஓட்டிக் கொள்ள முடியும்.

இதைவிட அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடிய ஓர் தேர்வாகவே ஸ்டாண்டர்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 99 கிமீ ஆகும். இதனை 24,950 யூரோக்களுக்கு விற்க ரெனால்ட் திட்டமிட்டு உள்ளது. இந்த இரண்டும் பார்க்க ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளைப் போலவே தென்படுகின்றது.
இருப்பினும், தனித்துவமான அம்சங்கள் சிலவற்றையும் இந்த பைக்கில் காண முடிகின்றது. எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய சிறிய வகை எல்இடி ஹெட்லைட், அகலமான ஹண்டில்-பார், ஃப்யூவல் டேங்க் போன்ற அமைப்பு மற்றும் பெரிய பேட்டரி பேக் ஆகியவற்றை இந்த பைக்கில் பார்க்க முடிகின்றது.
எரிபொருள் தொட்டி பைக்கிற்கான சில முக்கிய பாகங்களைத் தாங்கி இருக்கும் என கூறப்படுகின்றது. எலெக்ட்ரிக் பைக்கில் ஓர் முழு சார்ஜில் 110 கிமீ ரேஞ்ச் தரக் கூடிய 4.8 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் ஒட்டுமொத்த எடையே 137 கிலோ மட்டுமே ஆகும். எனவே இதை சுலபமாக ஹேண்டில் செய்ய முடியும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் பாரிஸ் மோட்டார் ஷோ வாயிலாக எலெக்ட்ரிக் பைக்கை மட்டுமல்ல 4 இ-டெக், மினி கேரவன், ஏரோபிளேன் மற்றும் தண்ணீரில் இயங்கும் திறன் கொண்ட ஸ்கூட்டர் போன்ற அமைப்புடைய வாகனம் ஆகியவற்றையும் அது வெளியீடு செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









