எது பஜாஜ் பைக்கில் டிராக்சன் கன்ட்ரோலா! இந்த அம்சத்துக்காகவே எல்லாரும் இந்த பைக்கை வாங்கி குவிக்க போறாங்க!

பஜாஜ் (Bajaj) நிறுவனம் இந்தியாவில் விரைவில் அதன் புதுப்பிக்கப்பட்ட பல்சர் பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அது பல்சர் என்250 (Pulsar N250) மாடலையே அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த பைக்கின் சோதனையோட்டத்தை ஏற்கனவே நிறுவனம் தொடங்கிவிட்டது. இப்போது இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

எனவே சீக்கிரமே அந்த பைக் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே அந்த பைக் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. பைக்-வேல் தளம் வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, புதிய பஜாஜ் பல்சர் என்250 பைக் டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

Bajaj pulsar n250 to get traction control

இதுவே இந்த அம்சத்தைப் பெறும் முதல் பஜாஜ் தயாரிப்பு ஆகும். ஸ்விட்ச் செய்யக் கூடிய டிராக்சன் கன்ட்ரோல் (traction control) சிஸ்டமே என்250 பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர இன்னும் பல சிறப்பம்சங்களும் இந்த பைக்கில் இடம் பெற இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய அம்சங்கள் பலவும் பல்சர் என்250 பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த ஏபிஎஸ் சிஸ்டம் மூன்று விதமான லெவல்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது. இதன் வாயிலாக ஈரமான சாலை, கரடு-முரடான பாதை ஆகியவற்றில் மிக சிறப்பான பயன்பாட்டை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிகின்றது.

தொடர்ந்து, புதிய முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் பல்சர் என்250 பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்மார்ட் இணைப்பு வசதிக் கொண்டதாக இந்த திரை இருக்கும். ஆகையால், அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி போன்ற தகவல்களை வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே அதில் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேபோல், சஸ்பென்ஷன் செட்-அப்பிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அந்தவகையில், அப்-சைடு-டவுன் (upside-down) ஷாக் செட்-அப்பே புதிய பல்சர் என்250இல் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் இடம் பெற இருக்கின்றன. 250 சிசி ஆயில் கூல்டு மோட்டாரே இந்த பைக்கில் இடம் பெற இருக்கின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24.1 பிஎச்பி பவரையும், 21.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடனேயே இந்த மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கும். இதுபோன்று இன்னும் பல அம்சங்களும் வரவிருக்கும் பல்சர் என்250 பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஆனால், என்ன மாதிரியான புதிய நவீன கால சிறப்பம்சங்கள் இதில் இடம் பெற இருக்கிறது என்பது பற்றிய விபரங்களை நிறுவனம் அறிவிக்கவில்லை. விரைவில் இப்போது இந்த பைக் டிராக்சன் கன்ட்ரோலை பெற இருக்கின்றது என்கிற தகவல் வெளியாகி இருப்பதைப் போலவே அடுத்து வரும் நாட்களில் மேலும் பல முக்கிய விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய நிற தேர்வுகளிலேயே இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் பஜாஜ் பல்சர் என்250 ரூ. 1.50 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது. புதிய அம்சங்கள் காரணமாக இதன் விலை ரூ. 10 ஆயிரம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதன் வருகை இந்தியாவில் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் போன்ற பைக் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் பஜாஜ் பல்சர் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக் மாடல்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே யாரும் எதிர்பார்த்திராத டிராக்சன் கன்ட்ரோல் அம்சத்துடன் பல்சர் என்250 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது பஜாஜ்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 2, 2024, 11:45 [IST]
English summary
Reports says bajaj pulsar n250 to get traction control
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+