ஒரே வாரத்துல இவ்ளோ புக்கிங்கா!.. பைக்கோட விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் ஷோரூம் வாசல்ல போய் நிப்பீங்க!

ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors), சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)-கிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த பைக்கிற்கு கிடைத்த புக்கிங் பற்றிய விபரங்களே வெளியாகி இருக்கின்றன. சுமார் 16 ஆயிரம் புக்கிங்கே அந்த பைக் குவித்திருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. ரிவோல்ட் நிறுவனம், சென்ற வாரத்தில் (செப்டம்பர் 17 அன்று) ரிவோல்ட் ஆர்வி1 (Revolt RV1) எனும் எலெக்ட்ரிக் பைக் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splender), பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) மற்றும் சிடி100 (CT100) ஆகிய பைக் மாடல்களைப் போல இதுவும் ஓர் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த டூ-வீலர் ஆகும். ஆனால், இது ஓர் எலெக்ட்ரிக் பைக் ஆகும். இந்த பிரிவில் விற்பனைக்கு வரும் முதல் இ-பைக் இதுவே ஆகும்.

Revolt rv1 e-bike receives overwhelming response

அதாவது, இந்தியாவின் முதல் கம்யூட்டர் வகை எலெக்ட்ரிக் பைக்காகவே ஆர்வி1 மாடலின் வருகை உள்ளது. இந்த பைக்கே தற்போது புக்கிங் மாபெரும் சாதனையைப் படைத்திருக்கின்றது. இந்த பைக் இந்தியாவில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆர்வி1 (RV1) மற்றும் ஆர்வி1 பிளஸ் (RV1+) ஆகியவையே அவை ஆகும்.

இவற்றிற்கே அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் 16 ஆயிரம் புக்கிங்குகள் கிடைத்திருக்கின்றன. எனவே வரும் நாட்களில் இந்த எலெக்ட்ரிக் பைக் மின்சார டூ-வீலர்களுக்கு மட்டுமின்றி ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் பஜாஜ் பிளாட்டினா போன்ற பைக் மாடல்களுக்கும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரிவோல்ட் நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு மலிவு விலையையே நிர்ணயித்திருக்கின்றது. ஆர்வி1 தேர்விற்கு ரூ. 84,990-ம், ஆர்வி1 பிளஸ் தேர்விற்கு ரூ. 99,990-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த விலை குறைவான பைக்கை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் கைகளாலேயே ரிவோல்ட் மோட்டார்ஸ் அறிமுகம் செய்து வைத்தது.

ரிவோல்ட் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை அதிக எடை தாங்கும் திறன் கொண்டதாக தயாரித்திருக்கின்றது. சுமார் 250 கிலோ எடையைக்கூட இது தாங்கும். இது வழக்கமான கம்யூட்டர் வகை பைக் மாடலைக் காட்டிலும் 150 கிலோ அதிக எடையைத் தாங்கும் திறன் ஆகும்.

இத்துடன், பலதரப்பட்ட ரைடிங் மோட், ரிவர்ஸ் செய்யும் மோடுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, 6 அங்குல எல்சிடி திரை, டூயல் டிஸ்க் பிரேக்குகள், ஸ்டைலான எல்இடி ஹெட்லைட் ஆகியவற்றையும் இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க ஆர்வி1 பிளஸ் வேரியண்டிற்கு அதிக வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்ளும் திறனையும் ரிவோல்ட் மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 1.5 மணி நேரங்களில் அதை முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். ஆகையால், காலையில் ஆஃபிஸ் கிளம்புறதுக்கு முன்னாடி சார்ஜ் போட்டால், ரெடியாகிட்டு திரும்பி வருவதற்குள், அலுவலகம் போயிட்டு மீண்டும் வீட்டுக்கு வருவதற்கு தேவையான சார்ஜ் திறனை பைக் ஏற்றிக் கொள்ளும் என தெரிகின்றது.

ரிவோல்ட் மோட்டார்ஸ் இந்த பைக்கில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களை வழங்குகின்றது. 2.2 kWh மற்றும் 3.24 kWh ஆகிய பேட்டரி பேக்குகளே அவை ஆகும். இதில் முதல் பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 160 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பேட்டரி பேக் ஐபி67 தர சான்று பெற்றது. அதாவது, தண்ணீர், வெயில் மற்றும் தூசி உள்ளிட்டவற்றால் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய ஓர் சூப்பரான தினசரி பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் டூ-வீலராகவே ரிவோல்ட் ஆர்வி1 மாடல் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் போட்டி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சாலைகளை வரும் நாட்களில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களே ஆட்சி செய்யும் என்பதற்கு சான்றாக ரிவோல்ட் ஆர்வி1 பைக் மாடலுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் புக்கிங் விபரம் அமைந்திருக்கின்றது. இந்த பைக்கிற்கு வரும் நாட்களில் இன்னும் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாகவும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் அமைந்திருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2024, 15:58 [IST]
English summary
Revolt rv1 commuter electric bike receives 16000 bookings with in one week
மேலும்... #revolt #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+