பெட்ரோல் பைக்குகளை வாங்கினது போதும்!! எலக்ட்ரிக் பைக்கிற்கு இதை விட சலுகைகள் கிடைக்காது!
ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors) நிறுவனம் அதன் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்குகளுக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பைக்குகளின் விலைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, எவ்வளவு குறைவான விலையில் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கை வாங்கலாம் என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மார்க்கெட் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், எலக்ட்ரிக் பைக்குகளை வாங்குவோர் என்று பார்த்தால் குறைவே. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனையில் இல்லை.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் விலை குறைவான எலக்ட்ரிக் பைக்குகளுள் ஒன்று ரிவோல்ட் ஆர்வி400 ஆகும். ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்கான ஆர்வி400 இந்தியாவில் ஓரளவிற்கு அதிகமாக விற்பனையாகும் எலக்ட்ரிக் பைக்குகளுள் ஒன்றாக உள்ளது. ஆர்வி400 பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஆர்வி400 BRZ என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் பைக்கை ரிவோல்ட் அறிமுகப்படுத்தியது.
ஆர்வி400 பைக்கை காட்டிலும் ஆர்வி400 BRZ பைக் விலை குறைவானதாக அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, ஆர்வி400 எலக்ட்ரிக் பைக் ரூ.1.55 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்த நிலையில், ரூ.1.38 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் ஆர்வி400 BRZ பைக்கை ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.

அதன்பின் ஆர்வி400 BRZ எலக்ட்ரிக் பைக்கின் விலையை கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.10,000 ரிவோல்ட் அதிகரித்தது. இதனால், ரூ.1.48 லட்சம் என்கிற விலையில் இந்த எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆர்வி400 BRZ மற்றும் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளன.
விலை குறைப்பு என்று பார்த்தால், ரூ.5,000 மட்டும்தான். இதன்படி, ஆர்வி400 BRZ பைக்கின் விலை ரூ.1.43 லட்சமாகவும், ஆர்வி400 பைக்கின் விலை ரூ.1.50 லட்சமாகவும் குறைந்துள்ளது. ஆனால் அதேநேரம், இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளுக்கு மே மாதத்தை முன்னிட்டு ரூ.10,000 பணம் தள்ளுபடியை ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சலுகையின் மூலமாக, இன்னும் குறைவாக ரூ.1.33 லட்சத்தில் ஆர்வி400 BRZ பைக்கையும், ரூ.1.40 லட்சத்தில் ஆர்வி400 பைக்கையும் வாங்க முடியும். இவை எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும். அதாவது, ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவை அடங்கிய ஆன்-ரோடு விலை இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
இந்த சலுகைகள் மட்டுமின்றி, பிரத்யேக எக்ஸ்சேஞ்ச் திட்டத்தின் படி ரூ.5,000மும் கூடுதலாக இந்த ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்குகளில் சேமிக்க முடியும். ரிவோல்ட் ஆர்வி400 மற்றும் ஆர்வி400 BRZ என இரு எலக்ட்ரிக் பைக்குகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களே கொடுக்கப்படுகின்றன. இந்த இ-பைக்குகளில் கொடுக்கப்படும் 3.24kWh பேட்டரி பேக்கை சார்ஜ் செய்வதன் மூலம் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு பைக்கை ஓட்டி செல்லலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் பைக்குகளை வாங்கி சலித்தவர்களுக்கு எலக்ட்ரிக் பைக்குகளை வாங்கலாம் என்கிற எண்ணம் தோன்றலாம். அத்தகையவர்களுக்கு ஏற்ற எலக்ட்ரிக் பைக் ரிவோல்ட் ஆர்வி400 ஆகும். விலை குறைப்புகள், சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த எலக்ட்ரிக் பைக்கை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் ஆகும்.


Click it and Unblock the Notifications









