எல்லா தினசரி பயன்பாட்டுக்கு உகந்த பெட்ரோல் டூ-வீலர்களையும் இது வச்சு செய்ய போகுது! விலை ரூ. 84,990 மட்டுமே!
பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors) இந்தியாவில் ரிவோல்ட் ஆர்வி1 (Revolt RV1) எனும் புதுமுக எலெக்ட்ரிக் பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை பிரத்யேகமாக தினசரி பயன்பாட்டிற்கே என்றே உருவாக்கி இருப்பதாக அந்நிறுவனம் கூறியிருக்கின்றது. எனவே, இந்த பிரிவின் முதல் எலெக்ட்ரிக் பைக்காக ரிவோல்ட் ஆர்வி1 மாடல் மாறியுள்ளது. இந்தியாவில் இந்த பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் டூ-வீலர்களுக்கு வரவேற்பு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதற்கு உதாரணமாக, ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினா உள்ளிட்ட பைக் மாடல்களைக் கூறலாம். இத்தகைய பிரிவை மையப்படுத்தியே தன்னுடைய ரிவோல்ட் ஆர்வி1 இ-பைக்கை ரிவோல்ட் மோட்டார்ஸ் தற்போது நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு மிகவும் குறைவான விலையையே ரிவோல்ட் மோட்டார்ஸ் நிர்ணயம் செய்திருக்கின்றது.

அறிமுகமாக ரூ. 84,990 அதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த கம்யூட்டர் வகை எலெக்ட்ரிக் பைக்கை இரண்டு விதமான தேர்வுகளில் ரிவோல்ட் மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஆர்வி1 (RV1) மற்றும் ஆர்வி1 பிளஸ் (RV1+) ஆகியவையே அவை ஆகும்.
இதில் ஆர்வி1-தான் ஆரம்ப நிலை தேர்வாகும். ஆர்வி1 பிளஸ் உயர்நிலை தேர்வாகும். இதற்கு ரூ. 99,990 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த இரண்டும் ஐசிஇ எஞ்சின் கொண்ட டூ-வீலர்களைக் காட்டிலும் மிக அதிகம் லாபத்தை வழங்கும் என ரிவோல்ட் மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.
மூன்று மடங்கு குறைவான செலவையே இது வழங்கும் என நிறுவனம் தெரிவிக்கின்றது. ரிவோல்ட் நிறுவனம் நிறுவனத்தின்கீழ் ஆர்வி400 () மற்றும் ஆர்வி400 பிஆர்இசட் () ஆகியவை மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தநிலையில் தற்போது புதிய விலை குறைவான மாடல் விற்பனைக்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக்கின் பேலோடு திறன் 250 கிலோ என கூறப்படுகின்றது. இவ்வளவு அதிக எடையை ஏற்றினாலும் இதன் கிரிப் மற்றும் திறன் வெளிப்பாட்டில் சற்றும் சுணக்கம் இருக்காது என ரிவோல்ட் மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கின்றது. இதுதவிர, நகர்புற மற்றும் லாங் டிராவல் என இரண்டிற்குமான எலெக்ட்ரிக் டூவீலராகவும் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பைக்கில் மிட்-மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. செயின் டிரைவ் சிஸ்டத்தினாலேயே இது இயங்கும். இத்துடன், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக டிஸ்க் பிரேக்குகள், பன்முக ரைடிங் மோட்கள் மற்றும் ரிவர்ஸ் மோட் ஆகியவற்றையும் இந்த மின்சார பைக்கில் ரிவோல்ட் மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது.
இதுமட்டுமல்ல வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு 6 அங்குல டிஜிட்டல் எல்சிடி திரை ஒன்றும் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இது பைக்கில் ஏற்படும் கோளாறுகள் முதல் தொடங்கி ரியல் டைம் ரைடு வரை என பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கும்.
தொடர்ந்து, பிரீமியம் அம்சங்களாக இந்த இ-பைக்கில் எல்இடி ஹெட்லைட், நீளமான இருக்கை, அட்வான்ஸ்டு சஸ்பென்ஷன் செட்-அப், டிஜிட்டல் சாவி, ப்ளூடூத் இணைப்பு, லெக் குவார்டு மற்றும் சென்டர் ஸ்டாண்டு ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன.
2.2 kWh மற்றும் 3.24 kWh ஆகியவையே அவை ஆகும். இதில் முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது ஒன்று அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 160 கிமீ ரேஞ்சையும் வழங்கும். இரண்டும் ஐபி67 தர சான்று பெற்றவை ஆகும்.
அதாவது, நீர், தூசி போன்றவற்றால் இது பாதிக்காது என்பதற்கான சான்ற இதுவாகும். ரிவோல்ட் மோட்டார்ஸ் அதன் அப்கிரேட் செய்யப்பட்ட ஆர்வி400 மாடலையும் அறிமுகப்படுத்தி இருக்கின்றது. ஏற்கனவே அதிக ஆற்றலையும், அதிக பாதுகாப்பையும் இந்த எலெக்ட்ரிக் பைக் மாடலை கூடுதல் பாதுகாப்பானதாகவும், சௌகரியமானதாகவும் மற்றும் அதிக ஆற்றலை உருவாக்கக் கூடியதாகவும் தயார் செய்திருக்கின்றனர்.
இதுதவிர, அதிக வேகத்தில் சார்ஜாகிக் கொள்ளும் திறனும் இதற்கு வழங்கப்பட்டு உள்ளது. அந்தவகையில், ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தும்போது இந்த பைக்கை வெறும் 90 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். தொடர்ந்து, இந்த மின்சார பைக்கிலும் ரிவோல்ட் மோட்டார்ஸ் டிஜிட்டல் திறன் கொண்ட திரை, கம்ஃபோர்ட்டான இருக்கை மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி ஆகியவற்றை வழங்கி இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, கால் பகுதிக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் இதனை மேருகேற்றியிருப்பதாக அந்நிறுவனம் கூறியிருக்கின்றது. தொடர்ந்து, ஓர் முழு சார்ஜில் 160 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் திறனை வழங்கும் வகையிலும் இதனை ரிவோல்ட் மோட்டார்ஸ் அப்டேட் செய்திருக்கின்றது. மேலும், புதிய நிற தேர்வான லூனார் கிரீன் (Lunar Green) எனும் வண்ண ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அனைத்து அம்சங்களும் இந்த வாகனங்களின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே ரிவோல்ட் மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் ரிவோல்ட்-இன் இந்த புதிய தயாரிப்புகளுக்கு இந்திய மின்வாகன காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








